வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (04/01/2019)

கடைசி தொடர்பு:13:37 (04/01/2019)

ஜனவரி 23-ல் மாருதி சுஸூகி வேகன்-ஆர் அறிமுகம்... என்ன எதிர்பார்க்கலாம்?!

பக்கவாட்டுத் தோற்றத்தைப் பொறுத்தவரை, முந்தைய மாடலைவிட இதன் நீளம் - அகலம் அதிகமாகி இருக்கிறது. இதனால் கூடுதல் பூட் ஸ்பேஸ் மற்றும் இடவசதி கிடைத்திருக்கலாம்.

ஜனவரி 23, 2019 அன்று, தனது புதிய வேகன்-ஆர் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி சுஸூகி. இந்நிலையில் டாடா டியாகோ, ரெனோ க்விட், ஹூண்டாய் சான்ட்ரோ, டட்ஸன் கோ ஆகியவற்றுக்குப் போட்டியாக வரப்போகும் புதிய வேகன்-ஆரின் ஸ்பை படங்கள், தற்போது இணைய உலகில் வைரலாகப் பரவிவருகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போதே, இந்திய மாடல் சர்வதேச சந்தைகளுக்கான மாடலைவிட வித்தியாசமாக இருப்பது தெரிகிறது. ஆனால், இந்த விதிமுறை, முந்தைய வேகன்-ஆர் மாடல்களுக்கும் பொருந்தும் என்பதால் ஓகே. பானெட், கதவுகள், முன்பக்க & பின்பக்க ஃபெண்டர் ஆகியவற்றில் பாடி லைன் செல்வது நைஸ். 

வேகன் ஆர்

சான்ட்ரோவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் டால்பாய் என்ற அடைமொழியைக்கொண்டிருக்கும் கார், வேகன்-ஆர்தான். எனவே அந்தக் கூற்றுக்கேற்பவே புதிய மாடலின் டிசைன் அமைந்திருக்கிறது. ஆனால், காரை உற்றுநோக்கும்போது, புதிய ஸ்டைல் அம்சங்கள் தெரிகின்றன. கொஞ்சம் வளைந்திருக்கும் ஹெட்லைட்களை, க்ரோம் பட்டை உடனான க்ரில் இணைக்கிறது. இங்கே வழக்கத்தைவிட பெரிய சைஸில் சுஸூகி லோகோ இருக்கிறது. அகலமான ஏர் டேம் உடன் முன்பக்க பம்பர் சிம்பிளான டிசைனில் இருந்தாலும், பனிவிளக்குகள் க்யூட் ரகம். ஓட்டுதல் அனுபவம் மற்றும் சொகுசு ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. 

Wagon-R

பக்கவாட்டுத் தோற்றத்தைப் பொறுத்தவரை, முந்தைய மாடலைவிட இதன் நீளம் மற்றும் அகலம் அதிகமாகியுள்ளன. இதனால் கூடுதல் பூட் ஸ்பேஸ் மற்றும் இடவசதி கிடைத்திருக்கலாம். பெரிய கதவுக் கண்ணாடிகள் மற்றும் பின்பக்கம் கொஞ்சம் எர்டிகாவை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ளன. சி-பில்லர் & ஃப்ளோட்டிங் ரூஃப் ஆகியவை இதற்கான உதாரணங்கள். சி-பில்லரில் வைக்கப்பட்டிருக்கும் உயரமான டெயில் லைட்கள், காருக்கு க்ராஸ்ஓவர் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. டாப் வேரியன்ட்டில் இண்டிகேட்டருடன்கூடிய ரியர் வியூ மிரர்கள், கறுப்பு நிற பில்லர்கள், பனிவிளக்குகள் ஆகியவை இருக்கலாம். அலாய் வீல்கள் இல்லாதது மைனஸ்.

மாருதி சுஸூகி

லேட்டஸ்ட் மாருதி சுஸூகி கார்கள் தயாரிக்கப்படும் அதே Heartect பிளாட்ஃபார்மில்தான் புதிய வேகன்-ஆர் தயாரிக்கப்படும் என்பதால், விரைவில் அமலுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற கட்டுமானம் இருக்கும். பின்பக்க இருக்கையை தேவைபட்டால் Recline செய்யக்கூடிய வசதி காரில் இருப்பது ப்ளஸ். அனைத்து வேரியன்ட்டிலும் டிரைவர் காற்றுப்பை, பின்பக்க பார்க்கிங் சென்சார், டூயல் டோன் டேஷ்போர்டு ஸ்டாண்டர்டு, டாப் வேரியன்ட்டில் ஸ்மார்ட் பிளே சிஸ்டம், ரியர் வைப்பர், ஏபிஎஸ், கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் இருக்கும். ஆனால், டேக்கோமீட்டர், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் எங்கே மாருதி சுஸூகி?

Maruti Suzuki

தற்போதைய மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜின் - 5 ஸ்பீடு MT கூட்டணிதான் புதிய வேகன்-ஆரிலும் இருக்கும். அது கூடுதல் ஸ்மூத்னெஸ் மற்றும் மைலேஜுக்காக டியூன் செய்யப்படலாம். கூடுதலாக 1.2 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜின் ஆப்ஷனும் வரலாம். இரண்டிலுமே 5 ஸ்பீடு AMT மற்றும் CNG வழங்கப்படலாம். Made In India, For India எனும் கோட்பாடுக்கு உகந்த வேகன்-ஆர், மாருதி சுஸூகியின் Arena ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன், 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு வருகிறது. மாதத்துக்கு 18 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய இலக்கு இருப்பதால், விலையில் (4.5-6.5 லட்சம்) அசத்தலாம்.

K-Series Engine, AMT

படங்கள்: Autocar India

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்