புதிய ஆன்டி-பொல்யூஷன் மாஸ்க்... இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷியோமி | Xiaomi launch Mi AirPOP PM2.5 Air Pollution Mask

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (04/01/2019)

புதிய ஆன்டி-பொல்யூஷன் மாஸ்க்... இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷியோமி

முதல் முறையாகத் தனது ஆன்டி-பொல்யூஷன் மாஸ்க்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி நிறுவனம். சமீப காலமாகவே காற்று மாசுபாடு இந்தியாவின் பல நகரங்களில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

ஷியோமி மாஸ்க்

இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, காற்றைச் சுத்தப்படுத்தும் ஏர் ப்யூரிஃபையர்கள் மற்றும் மாஸ்க்குகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அறைகளுக்குளே பயன்படுத்தும் வகையிலான ஏர் ப்யூரிஃபையர்களை ஏற்கெனவே ஷியோமி விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது. வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது முகத்தில் அணியும் வகையில் மாஸ்க்குகளை பயன்படுத்துவதைச் சிலர் விரும்புகிறார்கள்.

ஏர் ப்யூரிஃபையர் மாஸ்க்

எனவே அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஷியோமி நிறுவனம் புதிய ஆன்டி-பொல்யூஷன் மாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. Mi AirPOP PM2.5 Anti-Pollution Mask என்ற இதை ஷியோமியின் இணையதளம் மூலமாக வாங்க முடியும். இரண்டு மாஸ்க்குகள் 249 ரூபாய்க்குக் கிடைக்கும். 4 ஃபில்டர்கள் அடுக்குகள் இதில் இருக்கின்றன. காற்றில் இருக்கும் 2.5 மைக்ரான்கள் வரை அளவுள்ள நுண் துகள்களை 99 சதவிகிதம் வடிகட்டி விடும் வகையில் இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.