Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இ
ந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்து பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

சேலம், சென்னை, தருமபுரி மற்றும் மதுரை ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழி வகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

‘சேலம் 150’, ‘சென்னை டே 2018’ ‘தருமபுரி 200’, மதுரை 200  ஆகியவற்றைத் தொடர்ந்து,  இப்போது நெல்லை-200 இன்ஃபோ புக்’ இதோ... உங்கள் கைகளில்.

அன்பு நெல்லைச் சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

1. புராண புண்ணியம்

தி
ருநெல்வேலி அல்லது திந‌வேலி என்று வாஞ்சையோடுஅழைக்கப்படும் ஒரு சுவாஸ்யமான நகரம் நெல்லை மாநகரம். “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு’ என சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும் பாடிய புண்ணிய பூமி.  திருநெல்வேலி, பாளையங்கோட்டை என இரட்டை நகரங்களைக் கொண்ட ஒரு மாநகராட்சி.

2. திருநெல்வேலி - நெல் காத்த வேலி

ந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நூலான வேணுவனப் புராணத்தில் திருநெல்வேலியை  ‘வேணுவனம்’ என்கிறது. ‘வேணு’ என்றால் மூங்கில். அக்காலத்தில் மூங்கில் காடாக இருந்திருக்கிறது திருநெல்வேலி.  சிவ பக்தர் ஒருவர் இறைவனுக்குப் படைக்க நெல்லை காயவைத்திருந்தார். அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் மழை திடீரெனப் பெய்ய, அவர் பதைபதைத்து ஓடோடி வந்தார். அதற்குள் சிவனோ (நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டுக்  காத்ததால், வேணுவனம் என்று அழைக்கப்பட்டுவந்த ஊர்,  நெல்வேலி ஆனப் பெயர் பெற்றது. பின்னர், திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி என்று சொல்கின்றனர்.

3. நெல்லைச் சீமை - பயோகிராஃபி

பா
ண்டியர் பேரரசர்களின் இரண்டாம் தலைநகராகவும்,  ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் முக்கிய வர்த்தக நகரமாகவும் திருநெல்வேலி இருந்திருக்கிறது. பாண்டியர்களும், நவாப் மற்றும் நாயக்கர்களும் திருநெல்வேலியை `நெல்லைச் சீமை’ என்று அழைத்துள்ளனர்.

4. நெல்லையில் பாண்டியர்கள்

துரையை ஆட்சி செய்து வந்த பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காபூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர், மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்து, ‘நெல்லைப் பாண்டியர்’களாக ஆட்சி செய்துள்ளனர்.

5. திருநெல்வேலி ஜில்லா

பொ
திகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, கிழக்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கும் இடம் வரை `தீரவாசம்’ என்று அழைக்கப்படுகிறது. இதையே ஆங்கிலேயர்களால் திருநெல்வேலி ஜில்லா என்று அழைத்திருக்கின்றனர்.

6. பரந்துபட்ட நெல்லைச் சீமை

ற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளும் சேர்ந்த மொத்தப் பரப்பைத்தான் திருநெல்வேலிச் சீமை என்றும்,  நெல்லைச்சீமை என்றும் அழைக்கப்படுகிறது.

7. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது

தி
ருநெல்வேலி நகரம், மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இதற்கு ஆதாரமாக, ஆதிச்சநல்லூர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி, தாழியில் சில எலும்புக்கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்கள், உமி, அரிசி ஆகியவை முக்கியமான சான்றுகளாக உள்ளன. 

8. இராமாயணத்தில் திருநெல்வேலி

ராமாயணத்தில் திருநெல்வேலியில் உள்ள இடமென்று சொல்லப்படும் ஒரே இடம் மகேந்திரம். மலைத்தொடரின் தென்கோடிப் பகுதியின் உயர்ந்த மலையாகிய இமகேந்திரகிரி அகஸ்தியர் மலைக்கு தெற்கில் உள்ளது. ஆனால் கதையிலோ அனுமன் இலங்கைக்கு இங்கிருந்துதான் தாவினார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது பூகோள வரையறையின்படி சற்று வேறுபாட்டை கொண்டுள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

9. சீவலப்பேரி சான்றுகள்

சீ
வலப்பேரி கிராமத்தில், மருகால்தலை பகுதியில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலி மொழியில் அசோகர் கால கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரமும் இவ்வூரில் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 

10. சீனாவுடனான தொடர்பு

லங்குளம் தாலுகாவிலுள்ள கிராமம் உக்கிரன்கோட்டை. இங்கு, அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் காலத்தைச் சார்ந்த, 1200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு, 13 முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை சீனாவுடன் வர்த்தகம் நடைபெற்றதை உணர்த்தும் வகையில், சீன மண்பாண்டத் துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

11. மதுரைக் காஞ்சி மருதனார் பிறந்த ஊர்

ங்கரன்கோவிலுக்கு வடக்கே ராஜபாளையம் செல்லும் சாலையில் 25-வது கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாங்குடி. இவ்வூரில் தேவியாறு எனும் காட்டாறு ஓடுகிறது. இங்கு 2001-2002 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்தபோது, கி.மு இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் துண்டுகள் கிடைத்துள்ளன. மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக்கிழார் இந்த ஊரைச் சேர்ந்தவர்.

12. திருநெல்வேலி தினம்

பி
ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், திருநெல்வேலி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

13. நெல்லைத் தமிழ்

பொ
திகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். நெல்லைத் தமிழை, தமிழின் தொடக்கநிலை மற்றும் தூய வடிவம் எனலாம். பெரியோரை ‘அண்ணாச்சி’ என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்த தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்14. புவியியலைப் புரிந்துகொள்வோம்

 தி
ருநெல்வேலி மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 6823 சதுர கி.மீ. திருநெல்வேலி மாவட்டத்தில் உயரமான மலைகள், தாழ்வான சமவெளிகள், ஆறுகள் நீர்வீழ்ச்சிகள், நீண்ட கடற்கரை, அடர்ந்த மலைக் காடுகள், மணற்பாங்கான பகுதி மற்றும் வளமிக்க வண்டல் மண் பகுதி என  மாறுபட்ட நிலங்களைக் கொண்டிருக்கிறது.

15. ஐவகை நிலங்கள்

தி
ருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகள் மருத நிலம். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை ‘தேரிக் காடுகள்’ என்று அழைக்கின்றனர்.  நெய்தல் பகுதியாக கடற்கரை பகுதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது திருநெல்வேலி.

16. எல்லைகள் எதுவரை?

மே
ற்கே கேரளா, தென்கிழக்கில் மன்னார்வளைகுடா, வடக்கே விருதுநகர், கிழக்கே தூத்துக்குடி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் என எல்லைகளைக் கொண்டிருக்கிறது திருநெல்வேலி மாவட்டம்.

17. நண்பேண்டா - நகரங்கள்

தி
ருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகிறது. திருநெல்வேலி, ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளது.

18. பழைய நகரம் பாளையங்கோட்டை பாளையங்கோட்டையின் பழைய பெயர், திருமங்கை நகரம். இங்கு, கி.பி 1404 முதல் 1508 வரை விஜய நகரப் பேரரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ஆண்டுவந்தனர். இவர்கள், கன்னடப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கன்னடியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வெட்டிய கால்வாய் `கன்னடியன் கால்வாய்’ என்று அழைக்கப்படுகிறது.

19. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

மிழகத்திலுள்ள பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக விளங்கும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை, 1880 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தச் சிறையில்தான் சுதந்திரப் போராட்டகாலத்தில்  சுப்ரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார் போன்றோர்  அடைக்கப்பட்டனர்.

20. தசரா!

மிழ்நாட்டில் வித்தியாசமாக தசரா கொண்டாடப்படும் நகரங்களில் பாளையங்கோட்டையும் ஒன்றாகும். கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழக்கம் இங்கு இருந்துவருகிறது. புரட்டாசி மாத தசரா 10 நாள்களும், இங்குள்ள அம்மன் கோயில்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

21. பாலத்தின் வயது 176

நெ
ல்லையைச் சேர்ந்த சுலோச்சன முதலியார், தனது சொத்துக்களை எல்லாம் விற்று தாமிரபரணி ஆற்றுக்குக் குறுக்கே பாலத்தை உருவாக்கி, மக்களின் போக்குவரத்துக்கு வசதிசெய்து கொடுத்திருக்கிறார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த இந்த நற்காரியம், பல தலைமுறைகள் கடந்தும் அவரின் புகழைச் சுமந்துநிற்கிறது. அதுதான், ‘சுலோச்சன முதலியார் பாலம்’. இது திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கிறது. 

22. இரண்டடுக்குப் பாலம்

சியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஈரடுக்கு மேம்பாலம் இதுவேயாகும். 1973 ஆம் ஆண்டில், ரூபாய் 47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்கவே இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீட்டர் அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீட்டர் அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும். மேலே கனரக வாகனங்களும்,  கீழே மித ரக வாகனங்களும் செல்கின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

23. பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழ்

பொ
தியம், தென் பொதியம் என்றெல்லாம் போற்றப்படும் பொதிகை மலையில்தான் தமிழ் பிறந்தது என்பதை ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!’ எனத் தமிழன்னை போற்றப்படுகிறாள். அந்தப் பொதிய மலையில் தோன்றிக் கடலொடு கலக்கும் ‘தண்பொருநை ஆறு பற்றிய நாகரிகமே முதல் நாகரிகம்’ என்கிறார்  நுண்கலை அறிஞர் சாத்தான்குளம் அ. இராகவன்.

24. விடுதலைக்கென்று பிறந்த வீரம்

ந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து பூலித்தேவர், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் ஊட்டிய நாட்டுப்பற்று உணர்வால் மக்களிடையே கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1905 ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் சுதேசி இயக்க உணர்வு தீவிரமாகப் பரவியது.

25. தடையை மீறிய தாமிரபரணி

சு
தந்திரப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை, `சுயராஜ்ய நாளாக’ சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர்.  தாமிரபரணி ஆற்றங்கரையில், தடையை மீறி இந்த விடுதலை விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க  வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர், 1908 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.  கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், நான்கு பேர் இறந்துள்ளனர். இவர்களின் நினைவாக 1908 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி, திருநெல்வேலி எழுச்சி (Tinnevely riot of 1908) நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

26. தட்சிண கங்கை - தாமிரபரணி

 த
மிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் பயணித்து, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி தாமிரபரணிதான். இதை, தென்பாண்டி நாட்டின் செல்வி’, ‘பொதிகையின் குழந்தை’, ‘பொன் நிறத்துப்புனல் பெருகும் பொருநை’, ‘பாணதீர்த்தம்’,  ‘தட்சிண கங்கை’ என்று பலவாறாக அழைக்கின்றனர். தாமிரபரணி. ஊற்றெடுத்த மாவட்டத்திலேயே கடலில் கலக்கிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

27. தாமிரபரணி நதி மூலம்..!

