இந்த ஆண்டில் இந்தியாவின் நீளமான இரவு இது! - ஏன் தெரியுமா? | India's longest night this year

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (21/12/2018)

இந்த ஆண்டில் இந்தியாவின் நீளமான இரவு இது! - ஏன் தெரியுமா?

இந்த ஆண்டின் நீளமான இரவு மற்றுமொரு விஷயத்தாலும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த நாளே முழு நிலவு நாளான பௌர்ணமி வருகிறது. அதோடு இந்த ஆண்டின் உர்சித் எரிகல் மழை நிகழ்வும் இதோடு இணைந்து வருகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவின் நீளமான இரவு இது! - ஏன் தெரியுமா?

2018-ம் ஆண்டின் நீளமான இரவு இன்று. டிசம்பர் 21-ம் தேதி வரும் இரவுதான் இந்த ஆண்டின் நீளமான இரவாக இருக்கப்போவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இன்று குறுகிய பகல் முடிந்து இரவு தொடங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு துருவத்திலும் இது நிகழும். இந்த நாளில்தான் சூரியன் தெற்கு திசையில் முழுமையாகச் சென்றிருக்கும். அதோடு இந்த ஆண்டின் இது இரவு மற்றுமொரு விஷயத்தாலும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த நாளே முழு நிலவு நாளான பௌர்ணமி வருகிறது. அதோடு இந்த ஆண்டின் உர்சித் எரிகல் மழை நிகழ்வும் இதோடு இணைந்து வருகிறது. அதாவது உர்சித் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் விண்கற்களின் கதிர்வீச்சுகள் நிலவைச் சுற்றியும் தெரியும். அதைத்தான் உர்சித் எரிகல் மழை என்று குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். அது இந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதுவும் இந்த ஆண்டின் நீளமான இரவிலேயே தொடங்குவதால் இந்த வருடம் அது அதிகமான சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

நீளமான இரவு

வடக்கு அரைகோளத்தில் இந்த ஆண்டின் குறுகிய நாளாகவும் இதைத்தான் கணக்கிடுகிறார்கள். சூரியன் அதன் தெற்கு கோடியில் இருக்கும்போது மகர ரேகைக்கு நேர் மேலே இருக்கும். அதனால், வடக்கு அரைகோளத்தில் இப்படியிருக்கும் அதே நேரத்தில் தெற்கு அரைகோளத்தில் நீளமான நாள் இருக்கும். இது இந்தியாவில் டிசம்பர் 22-ம் தேதி அதிகாலை 3:35-க்கு ஏற்படப்போகிறது.