முகம் நிறைய புன்னகையோடும் அன்போடும் நம்மை வரவேற்றார் முரளி மகாதேவன். சமீபத்தில் வாங்கிவந்த டாக்டர் பட்டம், சிறந்த பிராண்டுக்கான விருது, சிறந்த லீடருக்கான விருது என அந்த அறை முழுவதும் விருதுகள். சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இன்றைய வளர்ச்சிக்கான காரணத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்...

``ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸோட அஸ்திவாரம் என்ன?''

“1948-ல் என் அப்பா மகாதேவ ஐயர், கோவை பெரிய கடை வீதியில், ‘ஸ்ரீ கிருஷ்ணா பவன்’ என்ற பெயரில் ஓர் உணவகத்தைத் திறந்தார். அந்தக் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஏமாந்து வருவாங்கனு `சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை'னு எழுதி, பக்கத்துல சின்னதா ‘அல்ல’னு எழுதியிருப்பாங்க. ஆனா, அப்பா எப்பவுமே வாடிக்கையாளர்களை ஏமாற்றவோ முகம் சுளிக்க வைக்கவோ கூடாதுங்கறதுல உறுதியா இருந்தார். அதனால், ஸ்ரீ கிருஷ்ணா பவன்ல ‘சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை'னு மட்டும் போர்டு வைத்தார். நம்பிக்கைதான் மூலதனம் அப்டிங்கறதுக்கான பாடம் அது.

இனிப்புகளுக்குன்னு பிரத்யேகமான கடைகள் அப்போது இல்லை. ஹோட்டலிலேயே ஒரு சின்ன கவுன்ட்டரில் இனிப்பு, பலகாரங்கள் விற்றுக்கொண்டிருப்பார். `கிருஷ்ணா’ என்ற பெயர் எங்க அப்பாவுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அதனால், தான் ஆரம்பித்த அனைத்துத் தொழில்களையும் கிருஷ்ணா என்கிற பெயரிலேயே ஆரம்பித்தார்.

ஒவ்வொரு முறை பலகாரம் செய்ய `அடுப்பு பூஜை’ போடப்படும்போதும் ஆத்மார்த்தமாக அப்பா வணங்கி வேண்டிக்கொள்வதை நான் பார்த்திருக்கேன். இன்னைக்கும் எங்க ஃபேக்டரில ஊழியர்கள் அத்தனை பேரும் அந்த பூஜையின்போது அதைப் பின்பற்றுகிறார்கள்.

1996-ம் வருஷம் `நான் நம்ம தொழிலை சென்னைக்குக் கொண்டுபோகப்போறேன்'னு எங்க அப்பாகிட்ட சொன்னேன். அப்ப எங்க அப்பா சொன்னார், `சுத்தமா இரு. சரியா... புரிஞ்சதுல்ல?'

அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்! இன்னைக்கு எங்க கடையின் சுத்தம், எங்களோட மனத்தின் சுத்தம்னு எல்லாமே அந்த வார்த்தைல இருந்து வந்ததுதான். மேனேஜ்மென்ட் என்ற படிப்பெல்லாமே பிறகு வந்தவைதான். அவர் செய்த ஒவ்வொன்றுமே மேனேஜ்மென்ட் பாடம்தான்.''

``இனிப்புகள்ல மைசூர்பாவை மட்டும் ஸ்பெஷலா முன்னிறுத்துறது எப்படி நடந்தது?''

``ஹோட்டல் என்பது ஒரு தொழில் என்றால், அதில் இனிப்பு ஒரு பிரிவு. இனிப்பு ஒரு பிரிவென்றால், அதில் மைசூர்பா என்பது ஒரே ஒரு பகுதிதான். `கூட்டத்தில் ஒருத்தனா’ இருந்த மைசூர்பாவை, `தனி ஒருவனா’ மாற்ற நினைச்சு மாத்தினார்.

