வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (05/01/2019)

கடைசி தொடர்பு:21:02 (05/01/2019)

'வேட்டி கட்டுவோம்... நெசவாளர்களைக் காப்போம்!

கால மாற்றத்திற்க்கு ஏற்ப தேவைகளும், தேவைக்கேற்ப கலாச்சாரமும் மாறி வருவது இயல்பானவை. ஆனால் அந்த மாற்றங்களால் நமது அடையாளங்கள் காணாமல் போய்விடுகிறது. அவ்வாறு காணாமல் சென்று கொண்டிருக்கும் அடையாளங்களில் ஒன்றாக 'வேட்டி' இருக்கிறது. நவநாகரீக கலாச்சாரத்திற்கு மாறி வருவதால், ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட் என உடைகளும் மாறிவிட்டன. பள்ளி, கல்லூரி, அலுவலங்களில்.... ஏன் வீட்டிலேயே ஏதாவதொரு விழாக்காலங்களில்தான் வேட்டி அணிந்த ஆண்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஆண்களின் கம்பீரத்திற்கு அடையாளமாகவும், நமது கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகவும் வேட்டி திகழ்கிறது. 

இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தை நாம் மறந்தோமெனில், நமது பாரம்பர்யத்திற்கு மட்டுமின்றி நெசவாளர்களுக்கும் பெரிய பாதிப்பைக் கொடுக்கும். வேட்டியை ஒரு ஆடையாக பார்க்காமல் நெசவாளர்களின் வாழ்வாதாரமாகவே பார்க்க வேண்டும். தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கும் விலையில்லா வேட்டி, சேலைகளை நெய்வதால் தங்களுக்கு ஓரளவு வருவாய் கிடைப்பதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். 

இப்போது ரெடிமேட் வேட்டிகள், நறுமணம் கமழும் வேட்டிகள், மேட்சிங் சட்டைகளுடன் வரும் மிக்ஸ் மேட்ச் வேட்டிகள் என்று நவீன ஆடைகளுக்கு இணையாகவும் வேட்டி தயாரிக்கப்பட்டு வருகின்றது. நமது தட்ப வெப்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொறுத்தமானது வேட்டிதான். பெண்களும் ஃபேஷன் என்ற பெயரில் வேட்டியை அணிய தொடங்கியுள்ளனர். இவ்வாறு நிலைமை இருக்க, நமது அடையாளங்களுள் ஒன்றான வேட்டிக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பாதுகாப்பது நமது கடமை அல்லவா...? காலங்கள் பல நூறு கடந்தாலும், மாற்றங்கள் பல ஏற்பட்டாலும் நமது வாழ்வின் ஒரு அங்கம் வேட்டி என்கிறது ஷர்ட்டுகள் & வேட்டிகள் விற்பனை செய்யும் 'MCR' நிறுவனம். 

'கட்டுவோம்.. கட்டிக்காப்போம்' என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது எம்.சி.ஆர். என்றும், நெசவுத் தொழிலை நேசிக்கும் எம்.சி.ஆர்., நமது பாரம்பர்ய அடையாளத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் உலக பாரம்பர்யங்களை பாதுகாக்கும் நோக்கில் யுனஸ்கோவால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்.சி.ஆருடன் இணைந்து நாமும் இனி நமது பாரம்பர்ய அடையாளத்தை கட்டிக்காப்போம்! 

மேலும் விவரங்களுக்கு.... 0424 2251212

நீங்க எப்படி பீல் பண்றீங்க