`ஆனந்த விகடன் விருதுகள் 2018’ - 5 நிமிடத்தில் 8 விஷயங்களுடன் வாசிப்பனுபவம்! | highlights of this week ananda vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (03/01/2019)

கடைசி தொடர்பு:16:30 (03/01/2019)

`ஆனந்த விகடன் விருதுகள் 2018’ - 5 நிமிடத்தில் 8 விஷயங்களுடன் வாசிப்பனுபவம்!

இந்த இதழ் ஆனந்த விகடன்:  https://bit.ly/2LLUIps

 

சிறந்த படம் - மேற்குத் தொடர்ச்சி மலை | சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்) | சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை, மாரி-2) | சிறந்த நடிகை - த்ரிஷா (`96) | சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா) | சிறந்த வில்லன் - நானா படேகர் (காலா) | சிறந்த வில்லி - வரலட்சுமி (சண்டக்கோழி-2, சர்கார்) | சிறந்த குணச்சித்திர நடிகர் - அமீர் (வடசென்னை) | சிறந்த குணச்சித்திர நடிகை - ஈஸ்வரி ராவ் (காலா) | சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்) | சிறந்த நகைச்சுவை நடிகை - ரேவதி (குலேபகாவலி) | சிறந்த அறிமுக இயக்குநர் -  லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை) | சிறந்த அறிமுக நடிகர் - ஆதித்யா பாஸ்கர் (196) | சிறந்த அறிமுக நடிகை - ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்) | சிறந்த குழந்தை நட்சத்திரம் - தித்யா பாண்டே (லக்ஷ்மி)

சிறந்த ஒளிப்பதிவு - நீரவ் ஷா (2.0) | சிறந்த படத்தொகுப்பு - ஷான் லோகேஷ் (ராட்சசன்) | சிறந்த கதை - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்) | சிறந்த திரைக்கதை - வெற்றி மாறன் (வடசென்னை) | சிறந்த வசனம் - பா.இரஞ்சித், மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா (காலா) | சிறந்த கலை இயக்கம் - ஜாக்கி (வடசென்னை) | சிறந்த ஒப்பனை - பானு, ஏ.ஆர்.அப்துல் ரஸாக், லெகசி FX (2.0) | சிறந்த சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன் (வடசென்னை, காலா, செக்கச்சிவந்த வானம்) | சிறந்த நடன இயக்கம் -  ஜானி (குலேபகாவலி) | 
சிறந்த ஆடை வடிவமைப்பு - ஏகா லகானி (செக்கச்சிவந்த வானம்) | சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் - (ஷங்கர், வி.ஸ்ரீநிவாஸ் மோகன் - 2.0) | சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா ('அந்தாதி', 'காதலே காதலே', 'Life Of Ram' - `96) | சிறந்த பின்னணிப் பாடகர் - அந்தோணி தாசன் ('சொடக்கு மேல' - தானா சேர்ந்த கூட்டம்) | சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (`96) | 
சிறந்த தயாரிப்பு - மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்) | சிறந்த படக்குழு  - `96 | அதிக கவனம் ஈர்த்த படம் -  
2.0 | சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் -  கடைக்குட்டி சிங்கம்

- திறமைக்கு மரியாதை அளிக்கும் `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018’-ன் பட்டியல்தான் இவை. விருதுத் தெரிவுகளுக்கான காரணங்களை கச்சிதமாக சில வரிகளில் நிறுவியிருக்கிறது ஆனந்த விகடன் குழு. இதழில் வாசிக்கத் தவறாதீர்கள்.  