பொ
திகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வருகிறது தாமிரபரணி. பூங்குளம் என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளமே தாமிரபரணியின் பிறப்பிடம். இந்தக் குளத்துக்கு அருகில், குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால், இதை `பூங்குளம்’ என்று அழைக்கிறார்கள். இதுதான் தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது தமிழக வனத்துறை.

28. தாமிரபரணியின் தங்கைகள்

பூ
ங்குளத்துக்கு முன்பாகவே பேயாறு, சிற்றாறு, உள்ளாறு ஆகிய மூன்று துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் காரையாறு, மயிலாறு, பாம்பாறு ஆகிய ஆறுகள், மேலணைப் பகுதியில் தாமிரபரணியுடன் இணைகின்றன. முண்டந்துறை வன ஓய்வு விடுதி அருகே தாமிரபரணியுடன் சேர்வலாறு சேர்ந்துகொள்கிறது. இப்படியாக வனப் பகுதியில் மட்டும் ஏழு ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன.

29. தண்ணீர் சுமக்கும் சுரங்கம்

சே
ர்வலாற்று அணைக்கும் காரையாறு அணைக்கும் இடையே பூமிக்குள் 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. காரையாறு மேலணையில் தண்ணீர் அளவு 40 அடிக்குக் மேலிருந்தால், அது தானாக சுரங்கப் பாதை வழியாக சேர்வலாறு அணைக்குச் சென்றுவிடும். அதேபோல,  மேலணையில் 40 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக மேலணைக்குச் சென்றுவிடும். மேலணையும் சேர்வலாறு அணையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பில் இருக்கின்றன. மேலணையில் 4 யூனிட்டுகள் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

30. கால்டுவெல் கண்ட பரணி

ரலாற்று ஆய்வாளர் பிஷப் கால்டுவெல், “கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இலங்கைத் தீவு ‘தம்பர பன்னி’, ‘தாப்ர பன்னெ’, ‘தாம்ப பன்னி’ என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது, அசோகரின் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள், அந்தப் பெயரிலேயே ஆற்றையும் அழைத்திருக்கலாம். அதுவே, பிற்காலத்தில் தாமிரபரணி ஆகியிருக்கலாம்” என்கிறார்.

31. தாமிரபரணி தவழும் இடங்கள்

பொ
திகை மலையிலேயே 26 கிலோமீட்டர் பயணம் செய்து, அதன்பின்பு 121 கிலோமீட்டர்  என்று மொத்த நீளத்தில் 1,750 சதுர கிலோமீட்டர் அளவுக்கு வளத்தைச் சேர்க்கிறது தாமிரபரணி. இதன் துணை நதிகள் மணிமுத்தாறு, கருணை, வரநதி, சிற்றாறு ஆகும்.  கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் உள்ள கன்னடியன் அணைக் கட்டுக்கு அடுத்து மணிமுத்தாறும், திருப்புடைமருதூரில் வராக நதியும், கடனா நதியும் கலக்கின்றன. பிறகு, பச்சையாறு முதலிய சிறிய சிற்றாறுகளும் சேர்ந்து  புன்னைக்காயல் வரை பயணிக்கிறது தாமிரபரணி.

32. அகத்தியர் அருவி

கத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பொதிகை மலையில் உருவாகி, ஏராளமான மூலிகைகளைச் சுமந்து பாய்வதால், தாமிரபரணித் தண்ணீருக்கு மருத்துவ குணம் நிறைந்தது. பாபநாசத்தில் அருவியாக மாறும்போது, இது அகத்தியர் அருவி  என்று அழைக்கப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

33. அணைகளின் அரவணைப்பு

பா
பநாசம், மணிமுத்தாறு, கடனா அணை, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, சேர்வலாறு, அடவிநயினார் போன்று 11 அணைகளைக் கொண்ட ஒரே மாவட்டம் திருநெல்வேலி.

34. அணை மின்சாரம்

பா
பநாசம் அணை, மேலணை, கீழணை என்று இரு பிரிவாகக் கட்டப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது மேலணை. இதில் 120 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம். 1944 ஆம் ஆண்டிலிருந்து மேலணையிலிருந்தும், கீழணையிலிருந்தும் நான்கு யூனிட்டுகள் மூலம் மொத்தம் 28 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

35. தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம்

மிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியமாக திருநெல்வேலி பெயர் பெற்றுள்ளது. முறையான பாசன வசதியால் தாமிரபரணி ஆற்று நீர் முழுமையாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குனேரி வட்டங்களில் மிகுதியாக நெல் பயிரிடப்படுகிறது. தாமிரபரணி தண்ணீர் மூலம், இரு போக நெல் சாகுபடி நடந்துவருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் பருத்தி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நீர்வளம் குறைவாக உள்ள பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, மிளகாய் போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

36. மலைவளம்

தி
ருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்குத்தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர்.

37. முகடுகள் போர்த்திய அகத்திய மலை

பொ
திகை மலையின் உயரம் 1800 மீட்டர்.அகத்தியர் மலை, மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை செழிப்பைப் பெறுகிறது.

38. ஐந்தலை பொதிகை

கத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கேதான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கு அப்பால் இம்மலைப்பகுதி 1800 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.

ஆட்சி அதிகாரம் செலுத்தும் ஊர்கள்

39. ஐந்து மண்டலங்கள்

மிழ்நாட்டில், ஆறாவது மிகப்பெரிய நகரம் திருநெல்வேலி. 1866 ஆம் ஆண்டு, திருநெல்வேலி நகராட்சி உருவானது. ஆரம்பத்தில் இந்த நகராட்சியில், நெல்லை சந்திப்பு மற்றும் பாளையங்கோட்டை என இரண்டு பகுதிகள் மட்டும் இருந்திருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு, மாநகராட்சியாக மாறிய பின்பு, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலபாளையம், பேட்டை என ஐந்து மண்டலங்கள்  உருவாகியுள்ளன.

40. மக்கள்தொகையில் எட்டாவது இடம்

தி
ருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 30,77,233 பேர். தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில் எட்டாவது இடத்தில் இருக்கிறது திருநெல்வேலி. இங்கு 29 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகவும், இளைஞர்கள் அதிக அளவில் வசிக்கும் மாவட்டமாகவும் உள்ளது திருநெல்வேலி. 

41. உள்ளாட்சி அமைப்புகள்

தி
ருநெல்வேலி மாவட்டத்தில், தற்போது ஏழு நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

42. ஏழு நகராட்சிகள் என்னென்ன?

ங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் என திருநெல்வேலி மாவட்டத்தில்   ஏழு நகராட்சிகள் உள்ளன.

43. ஊராட்சி ஒன்றியங்கள்

லங்குளம், அம்பாசமுத்திரம், கடையநல்லுர், கடையம், களக்காடு, கீழப்பாவூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சேரன்மாதேவி, பாப்பாக்குடி, பாளையங்கோட்டை, மானூர், மேலநீலிதநல்லூர், தென்காசி, வள்ளியூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாங்குனேரி என 19 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

44. பேரூராட்சிகள் 36

தி
ருநெல்வேலி மாவட்டத்தில் அச்சன்புதூர், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆயக்குடி, சேரன்மகாதேவி, குற்றாலம், ஏர்வாடி, கோபாலசமுத்திரம், இலஞ்சி, களக்காடு, கல்லிடைக்குறிச்சி, கீழப்பாவூர், மணிமுத்தாறு, மேலச்செவல், மேலகரம், மூலைகரைப்பட்டி, முக்கூடல், நாங்குநேரி, நாரணம்மாள்புரம், பணகுடி, பண்பொழி, பத்தமடை, புதூர், ராயகிரி, சாம்பவர் வடகரை, சங்கர் நகர், சிவகிரி, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, திருக்குறுங்குடி, திருவேங்கடம், திசையன்விளை, வடகரை கீழ்பிடாகை, வடக்கு வள்ளியூர், வாசுதேவநல்லூர், வீரவநல்லூர் என 36 பேரூராட்சிகள் உள்ளன.

45. சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தொகுதிகள்

தி
ருநெல்வேலி மாவட்டத்தில், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் என 10 சட்டமன்றத் தொகுதிகளும், திருநெல்வேலி மற்றும் தென்காசி என இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளும் உள்ளன.

46. தமிழ்நாட்டை மிஞ்சும் திருநெல்வேலி

1000
ஆண்களுக்கு 1023 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். இது தமிழ்நாட்டின் சராசரி ஆண் பெண் விகிதத்தைவிட அதிகம்.

47. அதிக கிராமங்கள்

தி
ருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் கிராமங்களைக் கொண்ட தாலுகாவாக இருக்கிறது சங்கரன்கோவில் (83 கிராமங்கள்) உள்ளது. மிகக் குறைந்த கிராமங்களைக் கொண்ட தாலுகாவாக செங்கோட்டை (9 கிராமங்கள்) இருக்கிறது. 

48. கிராம அளவில் மக்கள்தொகை

தி
ருநெல்வேலி மாவட்டத்தில், அதிக மக்கள்தொகை கிராமமாக சொக்கம்பட்டி என்ற கிராமம்  உள்ளது. இங்கு 18,220 பேர் வசிக்கின்றனர்.  தென்காசி தாலுகாவில் குற்றாலம் மலைக்கிராமங்களில் மிகக்குறைந்த மக்களே வசிக்கின்றனர்.

49. அதிக பரப்பளவு

ம்பாசமுத்திரம் தாலுகாவில் பாபநாசம் கிராமம் 35,692.44 ஹெக்டேர் பரப்பளவுடன் அதிக பரப்பளவைக் கொண்ட கிராமமாக இருக்கிறது. பாளையங்கோட்டையில் உள்ள ரெட்டியார்பட்டி கிராமம், 9.61 ஹெக்டேர் பரப்பளவை மட்டுமே பெற்று மிகச்சிறிய பரப்பளவைக்கொண்ட கிராமமாக இருக்கிறது. 

50. வானிலை மாறுகிறதே!

தி
ருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சராசரியாக 37 டிகிரி வெப்பநிலையையும், இதர மாதங்களில் 31 டிகிரிக்குக் குறைவான வெப்பநிலையையும் கொண்டிருக்கிறது. தென்மேற்குப் பருவமழைக் காலத்திலும், வடகிழக்குப்  பருவகாலத்திலும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு பரவலான மழைப் பொழிவைக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக 814 மிமீட்டர் மழை பதிவாகிறது.

