Published:Updated:

ரயில்வே லஞ்ச வழக்கு: பவன்குமார் பன்சால் மருமகனின் நெருங்கிய உதவியாளர் சரண்!

புதுடெல்லி: ரயில்வே வாரிய லஞ்ச வழக்கில் அமைச்சர் பவன்குமார் பன்சால் மருமகனின் நெருங்கிய உதவியாளர் சிபிஐ-யிடம் சரணடைந்துள்ளார்.

உயர் பதவியை பிடிப்பதற்காக ரயில்வே வாரிய பணியாளர் பிரிவு உறுப்பினர் மகேஷ் குமாரிடம் ரூ.10 கோடி பேரம் பேசி, முதல் கட்டமாக ரூ.90 லட்சம் பெற்றபோது, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் விஜய் சிங்லா கைது செய்யப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மகேஷ் குமாரை சிபிஐ காவலில் வைத்து விசாரித்து வருகிறது.

##~~##
இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் சிங்லாவின் நெருங்கிய உதவியாளர் அஜய் கார்க், சிபிஐ-யிடம் இன்று சரணடைந்தார். அவரிடம்  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.