 

பெருந்தமிழர் விருது - இந்திரா பார்த்தசாரதி | சிறந்த நாவல் - வீரயுக நாயகன் வேள்பாரி (சு.வெங்கடேசன்) | சிறந்த சிறுகதைத் தொகுப்பு -  மாயக்குதிரை (தமிழ்நதி) வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் | சிறந்த கவிதைத் தொகுப்பு - ழ என்ற பாதையில் நடப்பவன் (பெரு.விஷ்ணுகுமார்) வெளியீடு: மணல்வீடு பதிப்பகம் | சிறந்த கட்டுரைத் தொகுப்பு - எதிர்ப்பும் வெறுப்பும் (பா.பிரபாகரன்) வெளியீடு: உயிர்மை பதிப்பகம் | சிறந்த சிறுவர் இலக்கியம் - மரப்பாச்சி சொன்ன ரகசியம் (யெஸ்.பாலபாரதி) வானம் பதிப்பகம் | சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன் (தமிழாக்கம்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி)
காலச்சுவடு பதிப்பகம் | சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு: உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது - சிமாமண்டா என்கோஜி அடிச்சீ (தமிழாக்கம்: வடகரை ரவிச்சந்திரன்) பாரதி புத்தகாலயம் பதிப்பகம் | சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு: அன்னா ஸ்விர் கவிதைகள் - தமிழில்: சமயவேல் (தமிழ்வெளி பதிப்பகம்) | சிறந்த சிற்றிதழ் - இடைவெளி | சிறந்த வெளியீடு - பிரமிள் படைப்புகள் (கால சுப்ரமணியம் - பிரமிள் அறக்கட்டளை & லயம்)

- திறமைக்கு மரியாதை அளிக்கும் `ஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் 2018’-ன் பட்டியல்தான் இவை. விருதுத் தெரிவுகளுக்கான காரணங்களை கச்சிதமாக சில வரிகளில் நிறுவியிருக்கிறது ஆனந்த விகடன் குழு. இதழில் வாசிக்கத் தவறாதீர்கள்.  

சிறந்த டிவி சேனல் - டிஸ்கவரி கிட்ஸ் தமிழ் | சிறந்த டிவி நிகழ்ச்சி - சூப்பர் சிங்கர் 6 (விஜய் டிவி) | சிறந்த நெடுந்தொடர் - செம்பருத்தி 
(ஜீ தமிழ் தொலைக்காட்சி) | சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் - மாகாபா ஆனந்த் (விஜய் டிவி) | சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி - அர்ச்சனா (ஜீ தமிழ் தொலைக்காட்சி) | சிறந்த பண்பலை - ரெயின்போ எஃப்எம் | சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் - கார்த்திக் பாலா (ரேடியோ சிட்டி) | சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி - சாரு (ரேடியோ மிர்ச்சி)

- திறமைக்கு மரியாதை அளிக்கும் `ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018'-ன் பட்டியல்தான் இவை. விருதுத் தெரிவுகளுக்கான காரணங்களை கச்சிதமாக சில வரிகளில் நிறுவியிருக்கிறது ஆனந்த விகடன் குழு. இதழில் வாசிக்கத் தவறாதீர்கள்.

"சொல்லப்போனா, விஜய்யை ஹீரோவாக நடிக்க வெச்சு சம்பாதிச்ச தயாரிப்பாளர்களைவிட, விஜய்க்காகக் கதை எழுதி, டைரக்‌ஷன் பண்ணியே அதிகமா ப்ராஃபிட் பார்த்த டைரக்டர் நானாதான் இருப்பேன்..."

"ஜெயிக்கிறதுக்குத் திறமை மட்டும் போதாது, நல்ல மனசும் வேணும். நான் சினிமாவுல பார்த்த நல்ல மனுஷன்கள்ல யோகிபாபு மிகமிக ரொம்ப ரொம்ப நல்ல மனசுள்ள மனுஷன்."

இந்த இதழ் ஆனந்த விகடன்:  https://bit.ly/2LLUIps

``இனிமே சினிமாவுல நம்ம கரியர் டிசைனே மாறிடப்போகுதுன்னு நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு `அன்பே சிவம்' படத்தை இயக்கினேன். ஆனால், என்னோட கனவுப்படம் கமர்ஷியல் ரீதியா தோல்வி அடைஞ்சப்போ அப்படியே நொறுங்கிப்போயிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா, எல்லோராலயும் பாராட்டப்பட்ட அந்தப் படத்தை இயக்கியதுக்கு எனக்கு சம்பளமே கொடுக்கலை."