51. ரயில் சேவை

நெ
ல்லை சந்திப்பு, தமிழ்நாட்டின் தென்பகுதியில் மிக முக்கியமான, பழைமையான ரயில் சந்திப்பு. இது, தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1903 ஆம் ஆண்டு நெல்லைச் சந்திப்பிலிருந்து செங்கோட்டை வரை முதல் ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது. பின்னர்,  இந்த ரயில் சேவை கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டது.

52. தினசரி ரயில் பயணங்கள்

தி
ருநெல்வேலி சந்திப்பிலிருந்து தினமும் சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, குருவாயூர், ஹெளரா, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, திருச்செந்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கொல்லம் நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

53. ரயில் நிலையங்கள்

தி
ருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி டவுன், பாளையங்கோட்டை, பேட்டை, தாழையூத்து, தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள் உள்ளன.

54. தினமும் ஏழு லட்சம் பேர்

தி
ருநெல்வேலி மாவட்ட போக்குவரத்துக் கழகம், 1974 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஏற்படுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 472 வழித்தடங்கள் 693 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் ஒரு நாளைக்கு ஏழு லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

55. பாரு பாரு பஸ் ஸ்டாண்டைப் பாரு!

ள்ளூர் பயணங்களுக்கு பாளை பஸ் நிலையமும், திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. வேய்ந்தாங்குளத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூரு, சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் இதர நகரங்களுக்கும் பேருந்துகள் கிளம்புகின்றன.

56. தேசிய நெடுஞ்சாலையில் ஊர்!

துரையில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 91 கி.மீட்டர் தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலை 7 ஐ ஒட்டி அமைந்துள்ளது திருநெல்வேலி மாநகரம். தேசிய நெடுஞ்சாலை       7 A, பாளையங்கோட்டையையும், தூத்துக்குடியையும் இணைக்கிறது.

57. நான்கு திக்கையும் இணைக்கும் சாலைகள்

தி
ருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலைகள் வடக்குத் திசையில் மதுரை மற்றும் சங்கரன்கோவிலையும், தெற்குப் பகுதியில் நாகர்கோவிலையும், மேற்கில் செங்கோட்டை மற்றும் கொல்லத்தையும், கிழக்குப் பகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர் நகரத்தையும் இணைக்கின்றன.

58. விமான நிலையம்

தி
ருநெல்வேலியிலிருந்து கிழக்கே 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாகைக்குளம் கிராமத்தில், தூத்துக்குடி விமான நிலையம் அமைந்துள்ளது. தினமும் இங்கிருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் மதுரை சர்வதேச விமான நிலையமும், 130 கிலோமீட்டர் தூரத்தில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும் உள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

59. கடற்கரை மாவட்டம்

தி
ருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரைப்பகுதி 48 கி.மீட்டருக்கு நீண்டுள்ளது.  இங்கு, கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூந்தன்குழி, இடிந்தகரை, பெருமணல், கூத்தப்புளி என ஏழு மீனவ கிராமங்கள் உள்ளன.  இங்குள்ள மீனவர்கள் நெய்தல் பணியைச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

60. பல வகையான காடுகள் நிறைந்த வனப்பகுதி

தி
ருநெல்வேலி மாவட்டத்தில் 1,22,055 ஹெக்டேர் பரப்பளவில் வனபகுதி விரிந்துள்ளது. இதில்தான் முண்டந்துறை மற்றும் களக்காடு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி  மலையுடன் இணைந்திருக்கின்றன.

61. விலை மதிப்புடைய கோங்கு மரங்கள்

ல்வேறு புவியியல் காரணிகளால், தெற்கே வெப்பமண்டல பசுமைக் காடுகள், மேற்குப் பகுதியில் கடற்கரை வெப்பமண்டல பசுமைக் காடுகள், தெற்குப் பகுதியில் ஈரமான கலப்பு இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள், புதர்க் காடுகள் என 40,253,16 ஹெக்டேர் பரப்பளவில்  பல வகையான காடுகள் உள்ளன.  இங்குள்ள காடுகளில் விலை மதிப்புடைய கோங்கு மரங்கள் உள்ளன.

62. ஸ்லீப்பர்  மரங்கள்!

 செ
ங்கோட்டைப் பகுதிகளில் உள்ள காடுகளில் ரயில் பாதை போட பயன்படும் ‘ஸ்லீப்பர்’ கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகைகளும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

63. காகிதக்கூழ் ரீட்டா!

நா
ங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டைக் காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்கு பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

64. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்!

தி
ருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. இது, பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ் பெற்றது. இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள் உள்ளன.

65. தேசிய விருது

மிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் களக்காடு முண்டந்துறை ஆகும். காடுகளைப் பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு மக்களுடன்கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், உலக வங்கியுடன் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் (‘Best coexistence and buffer zone management’) முக்கியப் பணியாற்றியதற்காக, இக்காப்பகத்துக்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது. டிசம்பர், 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 45 சிறுத்தைகளும் 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

66. திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம்

 ப
ல்லுயிர்ப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்திய காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 2003 ஆம் ஆண்டு  சீர் செய்யப்பட்டது. இந்த வகையில் தமிழ்நாட்டில் இரண்டு பல்லுயிர் பாதுகாப்பகங்கள் உருவாக்கபட்டன. அதில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம் ஆகும்.

67. அகத்திய மலையில் உயிரிக்கோளம்

கத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் (Agasthyamala Biosphere Reserve) 2001 ஆம் ஆண்டு, 1,351.50 சதுர மைல் பரப்பளவில் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இது, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளையும், கேரளத்தில் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மாவட்ட எல்லைகளை கொண்டதாகவும் பரவியுள்ளது. முட்புதர்க்காடு, ஈர இலையுதிர்க்காடு, பகுதி பசுமைமாறா காடுகளை உள்ளடக்கிய காப்பகத்தில் பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது. புலி, சிங்கவால் குரங்கு, மலைமொங்கான் மற்றும் தேவாங்கு போன்ற விலங்குகள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன.

68. குளிச்சா குற்றாலம்!

யற்கைவளம் பொருந்திய மேற்குத்தொடர்ச்சி மலையில் மூன்று சிகரங்களைக் கொண்ட திரிகூட மலையின் ஒரு பகுதியில் உருவாகும் ஆற்றின் பெயர் சிற்றாறு. இந்த சிற்றாறு, குற்றாலம் பகுதியில் இயற்கை புடைசூழ பல அருவிகளாக வீழ்ந்து வளம் சேர்க்கின்றன. இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, என சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம். காடு மலைகளைக் கடந்துவரும் தண்ணீர் பல்வேறு மூலிகைகளையும் கடந்து வருவதால், அருவிக்குளியல் மூலிகைக்குளியலாகவே உள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

69. தென்னகத்தின் ஸ்பா

யற்கை நமக்கு அளித்த அழகான சுற்றுலாத் தலம், குற்றாலம். `தென்னகத்தின் ஸ்பா’ என்று பெருமையோடு சொல்லப்படும் இந்த குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. பேரருவியைக் குற்றால அருவி என்றழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கிப் பரந்து விரிந்து கீழே விழுகிறது.

70. செண்பகாதேவி அருவி

பே
ரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ தூரம் நடைப்பயணத்தில், செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி, தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து, 30 அடி உயரத்தில் அருவியாகக் கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. 

71. தேன் பாயும் தேனருவி

செ
ண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது, தேனருவி. இந்த அருவியின் அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு அவ்வப்போது தடையாணைப் பிறப்பிக்கப்படும்.

72. ஐந்து கிளைகள்... நாற்பது அடி உயரம்

கு
ற்றாலத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஐந்தருவி. திரிகூடமலையின் உச்சியில் 40 அடி உயரத்திலிருந்து உருவாகி, சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து, 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில், பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு, சபரிமலை சாஸ்தா கோயிலும் முருகன் கோயிலும் உள்ளன.

73. பழத்தோட்ட அருவி

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்ந்தருவியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பழத்தோட்ட அருவி. இங்கு, முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. மேலும், இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத் துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் சிறுவர் பொழுதுபோக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

74. குழந்தைகளுக்குப் பிடித்த புலியருவி

கு
ற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. குழந்தைகள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது. குற்றாலத்திலிருந்து கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது பழைய குற்றாலம் அருவி. தேனருவி அருகே அமைந்துள்ளது பாலருவி. இது, ஆற்றின் தொடக்கமே ஆனாலும் அருவி என்றே அழைக்கப்படுகிறது.

75. மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி

கு
ற்றாலத்திலிருந்து 48 கி.மீ தொலைவில் உள்ளது  மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி. இந்த அருவில் ஆண்டு முழுவதும் நீர் வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்பு உள்ளது. இங்கிருந்து மணிமுத்தாறு அணையையும் பார்வையிடலாம்.

76. கண்ணுப்புளி மெட்டு

செ
ங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்குத் திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர்த் தேக்கத்தின் மேல் அமைந்துள்ளது கண்ணுப்புளி மெட்டு. இது, சுற்றுலாப் பயணிகளின் கண்களைக் கவர்ந்திழுக்கும் தளமாக உள்ளது.

77. சீசன் எப்போது

 ப
ருவமழை மாதங்களிலும், குளிர்காலங்களிலும் மழைச்சாரலுடன், இதமான காற்று சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கின்றன. குற்றாலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம், ஜூலை முதல் மார்ச் மாதங்கள். கோடைகாலத்தில் வறட்சியின் காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும்.

78. குற்றாலக் குறவஞ்சி!

கு
ற்றாலத்தில் கோயில் கொண்டுள்ள குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்து பாடப்பெற்ற நூல், திருக்குற்றாலக் குறவஞ்சி. இது, தமிழ் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாக உள்ளது. குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல், வடகரை அரசில் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம்.

79. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயங்கள்

தி
ருநெல்வேலியிலிருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ளது கூந்தன்குளம். இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில், 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது பறவைகள் புகலிடம். சரணாலயமாக 1994 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இங்கு, சைபீரியாவிலிருந்து வரும் பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டிவாயன் என நீர்ப் பறவைகள் ஆண்டு தோறும் வருகைபுரிகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

80. பறவைகளுக்காக தீபாவளிக்கு தடா!

