வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (20/12/2018)

புத்தாண்டு முதல் கார்களின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?!

லாஜிஸ்டிக்ஸ் & விநியோகஸ்தர்களின் கட்டணம், மூலப்பொருள்களின் விலை, பொருளாதார நெருக்கடி, உற்பத்தி & ஏற்றுமதிச் செலவுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டியே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விலை ஏற்றம் இருந்திருக்கிறது.

பொதுவாக ஆண்டு இறுதியில் வாகனங்களின் விற்பனை, வழக்கத்தைவிட கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். இதனால் கார் தயாரிப்பாளர்கள் தள்ளுபடிகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தொடர்ச்சியாக நடந்துவருகிறது. ஆனால் புத்தாண்டு பிறந்த பிறகு, தள்ளுபடிகளை வழங்கிய அதே கார் தயாரிப்பாளர்கள் தமது கார்களின் விலையை இரண்டு முதல் நான்கு சதவிகிதம் வரை  உயர்த்துவதும் வாடிக்கையான நிகழ்வுதான். இதில் ஒருசிலர், பொங்கல் வரை தள்ளுபடிகளை வழங்குவதைப் பார்க்க முடியும். லாஜிஸ்டிக்ஸ் & விநியோகஸ்தர்களின் கட்டணம், மூலப்பொருள்களின் விலை, பொருளாதார நெருக்கடி, உற்பத்தி & ஏற்றுமதிச் செலவுகள் போன்றவற்றை காரணம் காட்டியே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விலை ஏற்றம் இருந்திருக்கிறது. இந்த முறை எந்தந்த கார்களின் விலை, எவ்வளவு உயரப்போகிறது?

டாடா மோட்டார்ஸ்

புத்தாண்டு

இந்த ஆண்டில் டியாகோ NRG மற்றும் XZ+, டிகோர் பேஸ்லிஃப்ட், நெக்ஸான் AMT, ஹெக்ஸா XM+, JTP மாடல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, பரபரப்பாகச் செயல்பட்ட டாடா மோட்டார்ஸ், அடுத்த ஆண்டில் ப்ரீமியம் எஸ்யூவியான ஹேரியர், 45X ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆகிய கார்களைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது. அதேபோல இண்டிகா மற்றும் இண்டிகோ eCS கார்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுவிட்டது. தமது கார்களின் விலை, மாடலைப் பொறுத்து  40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.   

ஸ்கோடா ஆட்டோ இந்தியா

New Year 2019

தான் தயாரிக்கும் அனைத்து கார்களின் விலையையும் இரண்டு சதவிகிதம் உயர்த்த இருக்கிறது, Czech நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா. அதற்கான தீர்வாக `Buy Now Pay in 2020’ எனும் திட்டத்தை அந்த நிறுவனம் கொண்டுவந்திருக்கிறது. இதன்படி 2019-ம் ஆண்டில் EMI வாயிலாக ஸ்கோடா கார் வாங்குபவர்கள், 2020-ம் ஆண்டு முதலாக மாதத்தவணையைக் கட்டினால் போதும். இந்த ஆண்டில் ரேபிட்டில் பல ஸ்பெஷல் எடிஷன்கள், கோடியாக் L&K, சூப்பர்ப் Sportline ஆகிய வேரியன்ட்களை வெளியிட்ட ஸ்கோடா, தனது `India 2.0’ கோட்பாடுகளின்படி MQB-A0 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட நான்கு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக, ஸ்கோடா எஸ்யூவி 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.

 இசுஸூ மோட்டார்ஸ் இந்தியா

New Year 2019

கமர்ஷியல் வாகனங்களான D-MAX Regular Cab மற்றும் D-MAX S-CAB ஆகியவற்றின் விலையை 1-2 சதவிகிதமும், MU-X எஸ்யூவி மற்றும் D-MAX V-Cross ஆகியவற்றின் விலையை 3-4 சதவிகிதமும் ஏற்ற இருக்கிறது, ஜப்பானிய நிறுவனமான இசுஸூ. அதன்படி 15 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மாடலை பொறுத்து விலை உயர்வு இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில் MU-X எஸ்யூவி மற்றும் D-MAX V-Cross ஆகியவற்றின் பேஸ்லிஃப்ட் மாடல்களை இந்தியாவில் இசுஸூ அறிமுகப்படுத்தியுள்ளது. 

டொயோட்டா இந்தியா

New Year 2019

Innova Crysta, Fortuner, Corolla Altis, Yaris, Etios, Etios Liva, Camry, Land Cruiser, Prado, Prius என, தான் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களின் விலையை நான்கு சதவிகிதம் வரை ஏற்ற இருக்கிறது, ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா. இந்த ஆண்டில் யாரிஸ் செடானை மட்டும், இந்தியாவின் மாஸ் மார்க்கெட் கார் பிரிவில் களமிறக்கிய இந்த நிறுவனம், ப்ரீமியம் செக்மென்ட்டில் லெக்ஸஸ் நிறுவனத்தின் ES300h, LX 570, LS 500h, NX300h மாடல்களை இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டில் புதிய கேம்ரி, கரோலா ஆகியவை வெளிவரலாம்.

பிஎம்டபிள்யூ இந்தியா 

New Year 2019

இந்தியாவில் புத்தாண்டு முதலாக கார்களின் விலை உயரப்போகிறது என்ற முதல் அறிவிப்பு, ஜெர்மானிய நிறுவனமான பிஎம்டபிள்யூ இடமிருந்துதான் வந்தது. இந்தியாவில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் மாடல்களின் விலை நான்கு சதவிகிதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டில் புதிய X3, BS-6 பெட்ரோல் இன்ஜின் கொண்ட X1, 6-சீரிஸ் GT, M2 Competition ஆகிய கார்களை இந்தியாவில் களமிறக்கிய பிஎம்டபிள்யூ, அடுத்த ஆண்டில் புதிய 3-சீரிஸ் மற்றும் X5 கார்களை வெளியிடும் முடிவில் இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஜனவரி - செப்டம்பர் 2018 வரையிலான விற்பனையில் 11 சதவிகிதம் வளர்ச்சியை, இந்த நிறுவனம் இந்தியாவில் அடைந்திருக்கிறது. 

மஹிந்திரா & மஹிந்திரா

New Year 2019

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் களமிறங்கிய மராத்ஸோவின் விலையை, 30-40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க இருக்கிறது மஹிந்திரா. 9.99 - 13.90 லட்சம் எனும் அறிமுக விலையில் கார் வந்தபோதே இந்த விலை ஏற்றம் எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்த ஆண்டில் மராத்ஸோ தவிர்த்து ஆல்ட்டுராஸ், TUV 3OO ப்ளஸ் ஆகிய கார்களை வெளியிட்ட இந்த நிறுவனம், அடுத்த ஆண்டில் XUV 3OO காரை பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் கார்களின் எலெக்ட்ரிக் மாடல்களையும் எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்