Published:Updated:

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!
மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

இந்த இதழ் ஆனந்த விகடன்: https://bit.ly/2RbNe44

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

பா.ஜ.க தோல்வியடைந்திருப்பது உண்மைதான் என்றாலும், சத்தீஸ்கர் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸால் அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நிஜமாகவே காங்கிரஸ் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதா என்பதும் ஆராயப்படவேண்டிய கேள்வி... பா.ஜ.க மீதான அதிருப்தி பரவத்தொடங்கியிருப்பது உண்மைதான் என்றாலும், அது காங்கிரஸ் ஆதரவு அலையாக மாறவில்லை என்பதையே ஐந்து மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இப்போதும் பா.ஜ.க-வுக்கு வாக்கு வங்கியில் பெரிய அளவில் சரிவு இல்லை என்பதையே காண்பிக்கின்றன...

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

2014 தேர்தலைப்போல இந்தமுறை பா.ஜ.க-வினால் எளிதாக வெற்றிபெற முடியாது. அதுபோல, காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் இப்போது இல்லை... - இந்தச் சூழலில் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்திகளை கோடிட்டுக் காட்டுகிறது 'நாற்காலி யாருக்கு? - நாடாளுமன்றத் தேர்தல் - 2019' அலசல்

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

``பள்ளி மாணவர்களிடமே சாதிவெறி வேரூன்றியிருக்கிறது. பள்ளிகளிலேயே சாதிப் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் களைய வேண்டிய அமைச்சர் நீங்களே, சாதியை ஆதரித்துப் பேசுவது அநீதி இல்லையா?''

``அப்படியில்லை... `என்னுடைய சாதியைவிடவும் மற்ற சாதிகள் கீழானவை' என்ற எண்ணத்துடன் மற்றவர்களை எதிரியாக எண்ணுவதும், அவர்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவதும்தான் சாதிவெறி! அதேபோல், `என் சாதிக்காக மட்டும்தான் செயல்படுவேன்' என்று சுயநலமாகச் செயல்படுவதும்கூட சாதிவெறியின் ஓர் அங்கம்தான். இதன் உச்சகட்ட அடையாளம்தான் ஆணவப் படுகொலைகள்! சாதி ஒழிப்பு பற்றிப் பேசுகிறவர்களேகூட தங்களது சுய சாதியை வெளியில் சொல்ல வேண்டிய நேரங்களில், ஒருவிதக் கூச்சத்தோடு, சொல்லத் தயங்குகிறார்கள். அது தேவையற்ற தயக்கம் என்று நான் கருதுகிறேன். சாதிப்பற்று என்பதே, பாரம்பர்யப் பெருமைகள் சார்ந்த தன் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, மற்ற சமுதாயங்களின் நலன்களுக்கும் உதவ வேண்டும் என்பதுதான்!''

- 'ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே விசேஷ மரபணு இருக்கிறது' என்று பேசி அடுத்த சர்ச்சைக்குத் திரி கிள்ளியிருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் விரிவான நேர்காணல் இது. சேக்கிழார், சோப்பு நுரை, தெர்மாகோல்... என மரண மாஸ் காட்டிவரும் அ.தி.மு.க அட்ராசிட்டிகளில், 'மரபணு ரகசியம்' பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலோடு அமைச்சரைச் சந்தித்தபோது வேறு பல தகவல்களும் கிட்டின. 'மாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு!' எனும் அவரது நேர்காணலைத் தவறவிடாதீர்கள்.

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

``இதே படத்தை இந்தியிலும் இயக்குகிறீர்கள். தமிழில் நயன்தாரா, இந்தியில் தமன்னா ஏன்?"

``இந்தப் படத்தின் கதைக்களம்தான் காரணம். தமிழில் திரைக்கதை, வசனம் வேறு, இந்தியில் அந்த மக்களுக்கு ஏற்றமாதிரி உருவாக்கியிருக்கிறேன். இரண்டு படங்களும் வெளியாகும்போதுதான் ஏன் இப்படி என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இந்தியில் தமன்னாவுடன் பிரபுதேவாவும் நடித்திருக்கிறார்."