கூ
ந்தன்குளம் கிராம மக்களின் அரவணைப்பில், பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைத்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பாதுகாத்துக் கொள்கின்றன.  இங்கு வரும் பறவைகளின் நலன் கருதி இங்குள்ள மக்கள் தீபாவளி நாள்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதில்லை என்பது மற்றுமொரு சிறப்பு.

வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய அழகிய ஊர்கள்

81. இயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம்

தி
ருநெல்வேலிக்குத் தென்மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான ஊர், அம்பாசமுத்திரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்த ஊர், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு, பல கோயில்களும், நீர்நிலைகளும் நிறைந்திருப்பதால் அம்பா என்றும், சமுத்திரம் என்றும் சேர்ந்து அழைக்கப்படுகிறது.

82. கலை நுட்பங்கள் வாய்ந்த அரிகேசவ நல்லூர்

ம்பாசமுத்திரம் வட்டத்தில், வீரவநல்லூரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அரிகேசவநல்லூர். இங்குள்ள சிவன் கோயிலில் சடாவர்மன் குலசேகர மன்னனின் காலத்திலேயே  (கி.பி 1190 - 1221) கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பல சிற்பங்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கலை நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

83. முள்ளிநாட்டு வடமேல் பிடாகை

ம்பாசமுத்திரத்துக்கு வடமேற்கே ஆழ்வார்குறிச்சி அமைந்துள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள ஆவுடையம்மன் கோயில் மற்றும் வள்ளியப்பர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சார்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. வள்ளியப்பர் கோயிலில் கி.பி 1612 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள நாயக்கர் கால கல்வெட்டில் இவ்வூர் `முள்ளிநாட்டு வடமேல் பிடாகை ஆழ்வார்குறிச்சி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

84. தென் திருவாரூர்

ம்பா சமுத்திரத்துக்கு வடக்கே அமைந்துள்ளது `இடைக்கால்’ ஊர். இங்கு அமைந்துள்ள தியாகராஜசுவாமி சிவன் கோயிலில் (கி.பி 1563) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, இவ்வூரை, `தென் திருவாரூர்’ என்று குறிப்பிட்டுள்ளது.

85. இலஞ்சி

தெ
ன்காசிக்கு வடமேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இலஞ்சி. இங்கு பிற்காலப் பாண்டியர் காலத்தில் எடுக்கப்பட்ட குமாரசுவாமி கோயிலும் உள்ளது. இவ்வூர், `தென்வாரிநாட்டு இலஞ்சி எனும் சுந்தரபாண்டிய நல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

86. ஸ்ரீவல்லப சதுர்வேதி மங்கலம்

துரை - திருநெல்வேலி சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் சிற்றாற்றின் வடகரையில் அமைந்துள்ளது கங்கைகொண்டான்.  சிற்றாற்றின் தென்கரையில் சோழர் காலத்தின் கைலாசநாதர் கோயில், இவ்வூரின் வரலாற்றைப் பறைசாற்றுகிறது.  ராஜராஜனின் ஆட்சியாண்டுகளில் இவ்வூர் ஸ்ரீவல்லப சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடப்படுகிறது. ராஜேந்திர சோழன் கங்கையாற்றுப் படுகையின் படையெடுப்புக்குப் பின் இவ்வூர் ‘கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

87. ஓ மானே மானே!

ங்கைகொண்டான் பஞ்சாயத்து டவுனில் 700 ஏக்கர் பரப்பளவில் புள்ளி மான்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைக்கு வெளியே தென்கோடியில், புள்ளி மான்களுக்கான ஒரே சரணாலயம்  இதுதான்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்88. கடையம்

தெ
ன்காசிக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது கடையம். இதை இரு பகுதிகளாக கீழ்கடையம், மேற்கடையம் என்று அழைக்கின்றனர். சுந்திர பாண்டியனின் கி.பி 1216-1244 ஆம் ஆண்டில் `கோனாடு கடையம் எனும் விக்கிரம பாண்டியநல்லூர்’ என்று அழைத்துள்ளனர்.

89. கடையநல்லூர்

தெ
ன்காசிக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் தென்காசி - ராஜபாளையம் பெருவழியில் அமைந்துள்ளது கடையநல்லூர். இவ்வூரின் கடகாலீஸ்வரர் சிவன் கோயிலும், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் பிரசித்திபெற்று விளங்குகின்றன.  இந்தப் பகுதியில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியைப் பறைச்சாற்றும் வகையில் பல விதமான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில், இவ்வூரை ‘வடவாரி நாட்டுக் கடையநல்லூர்’ என்று அழைத்துள்ளனர்.

90. கரிவலம்வந்த நல்லூர்

ங்கரன்கோவிலுக்கு வடக்கே 11 கி.மீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கரிவலம்வந்த நல்லூர். இவ்வூரின் வரலாறு பெருங்கற்காலத்திலிருந்தே தொடங்குவதைக் காட்டும்வண்ணம் இங்கு முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. பச்சை வண்ணக் கண்ணாடி, மஞ்சள் வண்ண கண்ணாடிக் காதணிகள், மரம் மற்றும் களிமண்ணாலான காதணிகள், சங்கு வளையல்கள் மற்றும் சோழர் காலத்துச் செப்புக் காசுகளும் இங்கு கிடைத்துள்ளன.

91. கல்லிடைக் குறிச்சி

தி
ருநெல்வேலிக்கு மேற்கே 35 கி.மீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் அருகில் அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்குள்ள நாகேஸ்வரமுடையார் கோயிலும், கிரிகிருஷ்ணன் கோயிலும் முதலாம் சடாவர்மன் குலசேகர பாண்டியனால் (கி.பி. 1206-1244 ல்) கட்டப்பட்டது. 

92. மொறு மொறு அப்பளங்கள்

தி
ருநெல்வேலிக்கு அல்வா என்பதுபோலவே கல்லிடைக்குறிச்சி அப்பளமும் பேமஸ்.  இங்கு சுத்தமாக, தரமாக தயாரிக்கப்படும் மொறு மொறு அப்பளங்கள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜென்டில்மேன் திரைப்படத்தில் வந்த அப்பளக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவை.

93. திருநெல்வேலியின் ஊட்டி    

ல்லிடைக்குறிச்சி்யிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மணிமுத்தாறு.  இங்கிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில், பல கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள  திருநெல்வேலியின் குட்டி ஊட்டியான மாஞ்சோலையை அடையலாம். இங்கே செல்ல வனத்துறையின் அனுமதி அவசியம்.

94. போவோமா ஊர்கோலம்!

மா
ஞ்சோலைக்கும் மேலே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.

95. மாஞ்சோலை எஸ்டேட்

சி
ங்கம்பட்டி ஜமீன்தார் தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை 99 வருடத்துக்கான குத்தகை ஒப்பந்தம் மூலமாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் ‘ (B.B.T.C ) என்ற தனியார் நிறுவனத்துக்கு 1930  ஆம் ஆண்டில் கைமாற்றினார். அப்படி கைமாற்றப்பட்ட நிலம்தான் தற்போது மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியுள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

96. களக்காடு

நா
ங்குனேரிக்கு மேற்கே 14 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களக்காடு. இவ்வூரில் ஜமதக்னீஸ்வரர் கோயில், திருவேங்கடநாதர் கோயில், பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன.

97. களக்குடி

தி
ருநெல்வேலிக்கு மேற்கே சுமார் 24 கி.மீட்டர் தொலைவில் உக்கிரன்கோட்டை அருகில் அமைந்துள்ளது, களக்குடி. இங்குள்ள கல்லணை ஒன்று பழைய கோயில் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.

98. காரிசாத்தான்

ங்கரன்கோவில் வட்டத்தில் உள்ளது காரிசாத்தான். இவ்வூரின் பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகள், சீனத்துப்பானை ஓடுகள் மற்றும் மணிகள் பல கிடைத்துள்ளன. சீனத்துப் பானை ஓடுகள் இங்கு கிடத்திருப்பதால், முற்காலத்தில் காரிசாத்தான் பகுதி வணிகத்தலமாக விளங்கியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

99. காருக்குறிச்சி

ம்பாசமுத்திரத்துக்குத் தென்கிழக்கே, திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் பெருவழியில் அமைந்துள்ளது காருக்குறிச்சி. இதை வடக்குக்காருக்குறிச்சி என்றும் தெற்குக்காருக்குறிச்சி என்றும் இரு பகுதிகளாக பிரித்துள்ளனர். வடக்குக் காருக்குறிச்சியில் வரதராஜப் பெருமாள் கோயில், குலசேகர நாதர் கோயில், சாஸ்தாகோயில் உள்ளன.  இவ்வூரைக் காரிக்குறிச்சி எனும் சுந்தரபாண்டிய நல்லூர் என்று அழைத்திருக்கின்றனர்.

100. கீழப்பாட்டம்

பா
ளையங்கோட்டையிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் கான்சாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீழப்பாட்டம் கிராமம். இவ்வூரில் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய மேட்டின் மேல் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனால் சீரமைக்கப்பட்ட சிவன் கோயில் அமைந்துள்ளது. இவரது காலத்தில் இந்த ஊர் மகுதாண்டநம்பிக்குறிச்சி’ என்றழைக்கப்பட்டுள்ளது.

101. கீழப்பாவூர்

தெ
ன்காசி வட்டத்தில், தென்காசிக்குக் கிழக்கே பாவூர் சத்திரத்திற்கு வடக்கே அமைந்துள்ளது  கீழப்பாவூர். இவ்வூரில் திருவாலீஸ்வரர் சிவன்கோயில், வெங்கடாசலபதி பெருமாள் கோயில் உள்ளன. இவ்விரு கோயில்களும் பிற்காலப் பாண்டியர் கலைப்பாணியை எடுத்துச் செல்வதாக உள்ளன.

102. கீழாம்பூர்

ம்பாசமுத்திரத்துக்கு மேற்கே 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கீழாம்பூர். இவ்வூரில், புதிய கற்காலக் கருவி ஒன்று தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன.

103. குன்றத்தூர்

தி
ருநெல்வேலி நகரத்திலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குன்றத்தூர். இக்கிராமத்தின் அருகில் சிறுமண் குன்று ஒன்று உள்ளதால், இவ்வூர் குன்றத்தூர் எனப் பெயர் பெற்றது.

104. சங்கரநயினார் கோயில்

தி
ருநெல்வேலி - ராஜபாளையம் செல்லும் சாலையில் திருநெல்வேலிக்கு வடமேற்கே அமைந்துள்ளது சங்கரநயினார் கோயில்.  இங்கு ஒரே வளாகத்தில் மூன்று கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில் தென்காசிப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டதாகும். 

