Published:Updated:

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு அமைப்பது தொடர்பான தேதியை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டபோதிலும், தண்ணீர் பகிர்வு தொடர்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலதாமதம் காட்டி வந்தது.

இதனையடுத்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

##~~##
இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் மத்திய அரசுக்கு கடந்த 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் போது பரிந்துரையாகச் சொல்லப்பட்டதே தவிர, கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்தது.
 

மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி, தொடங்கி விட்டதாகவும் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் தேர்தல் முடிவடைந்து விட்டதால், மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக தேர்தல் முடிவடைந்துவிட்டதால், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு எந்த தேதிக்குள் அமைக்கப்படும் என்பதை வரும் வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது