2019 அப்பாச்சி 180, ஸ்டார் சிட்டி, இந்தப் புதிய டிவிஎஸ் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?! | TVS launches Updated Models of their Star & Apache RTR 180 Range!

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (18/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (18/12/2018)

2019 அப்பாச்சி 180, ஸ்டார் சிட்டி, இந்தப் புதிய டிவிஎஸ் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?!

ஸ்டார் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன், ஸ்டார் சிட்டி ப்ளஸ், அப்பாச்சி RTR-ன் 2019-ம் ஆண்டுக்கான மாடல் என 3 பைக்குகளைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ்.

பண்டிகை காலம் என்றாலே வாகன உற்பத்தியாளர்கள் புதிய அல்லது பேஸ்லிஃப்ட் மாடல்களை, விற்பனைக்குக் கொண்டுவருவதை ஒவ்வோர் ஆண்டும் பார்க்கமுடியும். இதில் டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட ஜூபிட்டர் கிராண்டே, விகோ ஸ்போர்ட், XL 100 i-TouchStart ஆகிய கியர்லெஸ் டூ-வீலர்களின் பேஸ்லிஃப்ட் மாடல்களைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன், ஸ்டார் சிட்டி ப்ளஸ், அப்பாச்சி RTR-ன் 2019-ம் ஆண்டுக்கான மாடல் என 3 பைக்குகளைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ். 

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் SBT

 

டிவிஎஸ்

 

52,907 எனும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளிவந்திருக்கும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், சின்னச் சின்ன மாற்றங்களுடன் வந்திருக்கிறது. டூயல் டோன் ரியர் வியூ மிரர்கள், டூயல் டோன் கலர் ஆப்ஷன் (கறுப்பு - கிரே) ஆகியவை வெளிப்புறத்தில் புதிது. கடந்த ஆண்டில்தான் கறுப்பு நிற கிராப் ரெயில், 3D பேட்ஜிங், தங்க நிற அலாய் வீல்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரே மெக்கானிக்கல் மாற்றமாக, Synchronised Braking Technology (SBT) எனும் அம்சம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது நாம் ஏற்கெனவே டிவிஎஸ் ஸ்கூட்டர்களில் பார்த்ததுதான் என்றாலும், பைக்குக்கு ஏற்றபடி இது மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி இன்ஜின் - கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன், சேஸி ஆகியவை அப்படியே தொடர்கின்றன.

டிவிஎஸ் ஸ்டார் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன்

 

TVS

 

தனது 100சிசி கம்யூட்டர் பைக்கான ஸ்டார் ஸ்போர்ட்டில் ஸ்பெஷல் எடிஷன் மாடலை கொண்டுவந்திருக்கிறது டிவிஎஸ். டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 40,088 ரூபாய்க்குக் கிடைக்கும் இதில், புதிய கிராஃபிக்ஸ் மற்றும் ரியர் வியூ மிரர்கள் - 3D பேட்ஜிங் - Synchronised Braking Technology (SBT) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி 100சிசி Duralife இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், அலுமினிய கிராப் ரெயில், அனைத்து கியரிலும் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்டார்ட், அலாய் வீல்கள், க்ரோம் Muffler Guard என வசதிகளில் எந்த வித்தியாசமும் இல்லை. கறுப்பு நிறம் - சிவப்பு & சில்வர், கறுப்பு - நீலம் & சில்வர் என கலர் - கிராபிக்ஸ் ஆப்ஷன்களும் அதேதான்! இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பைக்குகள் விற்பனையாகியுள்ளது.  

டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 சீரிஸ்

 

Apache Series

 

கடந்த மே மாதத்தில் வெளியான ரேஸ் எடிஷன் மாடலைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டுக்கான அப்பாச்சி RTR 180 சீரிஸ் பைக்குகளைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ். 84,578 ரூபாய் (Non ABS) - 95,392 ரூபாய் (ABS) கிடைக்கும் இந்த பைக்கின் தோற்றத்தில் குட்டிக் குட்டி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. Frame Sliders உடனான க்ராஷ் கார்டு, ரேஸ் கிராஃபிக்ஸ், Forged ஹேண்டில்பார் End Weights, Alcantara ஃப்னிஷுடன் கூடிய சீட்கள், வெள்ளை நிற பேக்லிட் கொண்ட Dial - Art அனலாக் டிஜிட்டல் மீட்டர் ஆகியவை இதற்கான உதாரணம். மற்றபடி 177.8சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக் செட்-அப், சஸ்பென்ஷன் மற்றும் டயர்கள், டபுள் க்ரேடில் ஃப்ரேம் ஆகியவை எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்