105. சிங்கிகுளம்

தி
ருநெல்வேலியிலிருந்து 27 கி.மீட்டர் தொலைவில் பச்சையாற்றங்கரையில் அமைந்துள்ளது சிங்கிகுளம். இவ்வூரிலுள்ள சிறுமலையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.  இவ்வூர், ராஜ ராஜபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

106. தென்காசி

தி
ருநெல்வேலிக்கு மேற்கே 50 கி.மீட்டர் தொலைவில் தென்காசி அமைந்துள்ளது. இவ்வூர் பராக்கிரமபாண்டியனால் (கி.பி. 1422 - 1463) உருவாக்கப்பட்டதாகும். வடகாசியில் உள்ள ஆலயம் பழுதடைந்ததால். தென்காசியில் ஒரு கோயில் எழுப்ப வேண்டுமென்று, இறைவன் கனவில் தோன்றி கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி தென்காசியில்  காசிவிசுவநாதர் ஆலயத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

107. தென்புரிபுவனம்

ம்பாசமுத்திரம் வட்டத்தில் வீரவநல்லூரிலிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர், தென்திரிபுவனம். திருவிதாங்கூர் மன்னர்,  தான் பிறந்த பரணி நட்சத்திரத்தில் தென்திரு புவனமுடைய நாயனாருக்கு விழா நடத்துவதற்காக நிலம் தானமாக வழங்கியுள்ளார்.

108. நெற்கட்டஞ்செவல்

சி
வகிரி வட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு வடமேற்கே 7மைல் தொலைவில், நெற்கட்டஞ்சேவல் அமைந்துள்ளது. மறவர் பாளையங்கள் பதினெட்டுள் நெற்கட்டஞ்சேவல் ஒரு பாளையமாகும்.

109. கோட்டைக்கருங்குளம்

நா
ங்குநேரி வட்டத்தில் வள்ளியூரிலிருந்து கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டைக்   கருங்குளம். ஆரம்ப காலத்தில் கருங்குளம் என்றும் சீகாந்தநல்லூர் என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. `சீகாந்தம்’ என்பது 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சிசெய்த மூன்றாம் ராசசிம்ம பாண்டியனின் பட்டப்பெயர்களுள் ஒன்று. இம்மன்னனின் சிறப்புப் பெயரைப் பெற்றிருப்பதால் இவ்வூர், 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் தொல்லியல் துறை நிபுணர்கள்.

110. சீவலப்பேரி

பா
ளையங்கோட்டை வட்டத்தில் உள்ளது சீவலப்பேரி. இக்கிராமம் சீவல்லபப்பேரேரி என்றும், ஏரியின் மறுகால் அருகில் அமைந்துள்ளதால் `மறுகால்தலை’ என்றும் பெயர் பெற்றது. இங்கு சிறு குன்று ஒன்று உள்ளது. இக்குன்று, `மறுகால்தலை மலை’ என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் தென்பகுதியில் இயற்கையான குகை உள்ளது. இக்குகையில், சமண முனிவர்கள் பயன்படுத்திய கல்படுக்கைகள் காணப்படுகின்றன.

111. சுத்தமல்லி ஆன சதுர்வேதி மங்கலம்

தி
ருநெல்வேலிக்குத் தென்மேற்கே, சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சுத்தமல்லி. பிற்காலப் பாண்டியர் காலத்திலிருந்து வீரகேரளகுலசேகரதேவர் காலம் வரை இவ்வூர் சதுர்வேதி மங்கலமாகவே இருந்துள்ளது.

112. ரோமானியர்களுடன் தொடர்பு

தெ
ன்காசி வட்டத்தில் சாம்பவர் வடகரையிலிருந்து இரண்டு கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஊர் விந்தனூர். இவ்வூரில் உள்ள `ஒட்டன்குளம்’ அருகில் உள்ள மேடான பகுதியில் ரோமானியரின் பானைத் துண்டுகள் கிடைத்துள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்113. வானரமுட்டி

ங்கரன்கோவில் வட்டத்தில் கோவில்பட்டி-கழுகுமலைச் சாலையில் அமைந்துள்ளது வானரமுட்டி       ஊர். வானரங்கள் ராவணனுடன் போரிட முடியாமல் பின்வாங்கி இவ்வூரில் வந்து முட்டி நின்றதால், ‘வானரமுட்டி’ என இவ்வூர் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவ்வூருக்கு `சுந்தர பாண்டிய நல்லூர்’ என்று புதுப்பெயரிடப்பட்டுள்ளது.

114. வாசுதேவநல்லூர்

சிவகிரி வட்டத்தில் மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்துக்கு அருகே அமைந்துள்ளது வாசுதேவநல்லூர். இவ்வூர் தொன்மை வரலாறு கொண்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பாண்டியர்களின் காலத்தில் இவ்வூரை `ஆரிநாட்டு வாசுதேவநல்லூர்’ என்றழைத்துள்ளனர்.

115. வழுதூர்

ம்பாசமுத்திரம் வட்டத்தில் அமையப் பெற்றதுள்ளது வழுதூர்.  இவ்வூரிலுள்ள அக்னீஸ்வரர் சிவன்கோயில் பிற்காலப் பாண்டியர் கலைச் சிற்ப  பாணிக்குச் சான்றாக விளங்குகிறது.

116. மேலப் புளியங்குடி

சி
வகிரி வட்டத்தில் புளியங்குடிக்கு மேற்கே 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேலப்புளியங்குடி. இங்கு, குறைந்தளவே மக்கள் வசிக்கின்றனர்.  இப்பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து `வாழைமலை ஆறு’ பாய்கிறது. மேலப்புளியங்கூடிக்கு வடக்கே ஒரு சிறு குன்றினைத் தாண்டிச் சென்றால் `கொங்காணியப் பழங்குடி மக்கள்’ வசிக்கிறார்கள்.

117. மேலப்பாவூர்

தெ
ன்காசிக்குக் கிழக்கே பாவூர்சந்திரத்துக்கு வடக்கே அமைந்துள்ளது மேலப்பாவூர். இவ்வூரில், தென்காசிப் பாண்டியர்களால் கட்டப்பட்ட ராஜகோபாலசுவாமி கோயில், மீனாட்சி சொக்கநாதசுவாமி கோயில் ஆகிய இரு பழைமையான கோயில்கள் உள்ளன.

118. மேலப்பாட்டம்

தி
ருநெல்வேலியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலப்பாட்டம். இங்கு, திரிபுராந்தீஸ்வர் கோயில், வெங்கடாசலபதி கோயில் பழைமையான வரலாற்றுச் சின்னங்களாக  உள்ளன. இக்கோயில்கள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

119. மேலச்செவல்

ம்பாசமுத்திரத்துக்குக் கிழக்கே 16 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது மேலச்செவல். இவ்வூரில் விஜயநகர மன்னர்களான மகாமண்டலேஸ்வரர் ராமராஜவிதவ தேவ மகாராஜா, சின்னதிம்மியதேவ மகாராஜா, வீரபிரதாப சதாசிவ மகாராயர் ஆகியோர் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வூர், `முள்ளிநாட்டு பிரம்மதேயம் வீரகேரளநல்லூர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

120. மன்றாடுதலும் வழக்காடுதலும்

திருநெல்வேலிக்கு வடமேற்கே 13-வது கி.மீ தொலைவில், திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது மானூர். இவ்வூரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் நீதிபரிபாலனத்தையும், ‘மன்றாடுதல்’ என்று வழக்காடுதலையும் குறிப்பிட்டுள்ளது.

121. மாறாந்தை

தி
ருநெல்வேலியிலிருந்து 19 கி.மீட்டர் தொலைவில் திருநெல்வேலி - தென்காசி சாலையில் இவ்வூர் அமையப் பெற்றுள்ளது மாறாந்தை.  இவ்வூரின் தொன்மைக்குச் (கி.பி. 907-953) சான்றாக `கைலாசநாதர்’ கோயில் உள்ளது.

122. சோழர்கள் ஆட்சி செய்த பகுதி

ம்பாசமுத்திரதுக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றுக்கும் கடனா நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மன்னார்கோயில்.  இவ்விரு ஆறுகளும் முடிகொண்ட சோழப்பேராறு என்றும், ராசராசப்பேராறு என்றும் குறிப்பிடப்படுகிறது.

123. மருதூர் அணை

பா
ளைங்கோட்டைக்குக் கிழக்கே உள்ளது மருதூர் அணை. இது, தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையாகும். இது, பார்ப்பதற்கு அழகிய தோற்றமுடையதாக உள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன் கட்டப்பட்ட அணைகளுள் இதுவும் ஒன்றாகும்.

124. பொன்னாக்குடி

பா
ளையங்கோட்டையில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது பொன்னாக்குடி. இவ்வூர் `பாண்டியபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கோயில் 15 ஆம் நூற்றாண்டிலும், சிவன் கோயில் 16 ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டவை.

125. பழைய குற்றாலம்

கு
ற்றாலத்திலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில், 5 கி.மீ தொலைவில் உள்ளது பழைய குற்றாலம். இங்கு, `அழுதகன்னிஆறு’ எனும் சிற்றாறு ஓடுகிறது. இவ்வாற்றின் இரு கரைகளிலும் காணப்படும் நுண்கற்காலக் கருவிகள், சாயர்புரத்தில் கிடைக்கும் நுண்கற்காலக் கருவிகளைப் போன்றே உள்ளன. இதன்மூலம், இப்பகுதியின் வரலாறு கி.மு 4000லிருந்து தொடங்கியுள்ளமையைக் கொண்டு இந்த ஊரின் தொன்மையை அறியலாம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

126. பாட்டக்குறிச்சி

தெ
ன்காசியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம் பாட்டக்குறிச்சி. தென்காசியிலிருந்து இவ்வூருக்குச் செல்லும் சாலையின் வடபுறத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன.

127 பைம்பொழில் பன்பொழி ஆன கதை

தெ
ன்காசிக்கு வடமேற்கே 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பன்பொழி. இவ்வூரில் `நகரீஸ்வரமுடையார்’ எனும் பிற்காலப் பாண்டியர் கோயில் உள்ளது. இவ்வூர், `பைம்பொழில்’ என்றும், பன்பொழி என்றும் அழைக்கப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டிலேயே இவ்வூர் சிறப்புற்று விளங்கியிருக்கிறது.

128. நம்பித்தலைவன் பட்டயம்

நா
ன்குநேரி வட்டத்தில் ஏர்வாடியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில், நம்பித்தலைவன் பட்டயம் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் ‘மயிலாடுபாறை’ எனும் பெயரில் பாறை ஒன்றுள்ளது. இப்பாறையின்மீது சிவன் கோயில் ஒன்றுள்ளது. இவ்வூர் அமைந்துள்ள பகுதியை ‘வைகுந்த வளநாடு’ என்று ஒரு காலத்தில் அழைத்துள்ளனர்.