மைசூர்பான்னா ஒரு கடினத்தன்மையும் இருக்கும். அதை மட்டும் அதுல இருந்து எடுத்தா நைஸா இருக்கும்னு யோசிச்சு, அதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணினார். அப்பவே எங்க மைசூர்பாவுக்குத் தனி ரசிகர் படை உருவாகிடுச்சு.''

``கோவையிலிருந்து சென்னை வந்து ஆரம்பித்தபோது உங்கள் திட்டம் என்னவா இருந்தது?''

“அப்பா இருக்கார் என்கிற உந்துதலோடுதான் சென்னை வந்தேன். எல்லாத்துக்கும் அவர் கூட இருந்தார்; இருக்கிறார். பாண்டிபஜார்ல ஐந்து அடுப்புகளுடனும் 15 ஊழியர்களுடனும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆரம்பிச்சோம். தரத்துக்கு முதலிடம் அப்படிங்கறதுல எப்பவுமே சமசரம் இல்லை. ஆரம்பத்துல நிறைய கிளைகள் ஆரம்பிக்கணும்னு எந்தத் திட்டமும் இல்லை.

வீட்லயும் தோசை கிடைக்குது; கடைலயும் கிடைக்குது. ஆனா, வீட்டுல தோசை சாப்பிடறதுல ஏன் ஆர்வமா இருக்கோம்? சொல்லப்போனா, கடைகள்லகூட இப்ப ‘வீட்டுதோசை இருக்கா?’னு கேட்கறாங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? வீட்டுல சுடற தோசைல இருக்கிற அன்பு, அக்கறை... அதான். இதையெல்லாம் உணர்ந்து எங்கள் கடைகளில் அன்பும் அக்கறையும் கலந்த சேவை இருக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். வாயிலில் வணக்கம் சொல்லி வரவேற்கும் நபர் முதல் அனைவரும் புன்னகையோடு வாடிக்கையாளர்களை எதிர்கொள்வதிலிருந்து எல்லாமும் வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவோடு இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதைச் செயல்படுத்தியும் வருகிறோம்.”

``இனிப்பு பிசினஸ்ங்கறது எந்த விதத்துல மற்ற தொழில்களிலிருந்து வேறுபடுது?’’

“நாங்க விற்கிறது ஸ்வீட்ஸ். ஸ்வீட்ஸ் எந்தெந்தத் தருணங்கள்ல வாங்குவாங்க?

பண்டிகைகள்னு சொல்லலாம். குறிப்பா சொல்லணும்னா சந்தோஷமான தருணங்களில் தானே. ஏன்னா, எப்பவும் நம்மோட மகிழ்ச்சியான தருணத்துல நமக்கு நெருங்கினவங்க இருக்கணும்னு நினைப்போம். நம்ம ஸ்வீட்டை ஒரு பொருளா பார்க்காம, அப்படியான ஒரு நெருக்கமான நபரா வாடிக்கையாளர் பாக்கணும்னு நெனைச்சேன். அதனால், இனிப்புன்னாலே நாலு அஞ்சு வெரைட்டிதான்கிற எண்ணத்தை மாத்தி, ஐம்பதுக்கும் மேற்பட்ட வெரைட்டிகள்ல தயாரிச்சோம். ஏன்னா இனிப்புங்கிறது மகிழ்ச்சியின் அடையாளம்.”

``உங்களின் மற்றொரு சிறப்பான விஷயம் பேக்கேஜ். அது எப்படி வடிவமைச்சீங்க?”

``ஒரு தடவை வாடிக்கையாளர் ஒருத்தர், வெளியூருக்கு இனிப்பை பார்சல் செஞ்சு கொண்டுபோறதைப் பார்த்தேன். அதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்று ஆராயச் சொன்னேன். என் மகள் அதில் ஆர்வம் காட்டினார். அவரிடமே `ப்ராடெக்ட் என்னோடது... பேக்கேஜிங் உன்னோட பொறுப்பு’ என ஒப்படைத்தேன். விதவிதமான வண்ணங்களில், தரமான பேக்கிங்குகளில் கிடைப்பதன் ஆரம்பப்புள்ளி அதுதான்.”