``2005-ம் வருஷம் குஷ் சொல்லாத விஷயத்தைச் சொன்னதா தப்பான விஷயத்தைப் பரப்புனாங்க. அவங்க மேல வழக்குகள் போட்டாங்க. ஆனால், எங்களுக்கு உண்மை என்னன்னு தெரியும்."

- நமக்கு மிகவும் தெரிந்த முகம் இயக்குநர் சுந்தர்.சி. அவரது தெரியாத பக்கங்களை முழுமையாகப் புரட்டி இருக்கிறது ``இங்கே நல்ல படம்-கெட்ட படம் கிடையாது... ஓடுற படம்-ஓடாத படம்தான்!" எனும் நேர்காணல். 

"விஷ்ணு விஷால் என் ஃப்ரெண்ட். அவர் சொன்னதுனால கமிட் ஆனேன். 'பிக் பாஸு'க்குப் பிறகு இப்படி ஒரு கேரக்டர் கிடைச்சிருந்தா, கண்டிப்பா நடிச்சிருக்க மாட்டேன்." 

'பிக் பாஸ்' சமயத்துல எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்துச்சு. அதனால, நிறைய சண்டைகள். இப்போ நாங்க சமாதானமாகிட்டோம்.

``வெளிநாட்டு ரசிகர்கள் என்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டுக் கூப்பிடறாங்க. அவங்களைப் பார்க்கிறப்போ, நமக்கும் ஸ்ட்ரெஸ் குறையுது.’’

``எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மளை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது."

- `நானும் ஆரவ்வும் சமாதானமாயிட்டோம்!' எனும் பேட்டியில் ஆரவ் தொடங்கி மீம்கள் வரை நிறைய பேசியிருக்கிறார் ஓவியா.

''பௌத்தம் குறித்து நிறைய ஆய்வுகள் செய்தவர் நீங்கள், அதைப் பின்பற்றுபவராகவும் இருக்கிறீர்கள். பொதுவாக தலித்துகளைத் தாண்டி பௌத்தத்தைப் பெரிதாக வேறு யாரும் பின்பற்றுவதோ பேசுவதோ இல்லையே, ஏன்?''

''தலித் அல்லாதவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றாததற்கான காரணங்களை நிகழ்கால அரசியலிலிருந்து புரிந்துகொள்ள முடியாது. தலித் அல்லாதவர்களும் வரலாற்றில் பூர்வ பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்தியா முழுவதும் இன்றும் தோண்டி யெடுக்கப்படும் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளே சாட்சிகளாக இருக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் வாழ்கின்ற வரலாற்று மாந்தர்களான கனியன் பூங்குன்றனார், ஔவையார், இளம்போதியார், பக்குடுக்கை நன்கணியார், நக்கண்ணையார், மாதவி, மணிமேகலை, குண்டலகேசி, சீத்தலைச் சாத்தனார், வள்ளுவர், போதி தருமர், தர்மபாலர், புத்தமித்திரர் போன்றவர்கள் தலித் சமூகத்தினர் அல்லர். தமிழ்ச் சமூகத்தினர். இவர்களையெல்லாம் மொழி சார்ந்து தமிழர்களென்று அடையாளப் படுத்துபவர்கள், அவர்கள் சார்ந்த பௌத்தப் பண்பாட்டின் அடிப்படையில் அடையாளப்படுத்தாமல் இருப்பதை ஆராய்கின்றபோதே உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். நமக்கு அடையாளப்படுத்தப்பட்ட போதி தருமர் பௌத்தத் துறவியேயன்றி, தமிழ்த்துறவி அல்லர். கலைஞர் கருணாநிதி பூம்புகார், மந்திரிகுமாரி என்று தன் படைப்புகள் மூலம் பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்தார் என்பதும் இங்கு நினைவுகூர்ந்திடத்தக்கது.''