129. தாருகாபுரம்

தெ
ன்காசி-மதுரை சாலையிலுள்ள சுப்பிரமணியபுரம் என்ற ஊரிலிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஊர் தாருகாபுரம். இவ்வூர், பண்டைய காலத்தில் மலையடிக்குறிச்சி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பாண்டியருக்கும் சேரருக்கும் இடையே ஏற்பட்ட பூசல் தீர, இவ்வூரில் உள்ள இறைவன் ‘கானகறுத்த மகாதேவர்’ உதவியதால் இவரை ‘பிணக்கறுத்தவர்’ என்றும், ‘மத்தியஸ்த நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

130. தாமரைச்செல்வி

தி
ருநெல்வேலியிலிருந்து 18 கி.மீட்டர் தொலைவில் உள்ளது தாமரைச் செல்வி. இவ்வூரில் கி.பி 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் காணப்படுகிறது.

131. சேரன்மாதேவி

தி
ருநெல்வேலிக்கு மேற்கே சுமார் 16 கி.மீட்டர் தொலைவில், தாமிரபரணி ஆற்றில் தென்கரையில் அமைந்துள்ளது சேரன்மாதேவி. வடதமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைப்போல தென்தமிழ்நாட்டில் சேரன்மாதேவி கோயில்கள் நிறைந்து விளங்கின்றன. இக்கோயில்கள், சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டவை.

132. மறக்க முடியாத ரயில் பயணம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் செங்கோட்டையில் இருந்து அம்மலைத் தொடரின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் புனலூருக்கு செல்லும் ரயில் பாதை இது! மலைப்பகுதியின் இயற்கை வனப்பு, குகைகள், மலைகளை இணைக்கும் பாலங்கள் என இது ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தரும் இந்த ரயில் பயணமாகும்!

மண்ணின் மைந்தர்கள்

133. மாவீரன் பூலித்தேவன்

பூ
லித்தேவன் (1715–1767) நெற்கட்டாஞ்செவ்வலைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்ட வீரன். இதனால், இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்துக்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

கி.பி 1767  மே மாதம் 13 ல் வாசுதேவநல்லூர்க் கோட்டையின்மீது டொனால்டு காம்பல் தலைமையிலான படை தாக்கியது. இதில் இறுதிவரை போராடிய பூலித்தேவன், தோற்கும் நேரத்தில் தன் ஆட்களுடன் தலைமறைவாகி விட்டார்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

134.ஒண்டிவீரன் மணிமண்டபம்

நெ
ற்கட்டாஞ்செவ்வல் பாளையக்காரன் பூலித்தேவனின் பலமே அவனது படைதான். அவனது படை வீரர்கள், தங்களது பாளையத்துக்காகவும், பூலித்தேவனுக்காகவும் உயிரைக் கொடுப்பதைக் கூட பெருமையாக நினைத்தார்கள். நெற்கட்டாஞ்செவ்வல் பாளையத்தில் வசித்த மக்கள். பூலித்தேவனுக்கு நிறைய படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவன் ஒண்டி வீரன். பூலித்தேவனின் போர் வாள் என்று இவனை அழைத்தார்கள். பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் மணிமண்டபம் உள்ளது.

135. காருக்குறிச்சி அருணாசலம்

சே
ரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர் காருக்குறிச்சி. நாதஸ்வர வித்வான் அருணாச்சலம் பிறந்த ஊர் இது. சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசைவிழாவில்  இவரது வாசிப்பின் சிறப்பு கருதி வானொலி நிலையத்தார், வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு வரை நிகழ்ச்சியை தொடர்ந்து ஒலிபரப்பினர். `கொஞ்சும் சலங்கை’ என்னும் திரைப்படத்தில், அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துள்ள `சிங்காரவேலனே’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

136. ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணன் பிள்ளை

1827
ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் பிறந்தார் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. இவர், ஏராளமான கிறிஸ்துவப் பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பே `இரட்சண்ய மனோகரம்’.  1887 ஆம் ஆண்டு தலைசிறந்த காப்பியமான `இரட்சண்ய யாத்ரீகம்’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.

137. கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்


 1896
ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் பிறந்தவர் காயிதேமில்லத். இவரது இயற்பெயர் முகமது இஸ்மாயில். காயிதேமில்லத்தின் சமுதாயப்பணி அவரை அரசியலுக்கு இழுத்தது. அரசியல் வாழ்க்கையில் தன் கண்ணியத்தையும் நேர்மையையும் அணு அளவு கூட இழக்காமல், தேசப்பணி, மார்க்கப்பணி புரிந்தார் காயிதேமில்லத்.

138. டிவிஎஸ் நிறுவனர்

ந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனத்துக்கு, ஓர் அடித்தளத்தை அமைத்த தி.வே.சுந்தரம் ஐயங்கார், திருக்குறுங்குடி என்ற ஊரில் 1877 ஆம் ஆண்டு பிறந்தார். தொடக்கத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராகத் திகழ்ந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே. அவரது புதுமையான தொலைநோக்குச் சிந்தனைகளும், கடின உழைப்பும், உறுதியுமே ‘டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்டு சன்ஸ் நிறுவனம்’ அமைய உதவியாக இருந்தது.

139. நாராயணசாமி சீனிவாசன்

தெ
ன்னிந்தியாவில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட இந்தியா சிமென்்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள சீனிவாசன் பிறந்த  ஊர், கல்லிடைக்குறிச்சி. இவர், International Cricket Council (ICC) அமைப்பின் தலைவராகவும்  பதவி வகித்துள்ளார்.

140. ராபர்ட் கால்டுவெல்

ரா
பர்ட் கால்டுவெல், திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு வகித்த இவர், திருநெல்வேலியில் 50 ஆண்டுகள் தங்கி தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளிலும் ஈடுப்பட்டார். இந்த ஆய்வுகளின் பெரும்பேறாக `திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of the District of Tinnevely) என்ற நூலை எழுதியுள்ளார்.

141. பரிமேலழகர்

லகப் பொதுமறை திருக்குறளுக்கு உரை எழுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்த பரிமேலழகர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

142. குமரகுருபரர்

நீ
திநெறி விளக்கம், கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை போன்ற நூல்களை எழுதிய குமரகுருபரர் பிறந்த மாவட்டம், திருநெல்வேலி.

143. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்

மிழ் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும், உ.வே.சாமிநாத ஐயரிடமும் தமிழ் பயின்றார். இரு பொருள்பட சாதுர்யமாகப் பேசுவதில் எப்போதும் ரெட்டியாருக்கு விருப்பம். கம்பருக்குப் பின்னும் பாரதியாருக்கு முன்னும் தமிழ்ப் பாட்டு நடைக்கு புத்துயிர் ஊட்டியதில் அண்ணாமலை ரெட்டியாருக்குத் தனியிடம் உண்டு. அவர் பாடிய காவடிச் சிந்து பாடல்கள், தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.

144. ஹரிவராஸனம் பாடலுக்குச் சொந்தக்காரர்

பரிமலையில் ‘ஹரிவராஸனம் விஸ்வமோஹனம்’ என்ற புகழ்பெற்ற யேசுதாஸ் பாடிய பாடல் ஒலித்த பிறகுதான் நடை சாத்தப்படுகிறது. இந்தப் பாடலை எழுதியவர், கம்பங்குடி ஸ்ரீகுளத்து ஐயர். இவரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி.

145.தொ.மு.சி.ரகுநாதன்

1923
ம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். இவரது முதல் சிறுகதை 1941 ல் பிரசண்ட விகடனில் வெளி வந்ததது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு 1942 ல் சிறைக்குச் சென்றார். 1944 ல் தினமணியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். 1951 ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனை ஆனது. இவர் 1954 முதல் 1956 வரை சாந்தி என்ற முற்போக்கு மாத இதழை நடத்தினார்.அந்த இதழ் மூலம், டேனியல் செல்வராஜ், சுந்தரராமசாமி,ஜெயகாந்தன்,கி.ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.

146.டி.கே.சி.ரசிகமணி

ங்சன் அருகே உள்ள வண்ணார்பேட்டையில்,தீத்தாரப்ப முதலியார்,மீனாம்பால் தம்பதிகளுக்கு 1882 ம் ஆண்டு பிறந்தார். டி.கே.சி.ரசிகமணி என்ற   டி.கே.சிதம்பரநாத முதலியார். இவர் வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்தவர். 1930 முதல் 1935 வரை சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றினார். இவரது வீட்டு முற்றத்தில் நடைபெறும் இலக்கிய கூட்டத்தில், மீ.ப.சோமு,கல்கி,ரா.பி.சேதுப்பிள்ளை, ராஜகோபாலாச்சார்யார். போன்ற தமிழறிஞர்கள்      பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை சின்னமாக ஆண்டாள் கோவில் கோபுரத்தை பரிந்துரை செய்ததும் இவரே.

147. சாகித்ய அகாடமி விருதை அள்ளிய மாவட்டம்

லக்கியத்துக்கான மதிப்புமிகு விருதான சாகித்ய அகாடமியின் விருதினை அதிக அளவு பெற்ற மாவட்டம் நெல்லை.  அ.மாதவன் (செங்கோட்டை), ஜோ.டி.குரூஸ் (உவரி), தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி), வல்லிக்கண்ணன் (திருநெல்வேலி) தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி), ஆதவன் (கல்லிடைக்குறிச்சி), சு.சமுத்திரம் (திருநெல்வேலி), வண்ணதாசன் (திருநெல்வேலி).

148. சுவாமி சிவானந்தர்

1887
ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார் சிவானந்தர். மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.   ஆன்மிக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பினார். ரிஷிகேஷத்தில் தெய்வ நெறிக் கழகம் (Divine Life Society) என்ற ஆசிரமத்தைத் தொடங்கினார். சுவாமி சிவானந்தர் விட்டுச் சென்ற ஆன்மிகப்  பணி, இலவச மருத்துவப் பணி மற்றும் கல்விப் பணியை இன்றும் அவரது சீடர்கள் பத்தமடையில் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

149. அமர்சேவா சங்கம்

கு
ற்றாலத்துக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர், ஆயக்குடி. இங்கே இராமகிருஷ்ணன் என்கிற தன்னலமற்ற மனிதர் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதுகாவலராக இருக்கிறார். இவர், கடற்படை அதிகாரிக்கான பணிக்கான தேர்வில் கயிறு ஏறும் போது கைதவறிக் கீழே விழுந்து தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே உறுப்புகள் செயல்படா நிலை ஏற்பட்டது. மிகவும்  நிலைகுலைந்துபோன அவருக்கு நம்பிக்கை ஊட்டியவர், டாக்டர் அமர். அவர் பெயரால் தன் சொந்த கிராமத்தில் அமர்சேவா சங்கத்தைத் திறம்பட நடத்திவருகிறார். அமர்சேவா சங்க வளாகத்தில் ஆரம்பப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும், மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி மையமும், ஆசியாவிலேயே சிறப்பான முதுகுத்தண்டுவட சிகிச்சை மையமும் செயல்படுகிறது.