- கமலுடன்  `உன்னைப்போல் ஒருவன்', அஜித்துடன் `பில்லா -2' என அடுத்தடுத்து படங்கள் இயக்கியவர் சக்ரி டோலட்டி. நடுவில் சில ஆண்டுகள் பாலிவுட் சென்றவர், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். நயன்தாராவோடு `கொலையுதிர் காலம்' எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது 'வீரமான... விவேகமான... நயன்தாரா..!' பேட்டி சொல்லும் தகவல்கள் ஏராளம். 

விறுவிறுப்பைக் குறைக்கும் பாடல்காட்சிகள் இல்லாதது ப்ளஸ். ஆனால், வரிசையாக வரும் பிளாஷ்பேக்குகள் அந்த வேலையைச் செய்துவிடுகின்றன. மிக எளிதாக யூகித்து விடக்கூடிய கதையின் போக்கு படத்தின் பெரிய மைனஸ்... - விகடன் விமர்சனக் குழுவின் 'துப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்' நறுக் ரகம்.

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

அந்தப்பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. 'இன்னும் சில தினங்களில் பிரசவம்' என்று மருத்துவர்கள் தேதி குறித்துவிட்டனர். விடுப்பு சொல்ல அலுவலகம் சென்றார். அலுவலகத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென மயங்கிக் கீழே சரிந்தார். எல்லோருமே பதற்றமடைந்தனர். மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். 

இந்த இதழ் ஆனந்த விகடன்: https://bit.ly/2RbNe44

'மைல்டு ஹார்ட் அட்டாக்' என்றார் மருத்துவர். சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். தாய், சேய் இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்க, இப்போது இருவரும் நலம். இதுகுறித்துக் கேள்விப்பட்டு `கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுமா?' என்ற வினாவோடு மருத்துவர்களை அணுகினோம். 'இதுபோன்ற நோயாளிகளை இப்போதெல்லாம் அதிகம் பார்க்கிறோம்' என்றார்கள். உலக அளவில் பல நாடுகளிலும் கர்ப்ப கால மாரடைப்புகள் ஏற்படுவது அதிகரித்துவருகிறது என்றார்கள். - இதையொட்டிய முழுமையான ஹெல்த் விழிப்பு உணர்வு வழங்குகிறது 'கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...' எனும் சிறப்புக் கட்டுரை.

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

``விஜய், அஜித்... ரெண்டுபேர்கிட்டேயும் உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன?" 

``ரெண்டுபேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன ஆர்ட்டிஸ்ட். ஆனா, ரெண்டுபேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வெச்சு அழகு பார்த்தாங்க. அது எனக்கு பெரிய ஆச்சர்யம். விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்ச்சு ஏதாச்சும் வசனம் பேசுனா, அதை மனசார ஏத்துக்கிட்டு சிரிக்கிறார். 'விஸ்வாசம்' படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்ச்சு ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட 'அண்ணே... பேசட்டுமா?'ன்னு தயங்கிக்கேட்டேன். அதுக்கு, 'என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க... இது உங்க வேலை. பேசுங்க'ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்குத் தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு. இவங்க ரெண்டுபேரும் அவங்க படத்துல எனக்கும் ஸ்பேஸ் கொடுத்திருக்காங்க. எல்லா ஹீரோக்களும் இப்படி இருப்பாங்களான்னு தெரியலை."

- அன்னைக்கு இப்படி `லொள்ளு சபா'வுல என்ட்ரி ஆன நான்தான், இன்னைக்குத் தல - தளபதியோடு சேர்ந்து லொள்ளு பண்ணிக்கிட்டிருக்கேன்'' என யோகி பாபு கலகலப்பான ரீவைண்ட் கொடுக்கிறார், 'கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!' எனும் பேட்டியில்!

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

கார்ட்டூன் படம்தானே என அலட்சியமாகச் சென்றால் " `ஸ்பைடர்மேன்' படங்களில் இதுதான் சிறந்த படமோ?" என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விருந்து வைத்து அனுப்புகிறார்கள்...

ஆழ்கடல் அதிசயங்கள், வித்தியாசமான உயிரினங்கள் எனக் கடலுக்கு அடியில் நிகழும்  ஒவ்வொரு  ஃப்ரேமையும் அழகாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டான் பர்கெஸ்... 

