Published:Updated:

'சொற்ப பணம்தான் வருது, ஆனாலும் திருப்தி' - பல்குச்சி விற்கும் ஆறுமுகம் நெகிழ்ச்சி! 

'சொற்ப பணம்தான் வருது, ஆனாலும் திருப்தி' - பல்குச்சி விற்கும் ஆறுமுகம் நெகிழ்ச்சி! 
'சொற்ப பணம்தான் வருது, ஆனாலும் திருப்தி' - பல்குச்சி விற்கும் ஆறுமுகம் நெகிழ்ச்சி! 

கலர், கலரான பற்பசைகள் நம் வீட்டை முற்றுகையிட்டதால் இயற்கையாகக் கிடைக்கும் வேம்பு, கருவேலம் குச்சிகளில் பற்களை துலக்குவது என்பது கிராமப்புறங்களில் இன்றும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நகர்ப்புறங்களில் மிகக் குறைந்த நிலையிலேயே பயன்பாட்டில் இருக்கிறது இந்தப் பழக்கம். குச்சிகளில் பல் துலக்குவதை ஸ்டேட்டஸ் குறைச்சலாகப் பார்க்கும் நிலையே உள்ளது. ஆனாலும், விவரம் தெரிந்தவர்கள் இதை வாங்கிச் செல்கின்றனர் என்கிறார், கடந்த 30 ஆண்டுகளாகக் கருவேலம் பல் குச்சிகளை விற்றும் வரும் ஆறுமுகம்.

'சொற்ப பணம்தான் வருது, ஆனாலும் திருப்தி' - பல்குச்சி விற்கும் ஆறுமுகம் நெகிழ்ச்சி! 

அவரிடம் பேசினோம்.``எனக்குச் சொந்த ஊர் கெஜ்சல்நாயக்கன்பட்டி. (இது சேலம் மாவட்டத்தில் உள்ளது.) எங்க அப்பா 40 வருஷமா இந்தத் தொழில செஞ்சாரு. அதற்கப்புறம் எங்க சித்தப்பா, எங்க பங்காளிங்கனு ஆறு குடும்பம் இதே இடத்தில வித்துகிட்டு இருந்தோம். இப்ப யாரும் இல்லை. நான் மட்டும்தான். ஆறு கடைங்க வைக்கிற அளவுக்கு இதுல வருமானம் இல்லீங்க. பத்து குச்சி கட்டு, பத்து ரூபாய்க்கு விற்கிறோம். நான் 30 வருஷமா வித்துகிட்டு இருக்கேன். காலைல 10 மணிக்கு இங்கு வருவேன். நானும் என் மனைவியும் சேர்ந்துதான் விற்கிறோம். எனக்கு 2 மகன், 1 பொண்ணு. இதவச்சுதான் அவங்களக் காப்பாத்தினேன். குச்சி வாங்க வெளியூரில் இருந்துகூட இங்க வர்றாங்க. சேலத்திலேயே எனக்குத் தெரிஞ்சவரையில நான் மடடும்தான். யாராவது குச்சி வேணும்னா என்னைத்தான் கை காட்டுறாங்க. இதே இப்ப நீங்க வரலையானு’’ சிரிச்சார்.

சிரித்தபடியே தொடர்ந்த அவர்,``மலையடிவார பகுதியில் விளையுற குச்சியா பார்த்து வெட்டிட்டு வர்றோம். இன்றைய நிலைமைக்கு காலையில் எழுந்திருப்பதே 8 மணியாகிறது. இதில், எங்கிருந்து பல்துலக்கும் குச்சியைத் தேடிப்போக. குச்சி விற்பதில் சொற்ப வருமானம்தான்; ஆனால், நிம்மதியாக இருக்கேன். 

'சொற்ப பணம்தான் வருது, ஆனாலும் திருப்தி' - பல்குச்சி விற்கும் ஆறுமுகம் நெகிழ்ச்சி! 

இதப்பத்தி நிறைய தெரிஞ்சவங்க வர்றாங்க. ஏன், காரில்கூட வர்றாங்க. ஒட்டுமொத்தமா பத்து கட்டு, பதினஞ்சு கட்டுனு வாங்கிட்டுப் போவாங்க. அவங்களால்தான் என் பொழப்பே ஓடுது. இதோ இந்தப் பக்கமா (சைகை காண்பிக்கிறார்) இருந்து ஒரு பெரியவர் வருவாரு. வயசு 80 இருக்கும். எங்கிட்ட பத்து வருஷமா வாங்கிட்டு போறாரு. அவரு பல்லு இன்னிக்கும் ஸ்ட்ராங்கா இருக்கு’’ என்று சிரித்துக்கொண்டே முடித்தார்.