Published:Updated:

சினிமாவில் சிரிக்க வைத்தார்... நிஜத்தில்? - மெரினாவில் கர்சீப் விற்கும் ரங்கம்மா பாட்டி

இருள் சூழ்ந்த மெரினாவில் உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, கர்சீப், கீ-செயின், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் உள்ளிட்ட பொருள்களை விற்றுக்கொண்டிருக்கிறார் 83 வயதான பாட்டி ஒருவர். அவரைச்சுற்றிலும் ஏராளமானோர் செல்ஃபி எடுக்க குவிகின்றனர். அவ்வழியாக வருபவர்கள் பாட்டியைப் பார்த்துவிட்டு செல்ஃபியை எடுக்காமல் நகருவதில்லை. செல்ஃபியோடு அப்படியே நகர்ந்துசெல்கின்றனர். ஆனால், அவர் விற்கும் கர்சீப்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.

அவர் தான் கே.ஆர்.ரங்கம்மா பாட்டி. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் விஷால், விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ்,  வடிவேலு, கோவை சரளா, பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். `போறப்ப அந்த நாய ச்சூ’னு சொல்லிட்டு போ’ என்ற காமெடிக்கு அவர் பிரபலம். வடிவேலு மட்டுமின்றி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். அவரிடம் பேசினோம்,``கோவை மாவட்டம் அண்ணூர் தான் சொந்த ஊர். நான் பெத்த 9 புள்ளைங்கள்ள 2 பேர்தான் உசுரோட இருக்காங்க. அவங்களும் பணக்கஷ்டத்துல இருக்காங்க. எனக்கு எம்.ஜி.ஆர்னா ரொம்பப் பிடிக்கும்’ என்றவர். தன் கையில் பச்சைகுத்தியிருக்கும் எம்.ஜி.ஆர் பெயரைக் காட்டினார்.

`முதன் முதலில் விவசாயி படத்துல நடிச்சிருக்கேன். தமிழ் மட்டுமில்லாம, இந்தி, மலையாளப் படங்கள்ள கூட சின்னச் சின்ன கதாபாத்திரம் பண்ணிருக்க. இப்போ பட வாய்ப்பு ரொம்ப கம்மியாயிடுச்சு. இப்போவும் யாராச்சும் கூப்டா போய் நடிப்பேன். எம்.ஜி.ஆர்கிட்ட ரொம்பப் பிடிச்சது கேட்குறவங்களுக்கு இல்லனு சொல்லாம அவர் கொடுத்து ஹெல்ப் பண்ணுவாரு. சம்பளத்த பூராவும் மக்களுக்குதான் வாரி வழங்குனாரு. அதே மாதிரி தான் நானும். கேட்குறவங்களுக்கு தானம் பண்ணி கொடுத்துட்டேன். ஒருவேல அதுதான் நான் இப்போ, காசுல்லாம இப்டி இருக்குறதுக்கு காரணமாக இருக்குமோனு தோணுது.

என்ன பண்றது வாழணுமே, காசில்ல, அதான் பீச்ல கர்சீப் விக்குற. காலைல ஒரேயோரு கைப்பிடி அரிசி போட்டு கஞ்சி காச்சி குடிப்பேன். அன்றாட வாழ்க்கையையே கஷ்டப்பட்டு தான் நடத்திட்டு வரேன். தமிழக அரசோ, நடிகர் சங்கமோ உதவி பண்ணா இருக்குறவரைக்கும் வாழ்ந்துட்ட போவேன்’ என்றார் உடைந்த குரலில். ரங்கம்மா பாட்டி ஃபெப்சி அமைப்பின் ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். ரங்கம்மா பாட்டி போல ஏராளமான கலைஞர்கள் இன்னும் அடையாளம் தெரியாமல் அன்றாட பிழைப்புக்கே கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.