ஒய்வுக்காலத்தை சிறப்பாக்க இவ்வாறு முதலீடு செய்யுங்கள்! | Invest your retirement in Mutual fund.

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (05/01/2019)

கடைசி தொடர்பு:19:03 (08/01/2019)

ஒய்வுக்காலத்தை சிறப்பாக்க இவ்வாறு முதலீடு செய்யுங்கள்!

மக்களுக்கு முதலீடு சார்ந்த சேவையை வழங்கும் இன்டெக்ரேடட் நிறுவனம் (www.integratedindia.in) ஓய்வு காலத்தை சிறப்பாக்க சில வழிமுறைகளை பகிர்ந்துள்ளது.

ஓய்வுக் காலத்துக்காக எவ்வளவு சேமிக்க வேண்டும், எப்போது சேமிக்கத் தொடங்க வேண்டும், ஓய்வுக்காலத்தில் எவ்வளவு செலவு இருக்கக்கூடும் போன்ற பல விஷயங்கள  பணி ஓய்வுக்காக முதலீடு செய்யும் முன் திட்டமிடவேண்டியது அவசியமாகிறது. காரணம், இன்றைய ஓய்வு வாழ்வு என்பது அதிக செலவு வைப்பதாக இருக்கிறது. எனவே, சென்ற தலைமுறையைக் காட்டிலும் நம் தலைமுறையினரின் சராசரி வாழ்நாள் அதிகம் என்பதால் ஓய்வுக்கால சேமிப்பை இளமையிலேயே திட்டமிடுவது அதிமுக்கியமாகும்.

சீக்கிரமாக முதலீட்டை தொடங்கிடுங்கள்...

ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டில் எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானதாகும். எவ்வளவு விரைவில் ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக தொகுப்பு நிதி சேரும்.  

ஓய்வுக் காலத்துக்காக செய்யும் நீண்ட கால  முதலீட்டில் கூட்டு வட்டி (Compound Interest), முதிர்வு தொகையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. உதாரணத்துக்கு, இன்னும் 30 வருடங்களில் ஓய்வுபெற இருக்கும் ஒருவர், 10% கூட்டு வளர்ச்சி தரும் ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் ரூபாய் 10 ஆயிரம்  முதலீடு செய்து வந்தால், இறுதியில் அவருக்கு கிடைக்கும் தொகை 2.26 கோடி ரூபாய். அதே நபர், 20 வருடங்கள் இதே தொகையை முதலீடு செய்தால், அவருக்கு கிடைப்பது  ரூ. 75 லட்சம் மட்டுமே! எனவே, பணி ஓய்வைப் பொறுத்தவரை இளமையிலேயே இதற்கான திட்டத்தை வகுத்து, முதலீடு செய்ய ஆரம்பிப்பதே நல்லது.

வரி சேமிப்பு பெறலாம்...

வருங்கால வைப்புநிதி மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற முதலீடுகள் வரிச் சேமிப்பை வழங்குவனவாகும். 80சி பிரிவில் நிதி ஆண்டில் செய்யப்படும் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வருமான வரியை சேமிக்கலாம்! பிரிவு 80CCD(1B) படி, என்பிஎஸ் திட்டம் கூடுதல் வரிச் சலுகை ரூ. 50 ஆயிரம் வரை வழங்குகிறது. 

பிரித்து முதலீடு செய்தல்...

ஒரே மாதிரியான முதலீட்டில் மொத்த பணத்தையும் போட்டுவைப்பது சிறந்ததல்ல. பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற பலவகைத் திட்டங்களில் நம் பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதன்மூலம், ஒரு பிரிவில் நஷ்டம் ஏற்பட்டாலும், பிற முதலீடுகள் மூலம் நம் பணத்தைக் காத்துக்கொள்ளலாம்.

வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பு...

முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் மற்றும் லாபம் இரண்டையும் மனதில் கொண்டு பணத்தை முதலீடு செய்தல் அவசியம். உதாரணத்துக்கு, பங்குச் சார்ந்த முதலீடுகளில் ரிஸ்க் அதிகம், ஆனால், இவை நீண்ட காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடியவை. பாண்ட் மற்றும் கடன் சார்ந்த முதலீடுகள் கணிசமான லாபத்தைத் தராது என்றாலும், ரிஸ்க் குறைந்தவை. தேர்ந்த, கவனமான ஒரு முதலீட்டாளர் இந்த இரண்டிலும் தன் தேவையைப் பொறுத்து முதலீடு செய்ய வேண்டும். 

மறுசமன் செய்தல்...

பங்குகளில் தாங்கள் செய்துள்ள முதலீடு நல்ல லாபத்தைப் பெற்றுத்தருகிறது, அதேசமயம் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்த பணம் நஷ்டத்தை தருகிறது என வைத்துக்கொள்வோம். இதே நிலை நீடித்தால், தங்கத்தில் போட்ட பணம் இறுதியாக கிடைக்கும் லாபத்தைக் குறைத்துவிடும். எனவே, வருடத்துக்கு ஒரு முறையேனும் முதலீடுகளின் லாப நஷ்டப் போக்கைக் கவனித்து, நஷ்டத்தை ஏற்படுத்தும் முதலீடுகளில் இருந்து லாபம் தரும் முதலீட்டிற்கு பணத்தை மாற்றி மறுசமன் செய்வது அவசியமாகும்.

காப்பீட்டுத் திட்டம்...

எவ்வளவு திட்டம் தீட்டினாலும், நாளை என்பது கணிக்க இயலாதது. வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரின் இழப்பு ஏற்படுத்தும் வருமான நெருக்கடியை சமாளிக்க டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதே சிறந்தது. மிகக் குறைவான செலவில் தவணை முறையில் ஆயுள் காப்பீடு கிடைப்பதால், குடும்பத்தின் முக்கிய அங்கத்தினரின் இழப்பை சமாளிக்கும் மிகச் சிறந்த உபாயமாக இது அமைகிறது.

முறையான சேமிப்பு...

பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால நோக்குடன் முதலீடு செய்வது பரிந்துரைக்கத்தக்கது. முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் முதலீடு செய்வதால், காலப்போக்கில் கண்ணியமான லாபம் கிடைக்கும். இதற்கு தவணை முறையில் சேமிக்கும் எஸ்ஐபி என்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் உதவுகிறது. நாம் நிர்ணயித்த அளவான தொகையை, முறையான இடைவெளிகளில் தொடர்ந்து முதலீடு செய்துவருவதே இந்த முறையாகும். பணம் கிடைக்கும்போது முதலீடு செய்வதைக்காட்டிலும் இந்த முறை லாபத்தில் நிலையான முன்னேற்றத்தை தரக்கூடியது.

ஒன்றிரண்டல்ல, இவ்வாறான பல முறைகளின் உதவியோடு நமது ஓய்வூதியத்தை திட்டமிட்டு வடிவமைத்துக்கொள்ளலாம். தனக்குத் தானே திட்டமிடுதலில் சிரமம் ஏற்படும்போது, இந்தத் துறையில் முறையான அனுபவம் பெற்ற நிதி நிர்வாகிகள் மூலம் நமது ஓய்வூதியத் திட்டத்தை நிர்மாணம் செய்துகொள்ளலாம். பல வருட அனுபவம் மிக்க இன்டகிரேட்டட் நிறுவனத்தின் தொழில்முறை வல்லுநர்கள் உதவியை நாடி இப்போதே உங்களுக்கான, நிதித் திட்டமிடலைப் பெற, தொடர்புகொள்ளவும்: 75488 52309/ 75488 52310.

மேலும் விவரங்களுக்கு..... க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க