வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (20/12/2018)

கடைசி தொடர்பு:15:33 (20/12/2018)

நீங்க NEET தேர்வுக்குத் தயாரா இருக்கீங்களா?

வக்கீலிடமும், மருத்துவரிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இரண்டு சேவையையும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். அதிலும் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராகவே பார்க்கின்றோம். அதனாலேயே பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவப் படிப்பில் சேர்க்க ஆசைப்படுகின்றனர். பெற்றோரையும் தாண்டி மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுக்க தங்களது கடின உழைப்பைக் காட்டுகின்றனர். ஆனால் சிறந்த மதிப்பெண் எடுத்தாலும், 'NEET' தேர்வில் அவர்களால் வெற்றி காண முடிவதில்லை என்பது துரதிஷ்டமாக அமைகிறது.

மருத்துவப் படிப்பிற்கு அடுத்ததாக வருகிற மே மாதம் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு சரியான கோச்சிங் தேவையாக உள்ளது. நீட் கோச்சிங்கிற்கு பல இடங்கள் இருந்தாலும், மாணவர்களுக்காக பயிற்சியை ஒரு எளிய முறையில் தருகிறது 'Entrance 360'. முற்றிலும் ஆன்லைனில் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு மிகவும் தெளிவாகவும், எளிதாகவும் Entrance 360 தருகின்றது. 

Entrance 360:
 
'Entrance 360' இணையதளத்தில் பயிற்சி எடுக்க நினைக்கும் மாணவர்களுக்கு பிரபலமான ஆசிரியர்கள் பயிற்சிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். 250 நேரமும் Entrance 360 இணையதளத்தில் வீடியோ மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தனியாக செஷன்கள் வைக்கப்படுகிறது. வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் உங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையிலும் அவர்களிடம் மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்டுப் பயன் அடையலாம். இது ஆன்லைன் வசதி என்பதால், அன்றாடம் பாடத்திட்டத்தைப் பெறுவதற்கான நேரத்தை மாணவர்களே தேர்வு செய்யலாம். இதனால் அவர்கள் விரும்பும் நேரத்தில் பயிற்சியை எடுத்துக்கொள்ள முடியும்.  

பயிற்சி எடுக்கும் மாணவர்கள் இணையத்திலேயே தேர்வு எழுதலாம். எத்தனை முறை தேர்வு எழுதினாலும், மாணவர்களுக்கு திருத்தம் செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும். எந்த பாடத்தில் ஒரு மாணவர் வலிமையாகவும், பலவீனமாகவும் இருக்கிறார் என்பதை Entrance 360 கணிக்கிறது (Rank Predictor). அதனால், மாணவர்களும் தாங்கள் பலவீனமாக இருக்கும் பாடத்தில் கூடுதல் பயிற்சியை எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட Rank Predictor உதவியாக அமைகிறது. 

Entrance 360-ல் மொத்தம் இரண்டு வகை.... ஒன்று கம்ப்ளீட் கோர்ஸ் பேக்கேஜ் மற்றொன்று கம்ப்ளீட் டெஸ்ட் சீரிஸ். மாணவர்கள் நீட் பயிற்சி, தேர்வு ஆகிய இரண்டும் தேவை என்றால் கம்ப்ளீட் கோர்ஸ் பேக்கேஜை தேர்வு செய்துக்கொள்ளலாம். இல்லை Entrance 360-ல் டெஸ்ட் மட்டும் எடுத்துக்கொள்கிறேன் என்று விரும்பும் மாணவர்கள் கம்ப்ளீட் டெஸ்ட் சீரிஸை தேர்வு செய்யலாம். இன்னும் நீட் பயிற்சியை ஆரம்பிக்காத மாணவர்கள், இப்போது ஆரம்பித்தால் கூட நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேரலாம். தினமும் Entrance 360-ல் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்தாலே மாணவர்கள், மே மாதம் நடக்க இருக்கும் நீட் தேர்வில் வெற்றிக் காணலாம். அதே நேரம், மே மாதம் வரை வாரத்திற்கு ஒருமுறை மாணவர்கள் தேர்வு எழுதுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க