Spider-Man: Into the Spider-Verse மற்றும் Aquaman படங்களை அலசுகிறது 'மரண மாஸ் ஸ்பைடர்மேன்... தூக்குதுரை அக்வாமேன்... - யார் பெஸ்டு?' சிறப்புப் பார்வை.

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

``பிரமாண்டமான தமிழ்த் திரைப்பட உலகிலிருந்து ஈழப்போர் குறித்து படங்கள் வரவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால், அப்படிப் படம் எடுப்பதில் உள்ள சிக்கல் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு பெரும்பாலான படங்கள் வியாபார நோக்கத்தில் எடுக்கப்படுபவை.  போர் குறித்த படங்கள் வருமானம் ஈட்டித் தருவதற்கான வாய்ப்பு குறைவுதான். அரசியல் ரீதியாகவும் அழுத்தங்கள் இருக்கும். ஆனால், நாங்கள் 1960-களிலிருந்தே மாற்று சினிமாக்களைக் கொண்டு வர முயன்றுவருகிறோம். ஆனால், எங்களுக்கான வாய்ப்புகள் தாமதமாகவே கிடைத்தன. எனது '1999' படம் ஈழத்து சினிமாக்களில் திரைப்படவிழாக்களில் கலந்துகொண்ட முதல் திரைப்படம். 2010-க்குப் பிறகுதான் ஈழத்து சினிமாக்கள் காத்திரமாக வரத் தொடங்கியிருக்கின்றன. தற்போது கோடம்பாக்கத்திலிருந்து வரும் படங்களைவிட, அதிகமாக எங்கள் படங்கள் திரைப்பட விழாக்களுக்குச் செல்கின்றன. எங்கள் திரைப்படங்களின் வீச்சு அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன். எங்கள் மக்களிடமும் எங்கள் படைப்புகளுக்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள்..."

- லெனின் எம்.சிவம் திரைப்பட இயக்குநர். கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர். ஈழ சினிமாவின் நம்பிக்கையான திரைமுகம். அவரது சமீபத்திய படமான 'ரூபா' கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. 'ஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது!' எனும் அவர் உடனான பேட்டியில் சினிமா, போர், காதல், ஈழ இலக்கியம் என பலவற்றையும் பகிர்ந்துள்ளார்.

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

Byju's என்பது இந்தியாவின் மிக முக்கியமான, மிகப்பெரிய கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப். Fall in love with learning (கற்றலைக் காதலிப்போம்) என்பதுதான் அவர்கள் டேக்லைன். இன்றைய தேதியில் அவர்களின் மதிப்பு 2 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாகக் கணிக்கப்படுகிறது. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 15,000 கோடி...

கைப்பேசிகள் உலகை ஆக்ரமித்துவிட்டதை உணர்ந்தவர் 2015-ல் `பைஜூஸ்' செயலியை உருவாக்கினார். அதே கான்செப்ட்தான். ஆப் இலவசம்; அதன்பின் வகுப்புகளைக் காண, பணம் கட்ட வேண்டும்... BYJU'S THE LEARNING APP கடந்து வந்த பாதை குறித்து விவரிக்கிறது 'கேம் சேஞ்சர்ஸ்' தொடர்.

மோடி வீழ்ச்சி to யோகி பாபு எழுச்சி - 4 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

திருச்சி அரசு கேட்டரிங் கல்லூரியில் படித்துவிட்டு, கப்பல்களிலும் துபாய் ஹைதராபாதி உணவகத்திலும் கார்ப்பரேட் செஃப்பாகப் பணியாற்றிய பேச்சிமுத்து, தன் ஊர் மக்களுக்கு நல்லுணவு தரவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியிருக்கும் உணவகம்.  பிரியாணி தவிர மற்ற எல்லா உணவுகளையும் மண்பாண்டத்தில் தான் சமைக்கிறார். பரிமாறுவதும் அழகிய மண்பாண்டங்களில். -  ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை சாலையில்  இருக்கும் 'ஹாட் பாட்' உணவகம் குறித்த சுவையான அனுபவத்தைத் தருகிறது 'சோறு முக்கியம் பாஸ்!' தொடர் பகுதி. 

இந்த வார ஆனந்த  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2EBv2eg