Published:Updated:

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!
வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

இந்த இதழ் ஆனந்த விகடன்:  https://bit.ly/2ERziXm

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

விதைக்கப்பட்டவர்கள்  - தூத்துக்குடி போராளிகள்; உயிர்ப்புமிக்க அறிவுஜீவி - அ.மார்க்ஸ்; வரலாற்றின் தடயம் - அமர்நாத் ராமகிருஷ்ணன்; கதாவிலாசன் - எஸ்.ராமகிருஷ்ணன்; களம் நிற்கும் கலைஞன் - பிரகாஷ்ராஜ்; ஜனநாயகன் - விஜய் சேதுபதி; மண் காக்கும் மனிதர் - ஈஞ்சம்பாக்கம் சேகர்; சிக்ஸர் சீனியர் - தினேஷ் கார்த்திக்; அறச்சுவடி - உமா வாசுதேவன்...

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

- இவர்கள்தான் விகடன் தெரிவில் '2018 டாப் 10 மனிதர்கள்'. இந்தத் தெரிவின் காரணங்களையும், இவர்களின் 2018-ம் ஆண்டின் செயல்பாடுகளையும் மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் நமக்கு விவரித்திருக்கிறது ஆனந்த விகடன்.

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

இசையின் திசை - கோவிந்த் வஸந்தா; போர்முரசு - இசை என்கிற ராஜேஸ்வரி; குறுஞ்சித்திரன் - சந்தோஷ் நாராயணன்; குழந்தைகள் கூட்டாளி - இனியன்; நீதியின் குரல் - அருள்தாஸ்;  இதயம் தொடும் இணையம் - பிளாக் ஷீப்; அறிவியல் தூதன் - பிரேமானந்த் சேதுராஜன்; தற்சார்பு தமிழச்சி - நிவேதா; அறம் செய்யும் அட்சயம் - நவீன்; 'இரட்டைக்குரல் துப்பாக்கி' விவேக் - மெர்வின்...

- மணற்கொள்ளைக்கு எதிராகக் களமாடும் களப்போராளி தொடங்கி அறிவியலை யூடியூப் சேனலில் எளிதாகச் சொல்லும் ஆன்லைன் ஆர்வலர் வரை வெவ்வேறு களங்களிலும் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ள டாப் 10 இளைஞர்களைத் தேடித்தேடி அடையாளப்படுத்தியிருக்கிறது ஆனந்த விகடன். இவர்களின் பின்புலமும் முன்முயற்சிகளும் நம்மை உத்வேகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

* அது இது எது: சூரியன் உதிக்க மறந்தாலும், நட்சத்திரங்கள் மின்ன மறந்தாலும், பூமி சுழல மறந்தாலும் அதிமுக அமைச்சர்கள் தாங்கள் மங்குனி அமைச்சர்கள் என்பதை மணிக்கொரு முறை  நிரூபிக்க மறப்பதில்லை...

* நான்தான்பா ரஜினிகாந்த்: எட்டு எட்டா பிரிச்சுக்கோ, மூன்றே மூன்று பருவம்தான் என எண்களை வைத்து வாழ்க்கைத் தத்துவம் சொன்ன ரஜினியை, அதே எண்கள் சென்ற ஆண்டு வெச்சி செய்தன. ஒன்லி ஒன், 2.0, 3டி, ஐந்து மாநிலத் தேர்தல், ஏழு பேர் விடுதலை, பத்துப் பேரும் பலசாலியும் என எண்கள் எட்டாம் இடத்தில் நின்று எடக்குமடக்காய் விளையாடின...

* ஆமைக்கறி அண்ணாத்த: ஆண்டுகள் பல ஆனாலும் அண்ணன் ட்ரெண்டாவது மெகாசீரியல் போல நடக்கத்தான் செய்கிறது. ஆமைக்கறியில் பெப்பர் தூவிச் சாப்பிட்டது, ஆமை ஓட்டில் டி போர்டு மாட்டி ட்ராவல்ஸ் நடத்தியது, ஏ.கே 74-ல் சுட்டு தானோஸை வீழ்த்தியது என சீமான் அண்ணனின் பராக்கிரமங்கள் யூடர்ன் போட்டு வந்து புல்டோஸராகத் தாக்கின...

