Published:Updated:

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

தொடரின் மற்ற பாகங்கள்

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த சட்ட போரட்டங்களை அந்த நிறுவனம் துணிவுடன் எதிர்கொண்டது. நீதிமன்றங்களில் ஆலை நிறுவனத்துக்கு ஆதரவான தீர்ர்ப்புகள் வந்ததால், போராட்டக் குழுவினர் அதிர்ச்சியும் சோர்வும் அடைந்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக வைகோ சீராய்வு மனுவை தாக்கல் செய்து அது விசாரணையில் இருக்கிறது.சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை காரணமாக சொல்லி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை தடை செய்து உள்ளது.இதனை எதிர்த்து சென்னையில் செயல்பட்டு வரும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் முறையிட்டதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியிடும் சமயத்தில் நீதிபதிகள் அதிச்சி தகவலை வெளிட்டனர்.

நொந்து போன நீதிபதிகள்

'நாங்கள் தீர்ப்பு எழுதும் சமயத்தில் எங்களுக்கு குறுக்கீடுகள் வந்தன.ஆனால் எங்கள் மனமும் கரமும்

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

சுத்தமாக இருக்கிறது.இப்படி ஒரு சூழலில் நாங்கள் இந்த வழ்க்கை விசாரிக்க விரும்பவில்லை. டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வ்ழக்கை விசாரித்து தீர்ப்பு வெளியிடும். ஆனாலும் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்களே என்று மட்டுமே சொல்ல விரும்புகிறோம்' என மனம் நொந்து கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

பசுமை தீர்ப்பாய நீதிபதிகளை வளைக்க நடந்த முயற்சி என்ன? எந்த விதமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. யார் அந்த செயலில் ஈடுபட்டது? அந்த அளவுக்கு நீதியை வ்ளைக்கும் துணிச்சல் யாருக்கு இருந்தது? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்கிற கேள்விகளுக்கு நீதிபதிகள் பதில் தெரிவிக்க மறுத்து விட்டதால் இதன் பின்னணியில் இருந்த கை எது என்பது கடைசி வரையிலும் தெரியாமலே போய் விட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர்கள் இது பற்றி பேசுகையில், "தமிழகத்தில் செயல்பட்டு வரும் பசுமை தீர்ப்பாயத்துக்கு உள்ளூர் பிரச்னைகள் தெரிந்து இருக்கும்.அத்துடன் தூத்துக்குடி மற்றும் ஆலையை சுற்றிலும் வசிக்கும் மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதார நிலைமை என்ன என்பதும் அது பாதிப்பு அடைந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெரிந்து இருக்கும்.

இனி இந்த வ்ழக்கை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முத்ன்மை அமர்வு விசாரிக்க இருப்பதால் இந்த விவரங்களை கணக்கில் எடுத்துக் கொள்வார்களா? அல்லது கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதால் ஆலையை மூடுவதற்கு சம்மதிப்பார்களா? மனித உயிர்களையோ அவர்களின் இடற்ல்களையோ கவனத்தில் எடுக்காமல் பணம் காய்க்கும் தொழிலாக மட்டுமே இந்த ஆலையை பார்த்து அதனால் செயல்பட அனுமதி கொடுத்து விடுவார்களோ என்கிற அச்ச உணர்வு ஏற்பட்டு இருக்கு" என சமூக ஆர்வலர்கள் பதை பதைக்கிறார்கள்.

வைகோ வெளியிட்ட தகவல்

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்ட புதிதில் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளுமே அதனை எதிர்த்தன. பின்னர் சில கட்சிகள் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டதை ஏற்கெனவே பார்த்தோம். சில அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஓபனாக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கினார்கள். அந்த அளவுக்கு ஆலை நிர்வாகம் அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு காரியங்களை சாதித்தது.

