Published:Updated:

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!
`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள 'போகர் மலை' என அழைக்கப்படும் போதமலை உச்சியில் இருக்கும் கல்திட்டைகள், கற்கால பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களில் ஒன்று. எனவே, இதை, அரசு பாதுகாக்க வேண்டும் என  தற்போது சேலம் வரலாற்று சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டங்களான சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரிய பொக்கிஷங்களைத் தேடிச்செல்வதும், அவற்றைப் பாதுகாக்க அரசுக்கு உதவுவது போன்ற பணியைத் தங்களது கடைமைகளாகக் கொண்டுசெயல்பட்டு வருகிறது, சேலம் வரலாற்று சங்கம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதமலை கல்திட்டைகள் பற்றி சேலம் வரலாற்று சங்கத்தினரிடம் பேசினோம், ``நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  அருகே உள்ளது வடுகம் கிராமம். இங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. போதமலை அடிவாரம். சுமார் 10 கிலோ மீட்டர் கடந்தால் மலையை அடையாளம். அதேபோல வெண்ணந்தூர், பனமரத்துப்பட்டி எனப் பல்வேறு ஊர்கள் வழியாக போதமலைக்கு செல்லும் பாதை உள்ளது. அக்கால மனிதர்கள், இறந்தவர்களைப் புதைத்து, அதன்மேல் மூன்று பக்கம் சுவர் போல் கற்களை நிறுத்தி, மேலே பெரிய பலகைபோன்ற  தட்டைவடிவ கல்லை படுக்கை வாக்கில் வைத்து, வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். 

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

சில இடங்களில், முன் துளையுடனும் அமைப்பார்கள். அவ்வழியே இறந்தவர்களின் ஆன்மா வெளியே வந்து செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை. உள்ளே இறந்தவர் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பும் பொருள்களையும் உடன் புதைப்பார்கள். அதை அவர்கள் செல்லும் புதிய உலகத்தில் பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இவற்றின் காலம் சுமார் 5000 ஆண்டுகளும், அல்லாது அதற்கு மேலும் இருந்திருக்கும். அன்றைக்கே பெரிய பாறைகளை வெட்டி, செதுக்கி அவ்வளவு பெரிய எடையைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். 

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

இது, அவர்களின் கற்காலக் கருவிகளின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். நாங்கள், பல்வேறு கல்திட்டைகளைப் பார்த்துள்ளோம். அதுவும் தகவல்தொடர்பு வசதி எதுவுமே இல்லாத அகாலத்தில், ஏறக்குறைய உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.  மனித இனத்தை இணைக்கும் ஆதாரமான ஒன்று, உணர்ந்து கொள்ள முடியா ஒன்று உலகில் உள்ள மனித மனங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்றே எங்களுக்கு இதன்மூலம் தெரியவருகிறது.

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

அந்த கல்திட்டை நடுவில் கருங்கற்களால் அடுக்கப்பட்ட கிணறு போன்ற அமைப்பும், அதைச்சுற்றி சுமார் 20 கல்திட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாயகன்ற எரிமலையைப் போன்ற கற்களால் ஆன கிணறு அமைப்பு போன்று உள்ளது. இதைத்தான், மலைவாழ் மக்கள் குள்ள மனிதர்கள் வீடு, பாண்டியர்கள் வீடு என்கின்றனர். இது, முன்னோர் கல்லறை என்பதால் யாரோ பரப்பி விட்ட பொய். இது, மலைவாழ் மக்களின் கல்லறைதான். இந்த அரிய பொக்கிஷத்தை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்" என்றனர். 

`போதமலை கல்திட்டைப் பாதுகாக்க வேண்டும்' - சேலம் வரலாற்று சங்கத்தினர் வேண்டுகோள்!

இதுபற்றி வெல்லக்கல்பட்டியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளரான துரைசாமியிடம் கேட்டோம், ``போதமலையில் உள்ள கல்திட்டை, அவர்கள் கூறுவது போலக் கல்லறையாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது ஒரு வித்தியாசமான கல்லறை. அன்றைக்கு வயதானவர்கள் மிகுந்த உடல் நலம் குன்றும்போது, அவர்களை ஊரின் எல்லையில் உள்ள பகுதிக்கு எடுத்துச்சென்று இதுபோல கல்லறை அமைத்து, அங்கு விட்டுவிடுவார்கள். அவர்களைத் தினமும் கவனித்துவருவார்கள். இறந்தபின் அவர்களின் உடைமைகளை அங்கே போட்டுவிடுவார்கள். தற்போது இந்த நடைமுறை இல்லை. அதனால், பல்வேறு கட்டுக்கதைகள் நடைமுறையில் உள்ளன. இதுபற்றிஅறிந்தவர்கள் பலரும் அங்கே சென்றுவருகின்றனர். அவர்கள், புதையல் இருக்குமோ என அதையெல்லாம் வீணாக்கி வருகின்றனர். அவற்றையெல்லாம் பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை" என்றார்.