*  ஹல்லோ... நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லாம் வந்து அடித்துவிட்டுப் போகலாம் என அறிவிப்புதான் வரவில்லை. அந்தளவுக்குப் பாரபட்சம் இல்லாமல் அடிவாங்கினார் ஹெச்.ராஜா... ஒருகட்டத்தில், ‘இன்னமும் என்னை அடிக்காதது ரமேஷ் அப்பாவும் சுரேஷ் அப்பாவும்தான். இருங்க சட்டுனு போய் அடிவாங்கிட்டு வந்துடுறேன்' என மஞ்சப்பையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கிளம்புமளவுக்கு நிலைமை மோசமானது. ‘அவங்க அடிச்சுப் பழகிட்டாங்க... நான் வாங்கிப் பழகிட்டேன்' என இன்னும் டயர்டாகாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்... 

இந்த இதழ் ஆனந்த விகடன்:  https://bit.ly/2ERziXm

- இவை ஜஸ்ட் சாம்பிள்தான். சிரிப்பு சே - காமெடி காஸ்ட்ரோ முதல் நோ சாய்ஸ் நித்யானந்தா வரை '2018 - டாப் 25 பரபரா'வை நக்கலும் நையாண்டியும் கலந்துகட்டி சற்றே கூடுதல் கலாய்ப்புச் சுவையூட்டி தந்திருக்கிறது விகடன் டீம்.

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

பெரியார் சிலை உடைப்பு, கனிமொழி பற்றிய சர்ச்சைக் கருத்து என ஹெச்.ராஜாவின் அபத்தங்கள்; ஆய்வு நாயகனாக உருவெடுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்; கட்சி தொடங்கும் ரேஸில் ரஜினியை முந்திய கமல்; கருவறை வரை கடத்தல் புகார்கள் பாய்ந்ததால் அதிர்ந்த தமிழகம்; 'அ.ம.மு.க' ஆரம்பித்த தினகரன்; பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்; ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் முகம் காட்டிய ரஜினிகாந்த்; கருணாநிதி மறைவு; 'பாசிச பாஜக ஓழிக' கோஷமிட்ட ஷோபியா; அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட வைரமுத்து; அடங்காத ஆணவக்கொலை; தமிழகத்தையும் விடாத மீ டூ புயல்; சர்கர் சர்க்கஸ்; டெல்டா மக்களுடைய வாழ்வையே புரட்டிப்போட்டது 'கஜா' புயல் என '2018-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்' மிக நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சில வரிகளில் மிக ஆழமாக சம்பவங்களை நமக்குச் சொன்ன விதம்தான் வழக்கமான தெறிப்பு ரகம். 

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

twitter.com/thoatta: அமைக்கப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், மேற்கொள்ளப்படும்... யப்பா டேய் எத்தனை 'படும்'டா, ஏற்கெனவே 4 வருசமா ரொம்பவே பட்டுக்கிட்டுதான் இருக்கோம் #budget2018

facebook.com/santhosh.narayanan.319: ரஹ்மான் இரவில் இசை அமைத்தார்; ராஜா இரவுக்காக இசை அமைத்தார்.

twitter.com/arumugamsony: ஒரே கன்ஃப்யூசன்... எவன்கிட்ட பேசினாலும் பிஜேபி மேல கொலை வெறியோட இருக்கானுங்க. அப்புறம் யார்தான்டா அவங்களுக்கு ஓட்டு போடறது? 

twitter.com/HAJAMYDEENNKS: "பிரபாகரன் வடிவில் சீமானைப் பார்க்கிறேன்" - பாரதிராஜா #தாமதிக்காமல் வாசன் ஐ கேர் செல்லவும்! 

