மோட்டார் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்! | Things to be noted before your Motor Insurance renewal

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (18/12/2018)

கடைசி தொடர்பு:14:05 (18/12/2018)

மோட்டார் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

மோட்டார் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

புது ஆண்டு வரப்போகிறது. கார், பைக் வைத்திருப்பவர்கள் பலருக்கும் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் நேரம் வந்திருக்கும். மோட்டார் இன்ஷூரன்ஸ் விலை ஏற்றம், கட்டாயமாக்கப்பட்ட மூன்றாம் நபர் காப்பீடு (TP Insurance), விலை ஏற்றப்பட்ட Personal Accidental இன்ஷூரன்ஸ் என இந்த ஆண்டு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் குழப்பங்களும் அதிகமாகவே உள்ளன. சமீபத்தில் பாலிசி பஜார் நிறுவனத்தின் மோட்டார் இன்ஷூரன்ஸ் துறைத் தலைவர் சஜ்ஜா ப்ரவீனைச் சந்தித்திருந்தோம். இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும்போது எதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு அவர் அளித்த சில பதில்கள் இவை.

மோட்டார் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டியவை?

உங்களுடைய தேவையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு வருடம் பழைய கார் என்றால் 6 லட்ச ரூபாய் காருக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் IDV இருக்க வேண்டும் அப்போதுதான் உங்கள் கார் திருடு போனாலோ அல்லது விபத்தில் பாதித்தாலோ, சரியான தொகை கிடைக்கும். சிலர் பிரீமியத்தைக் குறைத்துத் தருகிறேன் என்று சொல்லி IDV-யில் கைவைத்து விடுவார்கள். க்ளெய்ம் இல்லையென்றாலும், IDV குறைவாக இருந்தால், காரின் ரீசேல் வேல்யூ குறைந்துவிடும்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்

எந்த நிறுவனத்தின் பாலிசியை வாங்குவது என்று குழப்பம் வரும்போது, க்ளெய்ம் கவரேஜை முதலில் பார்க்க வேண்டும். க்ளெயிம் தருவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள்; உங்கள் பகுதியில் எத்தனை சர்வீஸ் சென்டர்கள்; அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் யார் கூட்டு வைத்துள்ளார்கள். அதில் எத்தனை கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இருக்கின்றன? என்பதெல்லாம் முக்கியம். கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இல்லையென்றால், பணம் கொடுத்து காரை சரிசெய்துவிட்டு, தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் நிலை வரும். எல்லாமே சாதகமாகப் பொருந்திவருகிறது. ஆனால், இரண்டு நிறுவனங்கள் வேறுவேறு விலையில் தருகிறார்கள் என்றால், எந்த நிறுவனம் அதிக க்ளெய்ம் தந்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள். விலை கடைசியாகப் பார்க்க வேண்டிய விஷயம்.
 
இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும்போது விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்குமா?

புதிய வாகனங்களுக்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு third party insurance கட்டாயம் என்று சட்டம் வந்துள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு 2 லட்சத்திலிருந்து 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது TP உடன் சேர்ந்தே வருவதால் 100 ரூபாய் என்று இருந்த இதன் விலை இப்போது 750 ரூபாயாக மாறியுள்ளது. ஆனால், 10 வாகனம் வைத்திருப்பவர் ஒரு வாகனத்துக்கு மட்டும் இனி விபத்துக் காப்பீடு எடுத்தால் போதும் என்பதால் டிராவல்ஸ் வைத்திருப்பவர்களுக்கு விலை குறையும்.

இன்ஃபோகிராஃப்

ந்த ஆண்டு ப்ரீமியம் விலைகளும் மாறியுள்ளதால் நிச்சயம் கடந்த ஆண்டை விட நிச்சயம் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

3 ஆண்டு Third party insurance மட்டும் போதாதா, own damage insurance ஏன் புதுப்பிக்க வேண்டும்?

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி TP மட்டும்தான் கட்டாயம்.  உங்களால் சேதமடையும் பொருள்களுக்கும், நபர்களுக்கும் இழப்பீடு கொடுப்பதுதான் TP இன்ஷூரன்ஸ். உங்கள் வாகனத்துக்கு ஆன சேதத்தைச் சரிசெய்வது OD இன்ஷூரன்ஸ். மூன்று ஆண்டு TP வைத்திருந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்க OD இன்ஷூரன்ஸ் புதுப்பிப்பது பாதுகாப்பானது.

இன்ஃபோகிராஃப்

கார் ஷோரூமில் இன்ஷூரன்ஸ் வாங்கவில்லை என்றால் கேஷ்லெஸ் க்ளெய்ம் கிடையாதா?

``எங்களிடம் இன்ஷூரன்ஸ் வாங்கவில்லை என்றால் கேஷ்லெஸ் க்ளெய்ம் இல்லை" என்று யாருமே சொல்ல முடியாது. எந்த பிராண்டாக இருந்தாலும், எந்த ஊராக இருந்தாலும், எந்த நிறுவன இன்ஷூரன்ஸ் வைத்திருந்தாலும் அவர்களுக்கு கேஷ்லெஸ் க்ளெய்ம் கொடுத்தாக வேண்டும்.

இணையதளங்களில் இன்ஷூரன்ஸ் வாங்குவது நல்லதா? 

இணையதளத்தில் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது உங்கள் காரின் பராமரிப்பு, நீங்கள் வசிக்கும் இடம், நீங்கள் புதுப்பிக்கும் தேதி, காரின் வயது, எதிர்பார்க்கும் IDV, போன்ற பல விஷயங்களை வைத்து உங்களுக்கான பிரீமியம் முடிவு செய்யப்படும். ஒரு ஏஜென்டிடம் Sajja Praveenவாங்குகிறோம் என்றால், அவரிடம் இருக்கும் 4 பாலிசிகளில் ஒன்றைத்தான் தேர்வு செய்யவேண்டும். ஆனால், இணையத்தில் எல்லா நிறுவனங்களின் பாலிசிகளும் அதன் சாதகபாதகங்களும் காட்டப்படும் என்பதால், நமக்குத் தேவையான இன்ஸூரன்ஸை நாமே தேர்ந்தெடுக்கலாம். வெளியில் கிடைப்பதைவிட 50 சதவிகிதம்வரை விலை குறைவான பாலிசிகள் இங்குக் கிடைக்கும். 

பெட்ரோல் பங்கில் கொடுப்பதுபோல இன்ஷூரன்ஸ் வாங்கும்போது 10 சதவிகித கமிஷன் தொகை கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தேவையான பாலிஸியையும் ஆட்-ஆன்களையும் நீங்களே பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்