2020 முதல், பெட்ரோல் - டீசல் கார்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் 2.5 லட்சம் ரூபாய்! | 'Price Gap Between Petrol & Diesel Cars to Reach 2.5 Lakhs in April 2020', Says Maruti Suzuki

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (02/01/2019)

கடைசி தொடர்பு:18:54 (02/01/2019)

2020 முதல், பெட்ரோல் - டீசல் கார்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் 2.5 லட்சம் ரூபாய்!

பெட்ரோல் இன்ஜினுடன் ஹைபிரிட் சிஸ்டம் சேரும்போது, வழக்கத்தைவிட 30% அதிக மைலேஜ் கிடைக்கிறது; இதுவே டீசல் இன்ஜினுடன் ஹைபிரிட் சிஸ்டம் சேர்க்கப்பட்டால், மைலேஜில் 25% வளர்ச்சி மட்டுமே இருக்கும்!

BS-VI... ஆட்டோமொபைல், உலகில் தற்போது பேசுபொருளாக இருக்கும் விஷயங்களில் பிரதானமானது இதுதான். இந்த மாசு விதிகளுக்கு ஏற்ப தற்போது விற்பனையில் இருக்கும் டீசல் கார்களின் இன்ஜின்களை மேம்படுத்துவதற்கு, ஒவ்வொரு இன்ஜினுக்கும் கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிடும் எனத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, ஒரு காரின் பெட்ரோல் மாடலுக்கும், டீசல் மாடலுக்கும் தோராயமாக 1 லட்சம் ரூபாய் வரை விலையில் வித்தியாசம் வருவதால், ஏப்ரல் 2020 முதல் இது 2.5 லட்சம் ரூபாய் எனும் புதிய உச்சத்தை எட்டியிருக்கும்!

தவிர, இந்தியாவில் தற்சமயம் வெறும் 3 கார்கள் மட்டுமே BS-VI இன்ஜின்களைக் கொண்டுள்ளன (Benz S 350d & E-class All-Terrain, BMW X1 sDrive20i) என்பதுடன், டெல்லியில் ஏற்கெனவே BS-VI எரிபொருள் விற்பனையில் இருக்கிறது. இதுகுறித்து மாருதி சுஸூகியின் பொறியியல் பிரிவின் Senior Executive Director சி.வி.ராமனிடம் பேசினோம்.

2020

"ஏப்ரல் 2020 முதல் விற்பனை செய்யப்படவிருக்கும் BS-VI பெட்ரோல் காருக்கும் BS-VI டீசல் காருக்கும் இடையேயான விலையில், 2 - 2.5 லட்சம் ரூபாய் வரை வித்தியாசம் இருக்கலாம். இப்போதைய சூழ்நிலையிலேயே, டீசல் கார்கள் மீதான வரவேற்பு குறைந்துவருகிறது. எனவே, அந்தக் காலகட்டத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் காலம்தான் உணர்த்தும். நாம் BS-V மாசு விதிகளைப் பின்பற்றாமல், நேரடியாக BS-IVல் இருந்து நேரடியாக BS-VI -க்கு வர இருக்கிறோம். இங்கே, டீசல் கார்கள் வெளியிடும் புகையில் இருக்கும் PM (Parrticulate Matter) மற்றும் NoX ஆகியவற்றை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டும். எனவே, DPF (Diesel Particulate Filter), SCR (Selective Catalytic Reduction), LNT (Lean NOx Trap) போன்ற தொழில்நுட்பங்கள், BS-VI டீசல் இன்ஜினில் பயன்பாட்டுக்கு வரும். ஒருவேளை BS-V மாசு விதிகளை நாம் பின்பற்றியிருந்தால், இந்த விலை வித்தியாசம் படிப்படியாக இருந்திருக்கும்" என்றார்.