- நாட்டு நிலவரத்தின் மக்கள் பார்வையை எதிரொலிக்கும் சமூக வலைதளத் தெறிப்புகளைத் தொகுத்து வழங்கியிருக்கும் '2018 - பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே' நிச்சயம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

2018 தமிழ் யூடியூப் சேனல்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏராளமான இளைஞர்கள் யூடியூப் தளத்தினை விதவிதமாகப் பயன்படுத்திப்பார்க்கத் தொடங்கினார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பிரம்மாண்ட மேடையாக மாற்றிக்காட்டினர். லட்சக்கணக்கான ஃபாலோயர்களோடு இதை முழுநேர வேலையாகவும் செய்துபார்க்கத் தொடங்கினர். அப்படி, எவ்வித நிறுவனப் பின்புலங்களும் இல்லாமல் தன்னந்தனியாக வீடியோக்களில் வித்தியாசம் காட்டிய வீடியோ நட்சத்திரங்களாக இர்ஃபான், மதன் கெளரி, மலர், தமிழ்ச்செல்வன் மற்றும் சுபலட்சுமி ஆகியோர் குறித்து அவர்கள் மூலமே விவரிக்கிறது '2018 - YOU TUBE STARS' எனும் ஆர்ட்டிகிள். 

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

"யூடியூப் அப்போ... இப்போ...?"

"யூடியூப் இப்ப மொத்தமா வேறயா இருக்கு. முன்னாடி அளவு கம்மியா இருக்கும், தரம் அதிகமா இருக்கும். இப்போ தரம் கம்மியா இருக்கு, அளவு அதிகமா இருக்கு. இப்போ போய் நீங்க யூடியூப் ட்ரெண்டிங் வீடியோக்கள் எடுத்துப் பாருங்க. ஒரு சில வீடியோக்கள் குவாலிட்டியா இருந்தாலும், நிறைய வீடியோக்கள் ‘இந்த நடிகை செய்த காரியத்தைப் பாருங்களேன், அந்த நடிகை எங்கு சென்றார் தெரியுமா' வகையறாவாதான் இருக்கு. அதுமாதிரி மோசமான வீடியோக்களுக்கு மில்லியன் கணக்குல வியூஸ் வேற வரும். இதனாலதான் இண்டிபென்டன்ட் மியூஸிக் அடி வாங்குது. நான் ஆல்பம் பண்ணுன டைம்ல ‘க்ளப்புல மப்பு'ல பாட்டுக்கு மில்லியன் கணக்குல வியூஸ் வந்துச்சு. அதுக்காக ‘திங்க் மியூஸிக்'ல விழா வெச்சுப் பாராட்டினாங்க. இப்போ நிறைய இண்டிபென்டன்ட் மியூஸிக் ஆல்பங்கள் வருது. ஆனா, ட்ரெண்டிங்ல வரமுடியாமப்போயிடுது. டெக்னாலஜிங்கிறது ஒரு தீக்குச்சி மாதிரிதான். அதை வெச்சு எரிக்கவும் முடியும், ஒளி கொடுக்கவும் முடியும்." 

இந்த இதழ் ஆனந்த விகடன்:  https://bit.ly/2ERziXm

- ''ஜல்லிக்கட்டு டைம்ல நடந்த விசாரணையை எல்லாம் என்னால மறக்கவே முடியாது ப்ரதர். படத்துல பார்க்கிற மாதிரியெலாம் கோர்ட் இல்ல. பயங்கரமா இருந்துச்சு..." என ஜாலியாகப் பேசத் தொடங்கிய 'ஹிப்ஹாப்' ஆதியின் "மீம் கிரியேட்டர்ஸ் கொஞ்சம் கவனமா இருங்க!" பேட்டி பாரதியார் முதல் மீம் மக்கள் வரை பலரையும் உள்ளடக்கியது. 