150. பாரதி கேட்ட நிலம்!

ந்திய சுதந்திரப் போராட்டக்காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் என்னும் சிற்றூரில் செல்லம்மாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்பு, இரண்டு வருடங்கள்   (1918-1920) கடையத்தில் தங்கியிருந்து பச்சைப் பசேலென்ற வயல்களுக்கு அருகில் உள்ள பாறையில் அமர்ந்துதான் கவிதை எழுதியுள்ளார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய பாடல்தான் `காணி நிலம் வேண்டும்’ என்பது குறிப்பிடத்தக்கது.

151. பாரதி படித்த பள்ளி

நெ
ல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா இந்து மேல் நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் தன்னுடைய இளம்வயது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இந்தப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

152. வ.உ.சி மணிமண்டபம்

செ
க்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு திருநெல்வேலியில் 75 லட்சம் செலவில்  வ.உ.சி. மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தில், சிதம்பரனார் இயக்கிய சுதேசிக் கப்பலின் மாதிரி, சிறையில் அவர் இழுத்த செக்கின் மாதிரி, வெண்கலத்தால் ஆன வ.உ.சி-யின் சிலை, மற்றும் நூலகம் ஆகியவை உள்ளன.

153. வாஞ்சிநாதன் நினைவு மண்டபம்

ங்கிலேய கவர்னர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட வீர வாஞ்சிநாதன் (1886-1911) நினைவைப் போற்றும் வகையில் அவர் பிறந்த செங்கோட்டையில் நினைவு மண்டபமும், மணியாச்சி ரயில் நிலையத்துக்கு `வாஞ்சி மணியாச்சி’ ரயில் நிலையம் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

154. ஜார்ஜ் ஆர்ச்

ங்கிலாந்தின் மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைச் சிறப்பிக்கும் வகையில், 1936 இல் திருநெல்வேலியில் `மன்னர் ஜார்ஜ், ராணி மேரி நினைவு ஆர்ச்’ நான்கு தூண்களுடன் 30 அடி உயரத்துக்குக் கட்டப்பட்டது.

155. தொழில் வளர்ச்சி

நெ
ல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன.

156. ஆலங்குளம் காய்கறிச் சந்தை

ம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள ஆலங்குளம், காய்கறி உற்பத்திக்கு பெயர்பெற்றது. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.

157. திருநெல்வேலி செவ்வாடு

மே
லநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் திருநெல்வேலிக்கு சிறப்பு சேர்க்கின்றன. இந்த ஆடுகளில் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என  இரண்டு வகையாக வளர்க்கப்படுகின்றன.

158. சங்கரன்கோவில் பிரியாணி

ங்கரன்கோவில் பகுதியில் பரிமாறும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள  ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புக்குக் காரணம்.

159. புளியங்குடி எலுமிச்சம் பழம்

தி
ருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி பகுதியில் எலுமிச்சைக்கான தினசரி சந்தை உள்ளது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம். இப்பகுதியில் விளையும் எலுமிச்சம் பழத்தின் நீர்ப்பதம் குறைய அதிக நாளாகும் என்பதே இதன் சிறப்பு.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

160. தென்காசி மிளகு

தெ
ன்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகியவையும் சங்கரன்கோவில், நாங்குநேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் பனைமரங்கள் மிகுதி.

161. பத்தமடை பாய்

தா
மிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் தரமான, காய்ந்த கோரைப்புற்களைக் கொண்டு, பத்தமடைப் பாய்கள் பின்னப்படுகின்றன. மற்ற பாய்களை விட இந்த பத்தமடைப் பாய்கள் லேசாகவும், மிருதுவாகவும் உள்ளன. இவை 140 இழை எண்ணிக்கை கொண்டிருக்கும். பத்தமடைப் பாய்க்கு புவிசார் குறியீட்டு பெறப்பட்டுள்ளது.

162. நெல்லைக்கு அல்வா வந்த கதை

தி
ருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார், புனித யாத்திரையாக வட இந்தியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கி சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கியவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு தொடங்கி, அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகிவிட்டது.

163. இருட்டுக்கடை அல்வா

ல்வா என்றதும் நம்  நினைவுக்கு வருவதென்னவோ இருட்டுக்கடை அல்வாதான். 1940 களில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு, இப்போது அவருடைய மூன்றாவது தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் அல்வா செய்ய கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் அரைப்பதும் அல்வாவின் பிரத்யேகச் சுவைக்குக் காரணமாகச் சொல்கிறார்கள். கடை ஆரம்பிக்கப்பட்ட புதிதில், ஒரே ஒரு காண்டா விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்தி சாயும் நேரத்தில்தான் கடை திறக்கப்படுவது வழக்கம் என்பதால், இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாறி ‘இருட்டுக்கடை’ என்றாகிவிட்டது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

164. திருநெல்வேலி மாப்பிள்ளை சொதி..!

ல்யாண வீடுகளில், கல்யாணத்துக்கு அடுத்த நாள் பரிமாறப்படும் மாப்பிள்ளை சொதியின் சுவைக்கு மயங்காதவர் கிடையாது. தேங்காய்ப் பாலால் செய்யப்படும் இந்த சொதிக் குழம்பு எளிதில் செரிமானம் அடைவதற்காக இஞ்சித் துவையலுடன் பரிமாறப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்165. பிரானூர் பார்டர் பரோட்டா கடை

மிழக-கேரள எல்லையான பிரானூர் பார்டர், செங்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள பரோட்டா கடைகள் பிரபலம். இந்தக் கடைகளில் மாலை 5 மணி முதல் குற்றாலத்தின் தென்றல் காற்றோடு கம கம சால்னா வாசனையும் வீசும். கொத்து பரோட்டா போடும் சத்தமும் கவனத்தை ஈர்க்கும்.  குற்றால சீசன் காலத்தில் குற்றாலம் வருபவர்கள், குற்றால அருவியில் குளித்து முடித்ததும் பிரானூர் பார்டர் பரோட்டா கடைகளுக்குச் சென்று உணவருந்துவது வழக்கமாகியிருக்கிறது.

புண்ணியத்தலங்கள்

166. இறைவனின் இரு சபைகள்

சி
வபெருமான் நடனமாடிச் சிறப்பித்த சபைகள், ஐம்பெரும் சபைகள் (பஞ்ச சபைகள்) என்றுஅழைக்கப்படுகின்றன. அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு சபைகள் உள்ளன. ஒன்று தாமிர சபை – நெல்லையப்பர் திருக்கோயில், மற்றொன்று சித்திர சபை – குற்றாலநாதர் திருக்கோயில்.

167. நெல்லையப்பர் - சுயம்பு லிங்கம்

மு
ன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக்கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுவதும் அந்தக் கல்லின் மேல் கொட்டிவிட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாள்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்துக்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற, கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டுபோய் நிற்க, வானில் ஓர் அசரீரி கேட்டதாம். அதன்படி அங்குத் தோண்ட, தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக்கொண்டு  நெல்லையப்பர் கோயில் உருவானது.

168. தாமிர சபை

த்தலமானது பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிர சபையாகும். காந்திமதி அம்பாள் நெல்லையப்பர் ஆலயம், தெற்கு வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. `ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்’ உள்ளன. இவற்றைத் தட்டிப்பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

169. தேரோடும் விதியிலே

ன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும். ஆனித் திருவிழாவின் 9 ஆம் நாள்,  தேர்த் திருவிழா ஆகும். 514 வருடங்களாக தங்கு தடையின்றி தொடர்ந்து ஓடும் ஒரே தேர் நெல்லையப்பர் தேர்தான். இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.

170. திருக்குறுங்குடி

நெ
ல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குறுங்குடி அழகிய நம்பிராயன்கோயில். வராக புராணத்தில் மகாவிஷ்ணு வராக வடிவத்தில் லட்சுமி தாயாருடன் தங்கியிருந்த சிறிய குடில் என்று பொருள்படும் இடம் என்பதால் குறுங்குடி எனப் பெயர்பெற்றது. வராக அவதாரத்தில் மிகப்பெரிய வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணு வடிவில் குறுகிய இடம் என்பதால், `குறுங்குடி’ என்று மற்றொரு பெயர்க் காரணமும் கூறப்படுகிறது.

171. நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில்

மூ
லவர் மண்ணுக்கு அடியில் இருந்து சுயம்பாக வந்த எட்டு திவ்ய தேசங்களில் ஒன்று என்ற பெருமையையும் தன்னகத்தே பெற்று பெருமையுடன் விளங்கக்கூடிய பெருமாள் கோயில். மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது இக்கோயிலின் சிறப்புகளுள் ஒன்றாகும்.

172. சங்கரநாராயணன் ஆலயம்

ந்த ஆலயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து காட்சிதருகிறார்கள்.இங்கு பார்வதி தேவியை கோமதி அம்மன் என்னும் பெயரில் வழிபடுகின்றனர்.

173. ஆடித் தபசு

ரி சிறந்தவரா... ஹரன் சிறந்தவரா என்ற சர்ச்சை எழுந்தபோது உமா தேவி குழப்பமுற்றாள். ஒருபக்கம் அண்ணன், இன்னொரு பக்கம் கணவன் யார் பெரியவர் என்று அறியும் பொருட்டு சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தாள். இறைவனும் அம்பாளின் சந்தேகம் நீக்க ஹரியும் நானே ஹரனும் நானே என்று காட்சிதந்தார். ஆடித் தபசு திருநாளில் இறைவன் மாலையில் சங்கர நாராயணனாகவும், இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சிதருகிறார். மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருவிழாவில், 5 லட்சத்துக்கும்  மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்174. ஊசிக் கோபுரம்

பா
ளையங்கோட்டையில், நெல்லை அப்போஸ்தலன்  என்று அழைக்கப்பட்ட  ரெய்னிஸ் அடிகளார், அதிக எண்ணிக்கையில் பள்ளிகளையும் ஆலயங்களையும் நிர்மாணித்துக்கொண்டிருந்த நேரத்தில், மக்களின் வழிப்பாட்டுக்காக ஒரு பெரிய தேவாலயத்தைக் கட்டத் தீர்மானித்தார். பாளையங்கோட்டையில், 1826 ஜனவரி மாதம் மக்களின் ஆதரவுடன், ஆறே மாதத்தில் 40 அடி நீளம், 17 அடி அகலத்தில் அழகான ஆலயம் உருவானது. இந்த ஆலயத்தைப் பிரமாண்டமாக உருவாக்கியவர், இதற்குப் பெயர் எதுவும் வைக்கவில்லை. `பரிசுத்த கிறிஸ்த்துவ ஆலயம்’ என்று பின் காலத்தில் பெயர் பெற்றாலும் இதன் பெயர் ஊசிக்கோபுரம் என்றே நிலைத்துப் போனது.

175. புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம்

தி
ருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ திருத்தலம், அனைத்து சமயத்தினரும் வழிபடும் ஸ்தலமாக உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது.

176. ஆத்தங்கரை பள்ளிவாசல்

சை
யத் அலி பாத்திமா, ஷேக் முகமது என்னும் இரு சூஃபி ஞானிகளுக்கு இங்கு கோபுரக் கூண்டுகள் உள்ளன. அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் நம்பியாறு, பள்ளிவாசல் அருகே கடலில் கலக்கிறது. இங்கு, பிப்ரவரி மாதம் நடைபெறும் கந்தூரி திருவிழாவின் போது, பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்.

177. பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா

தி
ருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா மிகவும் புகழ்பெற்றது. இங்கு, ஒவ்வொரு வருடமும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

178. உவரி கப்பல் மாதா பேராலயம்

ப்பல் மாதா தேவாலயம் கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது. அதன்பிறகு, இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

179. சித்திரம் பேசுதடி

 தி
ருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம். குமார கிருஷ்ணப்பா நாயக்க மன்னரால் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணாபுரம் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் வீரப்ப நாயக்கர் மண்டபம், அரங்க மண்டபம் ஆகியவற்றில் சுமார் 6 அடிக்குக் குறையாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

180. தென்னகத்து புஷ்கரம்

டந்த அக்டோபர் மாதம், தாமிரபரணி நதியில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது.  142 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் புஷ்கர விழாவின் போது தாமிரபரணி அன்னையின் திரு உருவச்சிலை குறுக்குத்துறை பகுதியில் நிறுவப்பட்டது.

181. நேர்த்தியான மண்பாண்டங்கள்

தி
ருநெல்வேலி  மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், புதுக்குடி, காருக்குறிச்சி மற்றும் கூனியூர் ஆகிய ஊர்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குலாளர் குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் செய்யும் மண்பாண்டங்கள், அழகாகவும் நேர்த்தியாகவும் நல்ல தரத்துடனும் இருக்கின்றன.

182. கலைநயம் மிகுந்த பிரம்பு பொருள்கள்   

செ
ங்கோட்டை விசுவநாதபுரத்தில் தயாராகும் பிரம்பு மூங்கில் பொருள்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவை கலைநயமும், சீரான பின்னல்களும், நேர்வரிசை அமைப்பும் கொண்டு நேர்த்தியாகத் தயாரிக்கப்படுவை.

183. சுண்ணாம்பு வளம்

ரா
மையன்பட்டி, தாழையூத்து பகுதிகளில் 4 மீட்டரிலிருந்து 15 மீட்டர் ஆழம் வரையிலும் சுண்ணாம்புத் தாதுக்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு ஏழு லட்சம்  டன் வரையிலான சுண்ணாம்புத் தாது வெட்டியெடுக்கப்படுகிறது. 

184. பீடி சுற்றும் தொழில்

தி
ருநெல்பிவேலி மாவட்ரடத்தாதில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.  விவசாயத்துக்கு  அடுத்து பீடி தயாரிப்பில் அதிகளவில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, திருநெல்வேலியில் பேட்டை, சுத்தமல்லி, மேலப்பாளையம், முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர் போன்ற பகுதிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பீடிதொழிலாளர்கள் உள்ளனர்.

185. திருநெல்வேலி சிமென்ட்!

தி
ருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள சங்கர் சிமென்ட் தயாரிப்பு தொழிற்சாலை பெரியது. திருநெல்வேலியில் சிறு அளவிலான பஞ்சாலைகள், நூற்பாலைகள், காகித தொழிற்சாலை, பீடி கம்பெனிகளும் நிறைந்திருக்கின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

186. இல்மனைட் - கார்னெட் மணல்

கா
ர்னெட் கனிமம் கப்பல், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மைப்படுத்தவும், கண்ணாடி, செயற்கைக் கற்கள், அலுமினியம், டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது கார்னெட். பெயின்ட், பிளாஸ்டிக், வெல்டிங் ராடு, டைட்டானியம், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது இல்மனைட் கனிமம். இந்த இரண்டு கனிமங்களும்  நம்பியூர் மற்றும் உவரி கடற்கரை மணலில் நிறைந்திருக்கின்றன.

187. நாங்குனேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா

தொ
ழில் வளர்ச்சியில் பின் தங்கியதாகக் கருதப்படும் நாங்குனேரி பகுதியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.

188.தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட்

ங்கிலேயரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவர்கள் திருநெல்வேலியில் தொடங்கிய கல்விப் பணிகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து, இன்று தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்னும் பெயரைப்  பெற்றுத்தந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டதில் தொடக்கப் பள்ளிகள் 1,460, நடுநிலைப்  பள்ளிகள் 411, உயர்நிலைப்பள்ளிகள் 90, மேல்நிலைப் பள்ளிகள் 129  உள்ளன. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டலக் கல்லூரியும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் 5, ஐடிஐ-க்கள் 7, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 8 என உள்ளன. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்189. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1990 செப்டம்பர் 7 ஆம் நாள், தொடங்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழக தென்பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு, இப்பல்கலைக்கழகம் உருவானது. பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்துடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 102 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

190. திருநெல்வேலி அரசு மருத்துவமனை   

பா
ளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில், திருநெல்வேலி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 1961 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில், 1400 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு, புற நோயாளிகள் பிரிவில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைபெற்றுச் செல்கின்றனர்.

191. கட்டபொம்மன் கப்பற்படை மையம்

ந்தியாவின் கடல் பாதுக்காப்புக்காக உள்ளது கப்பல் படை. இது, இங்குள்ள விஜயநாரணம் பகுதியில் இருக்கிறது. கப்பல் படை கப்பல்கள், நம் கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு உடனுக்குடன் தகவல்களை அனுப்பிவைக்கும். இங்கு அந்தத் தகவல்கள்  பெறப்பட்டு, கடற்படைக்கு இங்கிருந்து  அனுப்பப்படும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

192. கூடங்குளம் அணுமின் நிலையம்

ரா
தாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் உதவியுடன் இந்திய அணுமின் கழகத்தினால் உருவாக்கப்பட்டது. நாட்டின் அணுமின் உலைகளில் இதுவே மிக அதிகப்படியான மின் உற்பத்தி செய்கிறது.

193. மகேந்திரமலை இஸ்ரோ ஆராய்ச்சி மையம்

ணகுடியை அடுத்த மகேந்திரகிரிமலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ராக்கெட்டுகளுக்கான அதிநவீன கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பதற்கான மையத்தை அமைத்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கிரையோஜெனிக் எந்திரம்,  ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

194. காற்றாலையிலிருந்து மின்சாரம்

 த
மிழகத்தின்  காற்றாலை மின்சார உற்பத்தியில் திருநெல்வேலியின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலில் இருந்து வீசும் காற்று மணிக்கு 4 கிலோ மீட்டர் முதல் 25 கிலோமீட்டர் வரை வீசும் காற்று பணகுடி, வீராணம், பழவூர், ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காற்றாலைகளை இயங்கவைக்கிறது. இங்கு, 5,700 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.

195. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம்

நெ
ய்வேலியின் NLC நிறுவனம், செழியநல்லூர் பகுதியில் 3 லட்சத்து 50 ஆயிரம் சூரியசக்தி மின்தகடுகளைப் பொருத்தி, 100 மெகாவாட் திறனுள்ள மின்சாரத்தைத் தயாரிக்கிறது.

196. அறிவியல் மையம்

பெ
ங்களூருவின் விஸ்வேஸ்வரையா அறிவியல் மையத்தின் ஒரு பிரிவாக, 1987 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி முதல் செயல் பட்டுவருகிறது. இரவு நேரத்தில்  வானில் நட்சத்திரங்கள், நிலவு, கோள்கள் போன்றவற்றைக் காண விசேஷ தொலைநோக்கி, கோளரங்கம் முதலியவற்றை உள்ளடக்கியது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

197. திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்

 த
மிழக அரசின் அருங்காட்சியகத் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் 20 மாவட்ட அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. இதில், சிற்பப் பூங்கா, சிறுவர் பூங்கா, அறிமுகக் கூடம், மானுடவியல் கூடம், தொல்லியல் கூடம், இயற்கை அறிவியல் கூடம், ஓவியக் கூடம் என ஐந்து காட்சிக்கூடங்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் தொல்லியல் அகழ்வாய்வுக் களங்களிலிருந்து பெறப்பட்ட முதுமக்கள் தாழிகள், தானியக் குதிர்கள், சிற்பங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

198. குற்றாலம் தொல்பொருள் அருங்காட்சியகம்

தெ
ன் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்ததாக, தொல்லியல் துறை அருங்காட்சியகம் குற்றாலத்தில் மட்டுமே உள்ளது. இங்கு கற்காலக் கருவிகள்,  பழைமையான கடவுள் சிலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்

199 அண்ணா விளையாட்டரங்கம்

ங்கு பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக அண்ணா விளையாட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது.  சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கத்தில் வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி  ஆகிய விளையாட்டுகளுக்கு தனித்தனி ஆடுகளங்கள் உள்ளன. மேலும் நீச்சல் குளம்,  தடகளம், மற்றும் உள் விளையாட்டரங்கங்கள் உள்ளன.

200. கிரிக்கெட் மைதானம்

ந்தியா முழுவதும் நடைபெறும் புகழ்பெற்ற ரஞ்சி கோப்பை கிரிகெட் தொடர், சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடை பெறுகிறது. கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரும் இங்கு நடைபெறுகிறது.

தொகுப்பு : சுபாஷிணி வெங்கடேஷ்
உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி:
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #5 - திருநெல்வேலி 200 - இன்ஃபோ புக்