BS-VI

ஒருபுறம் இப்படி டீசல் இன்ஜின்களை  BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ப மாற்றுவது போல, பெட்ரோல் இன்ஜின்களுக்கும் அந்த விதிமுறை பொருந்தும்தானே? மாருதி சுஸூகி இதற்கான ஆரம்பமாக முன்வைத்ததுதான் SHVS தொழில்நுட்பம். இது ஹைபிரிட் கார்கள் அளவுக்கு Complex-ஆக இல்லாவிட்டாலும், வழக்கமான பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்களுடன் ஒப்பிடும்போது, இந்த அமைப்பு பொருத்தப்பட்ட கார்கள் கூடுதல் மைலேஜையும் குறைந்த மாசையும் தந்தன. இது, தற்போதைய BS-IV விதிகளுக்கு ஓகே என்றாலும், BS-VI-க்கு இது போதாது. எனவே, Bosch நிறுவனத்துடன் இணைந்து, பவர்ஃபுல்லான ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்துக்காகப் பணிபுரிய உள்ளது மாருதி சுஸூகி. இதற்கான உதிரிப்பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்யவும், அந்த நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. Corporate Average Fuel Efficiency (CAFE), Real Driving Emissions (RDE) வேறு வர உள்ளன. 

SHVS

பெட்ரோல் இன்ஜினுடன் ஹைபிரிட் சிஸ்டம் சேரும்போது, வழக்கத்தைவிட 30% அதிக மைலேஜ் கிடைக்கிறது; இதுவே டீசல் இன்ஜினுடன் ஹைபிரிட் சிஸ்டம் சேர்க்கப்பட்டால், மைலேஜில் 25% வளர்ச்சி மட்டுமே இருக்கும்! ஆனால், BS-VI டீசல் இன்ஜின்களில் புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக இருக்கப்போகும் விலை உயர்வைவிட, BS-VI பெட்ரோல் இன்ஜின் - ஹைபிரிட் சிஸ்டம் கூட்டணிக்கு அதிகத் தொகை செலவாகும் எனத் தகவல் வந்திருக்கிறது. ஒவ்வொரு வீலுக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் - பெரிய பேட்டரி திறன் - இவற்றுக்கேற்றபடியான எலெக்ட்ரிக் அமைப்பு ஆகியவை இதற்குத் துணைநிற்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, BS-VI விதிகளின் காரணமாக, மாருதி சுஸூகி மட்டுமல்லாது, மற்ற கார் நிறுவனங்களின் தயாரிப்புகளுமே விலை உயரும். எனவே, இதற்கான மாற்றாக CNG இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் அது தமிழகத்தில் இல்லையே?

BS-IV

அதேபோல, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், உச்ச நீதிமன்றம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி மார்ச் 31, 2020 வரை மட்டுமே BS-IV வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும், ஏப்ரல் 1, 2020 முதலாக  BS-VI வாகனங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்பு மத்திய அரசு ' BS-IV விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களை, ஜூன் 30, 2020 வரை விற்பனை/முன்பதிவு செய்யலாம்; இதுவே BS-IV விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட கனரகப் போக்குவரத்து வாகனங்கள் என்றால், செப்டம்பர் 30, 2020 வரை விற்பனை/முன்பதிவு செய்யலாம்' எனச் சொல்லியிருந்த நிலையில், இது வாகன உற்பத்தியாளர்களுக்குப் பேரிடி என்பதே உண்மை. ஏனெனில், BS-IVல் இருந்து BS-VIக்கு வர இன்னும் 455 நாள்களே இருக்கின்றன. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்கெனவே தமது பணிகளை அதற்கேற்ப முடுக்கிவிட்டுள்ளன. 

Maruti Suzuki

நமது நாட்டில், ஒவ்வொரு மாதமும் அதிகக் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி நிறுவனம், 15 மாடல்களைத் தயாரிக்கிறது. இதில், 40 வேரியன்ட்கள் இருக்கின்றன என்பதால், இவை அனைத்தையும் ஏப்ரல் 1, 2020-ம் ஆண்டுக்குள்ளாக BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தவேண்டிய கட்டாயத்துக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இன்ஜின் டிசைன், டியூனிங், டெஸ்ட்டிங், கியர்பாக்ஸ் டிசைன் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாது, காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமான கட்டுமானம் மற்றும் முன்னேற்றப்பட்ட ஒட்டுமொத்தத் தரம் ஆகியவற்றைப் பரிசோதிக்கக்கூடிய நபர்களை மாருதி சுஸூகி பணிக்கு எடுத்திருக்கிறது. முதல் தலைமுறை எர்டிகாவில் 45-50% விற்பனையானது டீசல் மாடல் என்றால், இரண்டாம் தலைமுறை எர்டிகாவில் பெட்ரோல் மற்றும் CNG மாடல்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல்-டீசல் இடையே 5 ரூபாய் மட்டுமே வித்தியாசம் என்பதே காரணி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்