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

கிரிக்கெட் இந்தியாவில் மதம். குழந்தைகளுக்கான முன்மாதிரிகள். ஆனால் கபில்தேவைச் சொன்னதைப்போல, சச்சின் டெண்டுல்கரைச் சொன்னதைப்போல, தோனியைச் சொன்னதைப்போல இப்போது கோலியை நல்ல உதாரணமாக, குழந்தைகளிடத்தில் சொல்ல முடியாது. மிகத்தவறான முன்னுதாரணமாக மாறிக்கொண்டேயிருக்கிறார் கோலி. வெற்றிக்கான பாதையில் தோல்விகள் என்பது சாதாரணம்.தோல்வியே அடைந்துவிடக் கூடாது என நினைப்பது முட்டாள்தனம். வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் நாம் குழந்தைகளிடத்தில் சொல்லிக்கொடுக்கவேண்டிய பாடம். இதற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவராக இருக்கிறார் கோலி... 

- விராட் கோலியில் ஆடுகள நிலவரத்தை ஆழமாக அலசுகிறது 'கோலியின் எக்ஸ்ட்ராஸ்' எனும் கிரிக்கெட் அலசல் கட்டுரை. 

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

"இந்த உலகக் கோப்பையில் ஜொலிக்கப்போகும் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பௌலர்?!"

"ஆல்ரவுண்டர்கள்தான் இந்த உலகக் கோப்பையில் ஜொலிப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நிறைய ஆல்ரவுண்டர்கள் மிகச் சிறப்பாக ஆடுகிறார்கள். அந்த வகையில் என்னுடைய முதல் சாய்ஸ் ஆண்ட்ரே ரஸல். அவர் உலகக் கோப்பையில் விளையாடினால், நிச்சயம் அசத்துவார். பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, மேக்ஸ்வெல் போன்றவர்களும் பட்டையைக் கிளப்புவார்கள்."

- கபில் முதல் கோலி வரை அப்டேட்டுடன் அனுபவத்தையும் கருத்துகளையும் சிறப்பு நேர்காணல் மூலம்  20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் பகிர்ந்திருப்பது கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு செம்ம தீனி.

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

சென்னை, ராமாவரம், கற்பகாம்பாள் நகர் முதல் தெருவில் உள்ள செல்வியம்மாள் கிராமிய உணவகம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை திருவிழாக்கூட்டம்போல இளைஞர்களால் திணறுகிறது இந்த உணவகம். பரிமாறுபவர்களும், சமைப்பவர்களும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள்...

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரக் கடையாகத் தொடங்கப்பட்ட உணவகம், இன்று 25 பேர் அமர்ந்து சாப்பிடுமளவுக்கு வளர்ந்திருப்பதை விவரிக்கிறது 'சோறு முக்கியம் பாஸ்' தொடர் பகுதி. 

வெல்கம் 2019 ஸ்பெஷல்: 5 நிமிட வாசிப்பில் 180 பக்க ஆனந்த விகடனின் 11 ஹைலைட்ஸ்!

ஒருவிதத்தில் ஹரி மேனன் "ஸ்டார்ட் அப் கமல்ஹாசன்" என்று சொல்லலாம். எல்லோ ருக்கும் முன்னதாகவே புதியதாக ஒன்றைத் தொடங்கி, அதற்குச் சரியான வரவேற்பு கிடைக்காமற்போனது. ஆனால், அதே ஐடியாவை, சில காலம் கழித்து வேறொருவர் தொடங்கி ஹிட் அடித்தது வரலாறு. 2011 வரை ஹரி இணையம் பக்கம் வரவில்லை. அந்த ஆண்டுதான் Bigbasket தொடங்கப்பட்டது. அது சரியான நேரம் என ஹரி கணித்தார்... 

- மெதுவாக, திட்டமிட்டு வளர்ந்து வருவதையே மிகப் பெரிய பலமாகக் கொண்ட பிக் பேஸ்கெட் கடந்து வந்த பாதையை வெற்றி மந்திரங்களுடன் விவரிக்கிறது 'கேம் சேஞ்சர்ஸ்' தொடர் பகுதி.  

இந்த வார ஆனந்த  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2GI2HVC