``நீங்க ஆரம்பிச்ச `நாள்தோறும் நல்லது செய்வோம்' இயக்கம் இப்ப எல்லாப் பக்கமும் பார்க்க முடிகிறதே, அது எப்படி சாத்தியமாச்சு?’’

``எங்க அப்பா ஒருமுறை, `இன்னைக்கு உன்கிட்ட இருக்கறது உனக்கு இந்தச் சமூகம் தந்தது. திருப்பி சமூகத்துக்கு என்ன தரப்போற?’ அப்படினு கேட்டார். அந்தக் கேள்விக்கு விடையாகத்தான் 2006-ல் ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ ஆரம்பிச்சோம்.

தன்னம்பிக்கை வகுப்புகள், பக்திப் பிரசங்கங்கள், மரக்கன்று நடுதல், நீர் நிலைகளைத் தூர்வாருதல் என்று பலதரப்பட்ட சேவைகள் அதில் உண்டு.

ஆனால், எதில் வேறுபடுகிறது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்னு கேட்டா, இரண்டு உதாரணங்கள். பெசன்ட் நகர் பீச்சில், எங்கள் சார்பில் ‘லைஃப் கார்டு’களை நியமிச்சிருக்கிறோம். இதுவரை 69 பேரைக் காப்பாற்றியிருக்கிறது அந்த இளைஞர் படை. இப்பொழுது அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, இன்னும் சிறப்பாகச் செய்யும் முயற்சிகளில் இருக்கிறோம்.

இன்னொன்று, ‘செஃப் அமுதப்படை’ எனும் நிகழ்ச்சி. விழித்திறன் சவால் உடையவர்களுக்கான நிகழ்ச்சி. நகரின் ஸ்டார் ஹோட்டல்களின் செஃப்-கள் பங்கு பெறுகிறார்கள். ஒவ்வொரு ஹோட்டல் செஃப் சார்பிலும் பலதரப்பட்ட ஸ்பெஷல் உணவுகள் பரிமாறப்படும். ஓரிரு வாரங்களுக்கு முன்னரே வாழை இலை மாடலில், என்னென்ன உணவு வகைகள் என்பது பிரெய்லி எழுத்தில் அச்சிடப்பட்டு அந்தப் பார்வைச்சவால் கொண்ட குழந்தைகளிடம் கொடுக்கப்பட்டு விடும். நிகழ்ச்சியன்று இலையில் வைக்கப்படும் பொருள்களை, வைக்கப்படும் இடத்தை வைத்தே `அட... இது கான்ட்டினென்டல் ஃபுட்தானே? இது கோபி மஞ்சூரியன் தானே?’ என்று சரியாகக் கேட்டுச் சாப்பிடுவார்கள். இப்படியாக நாள்தோறும் ஒன்றுதான் என்றில்லாமல், இந்த 12 வருடங்களில் 11,000 நிகழ்ச்சிகளைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது அது. சராசரியாக ஒரு மாதத்தில் 200 நிகழ்ச்சிகள் என்று நடத்தப்படுகின்றன.''

``உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?’'

“வாடிக்கையாளர்கள்தான் சொல்லணும் (சிரிக்கிறார்). வாடிக்கையாளர்கள் தேவை என்ன என்பதுதான் எங்கள் திட்டத்தை வடிவமைக்கிறது. ஆகவே, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து எங்கள் திட்டங்கள் அமையும். ஆக, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டே இருப்பதுதான் எங்கள் திட்டம் என்று சொல்லலாம்.”

அவரின் வெற்றி, அந்த வார்த்தைகளில் தெரிந்தது.

- பரிசல் கிருஷ்ணா, படங்கள்: க.பாலாஜி