மசூர்டால் புலாவ், கேஷு தம் புலாவ், மக்னா மலாய் கறி... வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பிகள்! | Weekend special recipes to try at home

வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (22/12/2018)

கடைசி தொடர்பு:09:30 (22/12/2018)

மசூர்டால் புலாவ், கேஷு தம் புலாவ், மக்னா மலாய் கறி... வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பிகள்!

விருந்து உண்ணும் அனுபவத்தைத் தரும் வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பிகள்!

மசூர்டால் புலாவ், கேஷு தம் புலாவ், மக்னா மலாய் கறி... வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பிகள்!

வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும் கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே? வீக் எண்டில் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே? இதோ குடும்பமே சேர்ந்து சமைத்து, ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ணும் அனுபவத்துக்குத் தரும் வீக் எண்ட் ஸ்பெசல் ரெசிப்பிகள்

கேஷு தம் புலாவ்

தேவையானவை: 

 பாசுமதி அரிசி - 2 கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 பிரிஞ்சி இலை - 2
 எண்ணெய், நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
 பனீர் - 50 கிராம்
 வெள்ளித்தாள் - 
  தேவையான அளவு
 முந்திரி - 20
 சர்க்கரை - சிறிது
 உப்பு, மஞ்சள்தூள்​​​​​​ - தேவையான அளவு

அரைக்க:

 பச்சை மிளகாய் – 2
 புதினா இலைகள்- 10
 பூண்டு - 4 பல்
 இஞ்சி - ஒரு துண்டு
 உப்பு - சிட்டிகை
 கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - தலா சிறிதளவு

ரெசிப்பி

செய்முறை:

பனீரைச் சுத்தப்படுத்திக் கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கவும். உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்குத் தேய்த்து அழுத்திப் பிசறி, சிறுசிறு கோலிகளாக உருட்டி, வெள்ளித்தாளில் சுற்றிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைக்கவும். பாசுமதி அரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும். மீதி உள்ள நெய், எண்ணெய்விட்டு, சீரகம், பட்டை (உடைத்தது), பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். 

இத்துடன் வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிவக்கும் வரை வறுத்து, பின் அரைத்த விழுதைச் சேர்க்கவும். சர்க்கரை, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சாதத்தைச் சேர்த்து உடையாமல் கலக்கவும். பனீரை புலவில் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, குங்குமப்பூத் தூவி அலங்கரிக்கவும்.

மக்னா மலாய் கறி

தேவையானவை: 

 தாமரைக்காய் பதப்படுத்தியது - (மக்னா) 200 கிராம்
 பச்சைப் பட்டாணி - 50 கிராம்
 வெங்காயம், தக்காளி - தலா 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், வெண்ணெய், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
 ஃப்ரெஷ் க்ரீம் - 2 டீஸ்பூன்
 முந்திரி - 10
 பச்சை மிளகாய் - 2
 சர்க்கரை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு. 
 உப்பு - தேவையான அளவு

சண்டே ஸ்பெசல்

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி அரைக்கவும். முந்திரியை விழுதாக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய், எண்ணெய்யைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வதக்கவும். பின் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கிளறவும். உப்பு, முந்திரி விழுது, பச்சைப் பட்டாணி, சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். கால் கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும், ஃப்ரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி வைக்கவும். பின் வேறு ஒரு கடாயில் சிறிது எண்ணெய்யில் தாமரைக் காயை வறுத்து கிரேவியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். 

மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்)

தேவையானவை: 

 பாசுமதி அரிசி - ஒரு கப்
 மசூர் பருப்பு - அரை கப் 
 வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
 பச்சைப்பட்டாணி, கேரட், 
  பீன்ஸ் கலவை - ஒரு கப்
 பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2
 இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், 
 கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய், நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - இரண்டரை கப்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 முந்திரி - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

பிரியாணி

செய்முறை:

ஈஸ்டை பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும். மைதாவுடன் சர்க்கரை, உப்பு, வெண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்துப் பிசையவும். இதுவே பேஸ். ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.

பேஸ்-இல் இருந்து ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிது கனமான ரொட்டியாகத் தட்டவும். தவாவில் ரொட்டியைப் போட்டு எண்ணெய்விட்டு மூடிப் போட்டு வேக விடவும். பின் ரொட்டியை திருப்பிப் போட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும். சூடான குல்சாவின் மேல் ராஜ்மாவைப் பரப்பி அதன் மேல் மிகப் பொடியாக வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு கொண்டு தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.


டிரெண்டிங் @ விகடன்