2021-ம் ஆண்டில் விண்வெளியில் பீன்ஸ் விளையலாம் - ஆய்வில் தகவல் | Astronauts will Grow Beans in ISS in 2021

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (08/01/2019)

கடைசி தொடர்பு:07:50 (08/01/2019)

2021-ம் ஆண்டில் விண்வெளியில் பீன்ஸ் விளையலாம் - ஆய்வில் தகவல்

சர்வதேச விண்வெளி நிலையம்

 '2021-ம் ஆண்டில், விண்வெளியில் பீன்ஸ் விளைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன' என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். அங்கேதான் இந்த பீன்ஸ் செடியும் வளர்க்கப்பட உள்ளது. விண்வெளியில் ஒரு தாவரம் வளர்வதற்குத் தேவையான காற்று, நீர் மற்றும் சூழ்நிலை இருப்பதில்லை. எனவே, அங்கே எந்த ஒரு தாவரத்தையும் வளர்ப்பது கடினமான ஒன்று. எனவே, செடி வளர்வதற்குத் தகுந்தவாறு ஒரு தொட்டியை நார்வேஜியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதில், தாவரம் வளர்வதற்குத் தேவையான காற்று, ஊட்டச்சத்துகள், நீர் போன்றவை இருக்கும்.

விண்வெளி

 மூன்று வருடங்களுக்கு முன், கீரை வகை செடி ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்து ஆய்வுசெய்யப்பட்டது. தற்போது, ஒருவர் அதிகபட்சம் ஆறு மாதம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க முடியும். அதே நேரத்தில், செவ்வாய் கிரகத்துக்கு ஒருவர் பயணித்தால், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது விண்வெளியில் பயணம் செய்யவேண்டியிருக்கும். எனவே, இது போன்ற ஆய்வுகள் எதிர்காலத்தில் மனிதன் விண்வெளியில் நீண்ட காலம் வெகு தொலைவுக்கு பயணிக்கும்போது உதவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.