`இந்த வருடம் வெப்பமயமானதாக இருக்கும்' - எல் நினோ விளைவு குறித்து எச்சரிக்கும் உலக வானிலை அமைப்பு | 2019 May Be Warmer Due To El Nino

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:07:44 (04/01/2019)

`இந்த வருடம் வெப்பமயமானதாக இருக்கும்' - எல் நினோ விளைவு குறித்து எச்சரிக்கும் உலக வானிலை அமைப்பு

எல் நினோவை விளைவு காரணமாக இந்த வருடம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

வானிலை

எல் நினோவின் தாக்கத்தை 2017 டிசம்பர் முதல் 2019 பிப்ரவரி மாதம் வரை 75-80 சதவிகிதம் உணர முடியும் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதைப் பற்றி புவியியல் அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். " எல் நினோ பாதிப்பு இருக்கும் வருடங்களில் குளிர் காலம் மற்றும் கோடைக் காலங்களில் வெப்பநிலை இயல்புக்கு மாறாக இருக்கும்" என்கிறார் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கூடுதல் பொது இயக்குநர் மிருத்துஞ்ஜெய் மொஹபத்ரா (Mritunjay Mohapatra).

எல் நினோ வெப்பநிலை

`` வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும். அதற்குக் காரணம் ஒன்று எல் நினோ மற்றொன்று புவி வெப்பமயமாதல். வெப்பநிலை இயல்பாக இல்லாமல் இருப்பதை ஒவ்வொரு நாளும் நம்மால் உணர முடிகிறது" என்று தெரிவித்திருக்கிறார் புவியியல் அமைச்சகத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன் (Madhavan Nair Rajeevan). பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படும்போது அது இந்திய துணைக் கண்டத்தின் வானிலையில் பாதிப்பை உண்டாக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதன் தாக்கத்தை உணர முடியும் இந்த விளைவே எல் நினோ என அழைக்கப்படுகிறது.