Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ன்பது ஆண்டுகளாக ரியல் மேட்ரிட் அணியை உச்சத்தில் வைத்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2018 ஜூலை முதல் ஜூவெண்டஸ் அணியில் இணைந்தார். 902 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில்,  65வது நிமிடத்தில் தனது முதல் ‘ஜூவெண்டஸ்’ கோலைப் பதிவு செய்தார்.  புதிய அணிக்கான முதல் கோலை, வழக்கமான ஸ்டைலில் ‘ஷர்ட்டைத் தூக்கி’க் கொண்டாடியது, மேட்ச் ஹைலைட். ஆனால், போட்டியின் கடைசி ஐந்து நிமிடங்களில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இரண்டு கோல்கள் சிக்க, ஜூவெண்டஸ் தோல்வியடைந்தது. ரிசல்ட் ட்விஸ்ட்.

இன்பாக்ஸ்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படமாக மட்டுமல்லாமல், கார்ட்டூன் சீரிஸாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வெளியானது. தொடர்ந்து, ‘பாகுபலி’யின் ராஜமாதா சிவகாமி கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து, ‘பாகுபலி: பிஃபோர் தி பிகினிங்’ என்ற வெப் சீரிஸை உருவாக்குகிறார், ராஜமெளலி. நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்திற்காக உருவாகும் இதில், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal thakur) நடிக்கிறார். ராஜ மாதா 2.0!

இன்பாக்ஸ்

ணிரத்னம் அடுத்ததாக ஒரு படத்தை எழுதித் தயாரிக்க வுள்ளார். தனசேகரன் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு இசை `96’ இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா என அறிவித்துள்ளார்கள். அடுத்து விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்திற்கும் இசைய மைத்திருக்கிறார். செக்கச் சிவந்த 96!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ப்ரென்ட் ஸ்ட்ரிட்டான். பல முன்னணிப் பத்திரிகைகளிலும், கெட்டி இமேஜஸுக்காகவும் புகைப்படங்களை எடுத்துத் தருபவர். இவர் சமீபத்தில் ஜிம்பாப்வே காட்டில் எடுத்த காண்டாமிருகத்தின் புகைப்படம் பலரின் மனதையும் கனக்கச் செய்தது. கொம்பின்றி ரத்தக் காயத்துடன்  பரிதாபகரமான நிலையில் இருந்தது. இந்தப் படத்தை வெளியிட்ட ‘நேட் ஜியோ’வினர், உயிரினங்களை வதைப்பது குறித்துத் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டிருந்தனர். விலங்குகளிடம் மனிதத்தோடு நடந்துகொள்வோமே!

இன்பாக்ஸ்

டுத்த பொங்கல் கோலிவுட்டுக்குப் பெரிய பொங்கலாக இருக்கும்போலிருக்கிறது. ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ என ஏற்கெனவே இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில், இப்போது இந்த ரேஸில் சிம்புவும் இணைந்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தையும் பொங்கலுக்கே வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தப்படம் ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘அத்தரினிட்டிக்கி தாரேதி’ படத்தின் ரீமேக். வெறித்தன வெய்ட்டிங்!

இன்பாக்ஸ்

‘காலா’வில் ரஜினியோடு நடித்த ஹூமா குரேஷி அடுத்து சிரஞ்சீவியோடு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். பரத் அனே நேனு, ஜனதா கேரேஜ் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த கொரட்டலா சிவா இயக்கும் இந்தப்படமும் அவருடைய முந்தைய படங்களைப் போலவே அரசியல் படமாக இருக்கும் என்கிறார்கள். கண்ணம்முலு!

இன்பாக்ஸ்

பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து ஆண்டுதோறும் தீபாவளியை ராணுவத்தினரோடு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. சென்ற ஆண்டு ஜம்மு காஷ்மீரில் கொண்டாடியதைப்போல இந்த ஆண்டும் உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள ஹர்ஸில் கிராமத்தில் இருக்கிற ராணுவத்தினரோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் பிரதமர். ஹேப்பி தீவாளி ஃபோக்ஸ்!

சில நாட்களுக்கு முன்பு அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் படங்கள் சில வாட்ஸ்அப்களில் பரவின. இதுகுறித்து மும்பை காவல்துறையில் புகார் அளித்தார் அக்‌ஷரா. இந்த விஷயத்தில் தன்னுடைய வருத்தத்தையும் கோபத்தையும் ஆன்லைனிலும் பகிர்ந்திருக்கிறார். ``ஒட்டுமொத்த இந்தியாவும் மீ டூ இயக்கத்தால் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளில் விழிப்படைந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு சிறிய பெண்ணின் அந்தரங்கமான படங்களை அவருடைய அனுமதியின்றிப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வது, சமூகத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.  யாரோ சிலர் இணையவழி என்மீது தொடுத்திருக்கும் வன்முறையில் நீங்களும் பங்குகொள்ளாதிருப்பதே சரியாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார். குணமா சொன்னா கேட்டுக்கணும்!