நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள் ஆரோக்கியமானவையா? | How healthy are the sanitary napkins

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:18:52 (03/01/2019)

நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள் ஆரோக்கியமானவையா?

பெண்களின் இயற்கை அடையாளம் 'கருப்பை'. அதை நாம் சரியாகப் பாதுகாக்கிறோமா? கருப்பையை காக்கும் அடிப்படை விஷயமாக இருப்பது 'மாதவிடாய்'. மாதவிடாயைப் பற்றி வெளியில் பேச கூச்சப்படும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இருந்தபோதும், பல பெண்களுக்கிடையே அதன்மீதான  விழிப்புஉணர்வு  குறைவாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது.

அந்தக் காலத்தில், மாதவிடாயின்போது துணிகளைப் பயன்படுத்தினர். அதனால் அரிப்பு, எரிச்சல் போன்ற தொல்லை இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போது, நாப்கின்கள் பரவலாக உபயோகிக்கப்பட்டுவருகிறது. இன்றைய இயந்திர உலகத்தில், நாப்கின்கள் உபயோகிக்க எளிதாக இருக்கிறது என்பதால், பெண்களும் அதனின் நன்மை, தீமை அறியாது பயன்படுத்திவருகின்றனர். தாங்கள் உபயோகிக்கும் பேட்களில் எது சரியானவை என்று அறியத் தவறுகின்றனர்.

சராசரியாக 12 வயதில் பூப்பெய்தும் ஒரு பெண், மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) வரை நாப்கின்களை உபயோகிக்கிறார். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் கணக்கிட்டால், சுமார் 10,000 முதல் 15,000 வரையிலான நாப்கின்கள் உபயோகிக்கப்படுகின்றன.

மார்க்கெட்டில் விற்கப்படும் பேட்கள் காட்டன் என்று சொல்லி விற்கப்படுகின்றன. ஆனால், அதை எவ்வாறு நம்புவது? அதில் முக்கால்வாசி நாப்கின்கள் ரசாயனங்களைக் கொண்டு 'ப்ளீச்' செய்யப்படுகின்றன. இதனால்தான், பேட்கள் அனைத்தும் வெண்மையாக உள்ளன. காகிதக் கழிவு, மரக்கூழ் போன்றவைகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களில் 'டையாக்சின்' என்னும் ரசாயனம் பெரும்பாலும் கலக்கப்படுகிறது. தவிர, ஈரத்தை உறிஞ்சும் சூப்பர் அப்சார்பென்ட் ஜெல் மற்றும் பேட்களை நறுமணத்துடன் வைக்க பலவகை செயற்கை நறுமணத் திரவியங்களும் கலக்கப்படுகின்றன. மேலும், பேடின் முதல் லேயர் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாம் சேர்ந்த நாப்கின், நேரடியாக பிறப்புறுப்பில் படுகிறது. இதுபோன்ற ரசாயனப் பொருள்கள் அடங்கிய நாப்கின்கள் சரும பாதிப்பு, எரிச்சல், அரிப்பு போன்ற ஆரோக்கியக் கேடுகளை உருவாக்குகின்றன. அதனாலேயே, நாப்கின்களை நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றியே ஆகவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன? 

பெண்களின் கருப்பையைப் பாதுகாக்கவும், அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பெண்களுக்காக சிறப்பு  நாப்கின்களைத் தயாரித்து வழங்குகிறது 'ஸ்ரீ மங்கை' நிறுவனம். இவை, முற்றிலும் துணிகளால்... ரசாயனக் கலவை உடம்பில் படாதவாறு கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

வெளிர்க்கப்படாத (அன்-ப்ளீச்டு) காட்டன் நாப்கின்களை ஸ்ரீ மங்கை தயாரிக்கிறது. மங்கை பேடின் முதல் லேயர், அன்-ப்ளீச்டாக இருப்பதால், நேரடியாக சருமத்தில் படும்போது பாதிப்புகள் இருக்காது. மேலும், மங்கை நாப்கினின் அடுத்த 6 லேயர்களில், நாட்டு மூலிகை (ஹெர்பல் கோட்டிங்) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மூலிகையால் நமக்கு எந்தவித பாக்டீரியல் இன்ஃபெக்ஷனும் ஏற்படாது. மங்கை நாப்கினில் கூடுதல் பாதுகாப்புக்காக கடைசியாக இன்னுமொரு லேயர் வைக்கப்படுகிறது. இது, எளிதில் மறு சுழற்சி செய்யக்கூடியது அல்லது எளிதில் மக்கக்கூடியது. இது தவிர, நீர்க் கசிவு ஏற்படாதவாறு லாக்கிங் சிஸ்டமும் (பட்டன்) மங்கை நாப்கினில் இருக்கிறது. 

மற்ற பேடுகள் கருப்பைக்கு சூட்டை உண்டாக்குவதால், நீர்க்கட்டி, ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தையின்மை போன்ற பெரும்பாலான பிரச்னைகள் உருவாகின்றன என்று அறிவுறுத்தும் ஸ்ரீ மங்கை, தாங்கள் தயாரிக்கும் நாப்கின்கள் வசதியாக இருப்பதுடன், குளிர்ச்சித்தன்மை நிறைந்ததாகவும் இருக்கும் எ ன்று கூறுகிறது. இதுமட்டுமில்லாமல், தோல் நோய்களைத் தடுக்கிறது. 

முன்பு, துணிகளைப் பயன்படுத்திவந்தபோது இருந்த ஆரோக்கியமான சூழலை மீண்டும் பெண்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான நாப்கின் மீதான விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் ஸ்ரீ மங்கை நிறுவனம் முயற்சி எடுத்துவருகிறது. எந்தவித ரசாயனமும் கலக்கப்படாத இந்த நாப்கின்கள், பெண்களுக்கான சிறந்த சாய்ஸாக இருக்கும் எனவும், ஸ்ரீ மங்கை தெரிவிக்கிறது. நாப்கின்களைத் தவிர, மாதவிடாய் காலங்களில் உபயோகிக்கும் பீரியட் பேன்ட்டீஸ்களையும் ஸ்ரீ மங்கை விற்பனை செய்துவருகிறது. ரசாயனமில்லாத குழந்தைகளுக்கான டயாப்பர்களையும் ஸ்ரீ மங்கை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தரமான பொருளுக்கு ஒரு விலை உண்டு. நம்மையும் நம் சந்ததியையும் பாதுகாக்க நாம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்கிறது, ஸ்ரீ மங்கை. பணமா... தரமா? உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்! 

விகடன் வாசகர்களுக்கு 15% ஆஃபரும் ஸ்ரீ மங்கை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு  க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க