வைகோ ஒருமுறை, "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்காக என்னிடம் நிறைய பேர் பேசினார்கள்.நான் மிகவும்  மதிக்கும் நபர்கள் கூட என்னிடம் பேசி, 'ஸ்டெர்லைட் விவகாரத்தில் ரொம்ப தீவிரம் காட்ட வேண்டாமே..'என அன்பு கோரிக்கை வைத்தார்கள். இன்னும் சிலர் வேதாந்தா-ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகியான அனில் அகர்வால என்னிடம் பேச விரும்புவதாக தெரிவித்தார்கள். நான் அதனை அனுமதிக்கவில்லை" என பொதுக்கூட்டத்தில் ஓபனாகவே வைகோ தெர்வித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் மிகவும் மதிக்கும் நண்பர் ஒருவர் ஒருநாள் என்னை தொடர்பு கொண்டார். அப்போது, 'வேதாந்தா நிறுவன அதிபர் உங்களை ஒரு முறை பார்க்க ஆசைப்படுகிறார். இது வெறும் சந்திப்பு மட்டுமே. உங்கள் கொள்கையில் அவர் எதுவும் தலையிடப்போவது இல்லை. ஒரு தொழிலதிபரை சந்திப்பதில் என்ன தப்பு. அதற்கான ஏற்பாட்டை செய்யட்டுமா?" எனக் கேட்டார். நான் அதனை ஏற்கவில்லை.

இன்னொரு சம்யம் நான் டெல்லிக்கு விமானத்தில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது எனக்கு அருகில் இரு தம்பதி இருந்தார்கள். அவர் என்னிடம் வந்து, 'நான்.. அகர்வால். ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகி. நீங்கள் எங்கள் ஆலைக்கு எதிராக கடுமையாக போராடுறீங்க. நான் உங்களை நேரில் சந்திக்கணும்னு பல தடவை முயற்சி செஞ்சிருக்கேன். ஆனால் முடியவில்லை' என சொன்னார்.

நான் அவரிடம் ஸ்டெர்லைட் ஆலை குறித்து எதையும் பேச விரும்பவில்லை. அதனால் அங்கிருந்து

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

நகர்ந்து சென்று விட்டேன். பின்னர் விமானத்திலும் அவர் எனக்கு அருகிலேயே வந்து அமர்ந்தார். நான் அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டேன். அந்த அளவுக்கு ஆலை விவகாரத்தில் என்னை வளைக்க முயற்சி நடந்தது" என வைகோ குற்றம் சாட்டினார். அது உண்மைதான் என்பது போலவே பல அரசியல்வாதிகள் தேர்தல் சமயங்களில் ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிதி பெறுவதில் ஆர்வம் காட்டினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவதில் வைகோ தீவிரம் காட்டியதன் காரணமாகவே அவரை தேர்தலில் தோற்கடித்து விட்டதாகவும் பேச்சு எழுந்தது.  இதற்காக பெருமளவு நிதி விளையாடியதாகவும், அதன் காரணமாகவே சிவகாசி தொகுதியில் திடீரென காங்கிரஸ் மூலம் தொகுதிக்கு அறிமுகமான புதியவரான மாணிக்தாகூர் வெற்றி பெறமுடிந்தது என்றும் பேச்சுக்கள் எழுந்தது.அந்த அளவுக்கு எதிர்ப்புகளே இல்லாமல் ஆக்குவதில் ஆலை நிர்வாகம் தீவிரமாக செயல்படும் என பொது மக்கள் பேசும் அளவுக்கு ஆலை நிர்வாகத்தின் செயல்பாடு இருந்தது.

சட்டத்தின் முடிவை எதிர்நோக்கும் மக்கள்

தற்போது உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், தமிழக அரசின் நடவடிக்கையால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால் ஆலை மூடிக் கிடக்கிறது. இதனை எதிர்த்து தேசிய பசுமை வாரியத்திடம் ஆலை நிர்வாகம் முறையிட்டு இருக்கும் சூழலில், வாரியத்தின் முடிவு தங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, தேசிய தூய சுற்றுச்சுழலுக்கான கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் நம்பிக்கையோடு இருக்கின்றன.

 

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 16

உள்ளூர் மக்களும் சட்ட ரீதியாக ஆலை மூடப்பட்டு விடும்.அதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என நம்புகிறார்கள்.வணிக மக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்கள். மீனவ மக்கள் தங்களுடைய தொழிலுக்கு எமனாக வந்து நிற்கும் இந்த ஆலை விரைவிலேயே இங்கிருந்து அகற்றப்பட்டு விடும் என காத்து இருக்கிறார்கள். சட்டத்தின் பார்வை எப்படி இருக்குமோ..? காத்திருக்கலாம் முடிவு தெரியும் வரை..

நாளை முதல்...கிறு கிறுக்க வைக்கும் கிரானைட் ஊழல்!