வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (21/12/2018)

கடைசி தொடர்பு:15:08 (21/12/2018)

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

``இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?’’ - பிரபஞ்சன் 

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர் பிரபஞ்சன். தனது எழுத்துகள் மூலம் தனக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை, நாடகங்கள் என மனித வாழ்வின் உன்னதங்களை, தரிசனங்களைத் தனது எழுத்துகளாக்கியவர்.

பிரபஞ்சன்

அவரது 'வானம் வசப்படும்' நாவலுக்காக 1995-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபஞ்சன் சென்னையில் தன் வாழ்வின் வெகுநாள்களைக் கழித்தவர்.

பிரபஞ்சன்

உடல்நிலைக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு, உடல் நிலை தேறி வீட்டுக்கு வந்தவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படவே மீண்டும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உயிர் இன்று பிரிந்தது. தமிழ் எழுத்துலகுக்கு மிகப் பெரிய இழப்பு. போய்வாருங்கள் பிரபஞ்சன்.