- எழுதுகிற ஒவ்வொரு பாடலிலும் பரவலான கவனம் பெற்றுவருபவர் கு.உமாதேவி. பாடலாசிரியர், கவிஞர் என்கிற அடையாளங்கள் தாண்டி, சமூக மாற்றத்துக்கான களச்செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து இயங்கி வருபவர். அவருடனான 'கருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை!' எனும் உரையாடல் மிக முக்கியமானது. சினிமா, சென்னைத் தமிழ் தொடங்கி சாதி அரசியல் வரை பலவற்றைக் குறித்த தன் பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்,

நித்யா மேனன்: "எதாவது ஒரு பயோ-பிக் படத்துல நடிக்கணும்னு போன வருஷம் ஆசைப்பட்டேன். இந்த வருஷம் அது நிறைவேறியிருக்கு."

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்:  ''வருடம்தோறும் நான் எடுக்கும் உறுதிமொழி, 'இந்த ஆண்டாவது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும்' என்பதுதான். 2018-ம் ஆண்டிலும்கூட இதே உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன்... ஆனால், 'வெற்றிகரமான தோல்வி'யே."

தமிழிசை சௌந்தரராஜன்: "தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு அதிக அலைச்சல்களால் உடல் எடை அதிகரித்துவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், 'வெயிட்டான தலைவர்' ஆகிவிட்டேன். உடல் எடையைக் குறைப்பதற்காகத் தினப்படி தனிக் கவனம் செலுத்தி வருகிறேன்!''

டேனியல்: ``போன வருஷத்துல அரசாங்கத்துக்குக் கட்டாயம் வரி கட்டிடணும்னு முடிவெடுத்தேன். அதைச் சரியா கடைப்பிடிச்சேன்."

நாஞ்சில் சம்பத்: "2019-ல் 10 புத்தகங்களை எழுதி வெளியிடுவதாக இருக்கிறேன். அடுத்ததாக, அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடும் நான், உடல் எடையைக் கருத்திற்கொண்டு அதைக் கைவிட்டுவிடலாமா என்ற தீவிர யோசனையிலும் இருக்கிறேன்."

- '2018-ல என்ன செஞ்சீங்க, 2019-ல என்ன செய்றதா இருக்கீங்க' என, சில பிரபலங்களிடம் சபத அப்டேட்கள் கேட்டபோது சொன்னதுதான் '2019-ல பண்றோம் பின்றோம்!' எனும் பகுதி.

காய்கறியோ இறைச்சியோ, இருப்பு வைக்காமல் அவ்வப்போது புதிதாக வாங்கி, வழக்கமான நம் அஞ்சறைப் பெட்டி மசாலாவில் சமைத்தாலே வாசனையும் சுவையும் மனதை அள்ளும். எந்தச் சிறப்புச் சுவையூட்டிகளும் தேவையில்லை. செரிமானப் பிரச்னைகளும் வராது. இப்படி அக்கறையோடு நல்லுணவு தந்து வாடிக்கையாளர்கள்மீது அக்கறையாகச் செயல்படும் உணவகங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. அச்சிறுப்பாக்கம் லூப் சாலையில், காவல் நிலையத்துக்கு அருகில் இருக்கும் மன்னா மெஸ், இப்படியான ஒரு நல்லனுபவத்தைத் தருகிறது...

பொதுவாக, அசைவ உணவகங்களில் சாப்பிடும்போது ஒரு மெல்லிய பயம் எழும். அந்தப் பயம் இல்லாமல் ஒன்றிச் சாப்பிட முடிகிறது. 'மன்னா மெஸ்' என்ற பெயருக்குக் கீழேயே 'அசைவத்தில் ஆரோக்கியம்' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சாப்பிடும்போது அதை உணரலாம்!

- இந்த வாரம் 'சோறு முக்கியம் பாஸ்!' தொடரில் மன்னா மெஸ் குறித்த அனுபவப் பகிர்வும், அவர்களது உணவுக்கொள்ளை பேனர் மேட்டரும் செம!

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2SATfoC