இறந்து கிடக்கும் கணவனின் தலையை மெல்லத் தூக்கி தன் மடியின் மீது கிடத்திக்கொண்டார் ரூப் கன்வர். அவர் உடல் நடுங்கியது. சற்று தள்ளி சிதை எரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொழுந்து விட்டெரியும் நெருப்பை உணர்ச்சிகள் ஏதுமற்று பார்த்துக்கொண்டிருந்தார் ரூப் கன்வர். சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டார். ஒரு பெருங்கூட்டம் மயானத்தைச் சுற்றிக் கூடியிருந்தது. அதில் கணவரின் உறவினர்களுக்குத் தெரிந்தவர்கள், பழக்கமான வர்கள் இருப்பார்கள். அக்கம் பக்கத்தினர் இருப்பார்கள்.

துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்குச் சமமாக வேடிக்கை பார்க்க வந்தவர்களும் இருப்பார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருக்கலாம். அது தவிர்க்கவியலாதது. அவர்களுக்காகவும் சேர்த்துதான் இப்பெருநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

போதுமான அளவுக்குத் தீ வளர்ந்து விட்டது. `தயார்' என்று யாரோ குரல் கொடுத்தார்கள். ரூப் கன்வர் எழுந்து கொண்டார். முதலில் இறந்த உடலை எடுத்துச் சென்று கிடத்தினார்கள். `அடுத்து நீ' என்று அறிவுறுத்தியிருந்தார்கள். `கண்களை மூடிக்கொள், கடவுளை நினைத்துக்கொள். எல்லாம் நல்லபடியாக நடக்கும், போய் வா.'

இது நடந்தது ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் அமைந்துள்ள டியோரலா என்னும் கிராமத்தில். 4 செப்டம்பர் 1987 அன்று.

சம்ஸ்கிருதத்தில் ‘சத்’ என்றால் கற்பு. அதிலிருந்து வந்த சதி என்னும் சொல்லின் பொருள், கற்புள்ளவள் அல்லது புனிதமானவள். உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்கும் சதி என்றே பெயர். சதி இரண்டு வகைப்படும். ரூப் கன்வர் போல தன் கணவனின் உடலோடு சேர்ந்து தீயில் பாய்வதன் பெயர், `சஹமரணா' - உடன் இறப்பது. கணவனை இழந்த மனைவி ஒருவேளை கர்ப்பமாக இருந்தால் அவள் சஹமரணத்தை நாடக் கூடாது. அதேபோல, கணவன் தூர தேசத்தில் இருக்கும்போது இறந்துபோனாலோ, அந்த விஷயம் பின்னர் தெரியவந்தாலோ சஹமரணம் சாத்தியப் படாது. இதன் பொருள் அத்தகைய பெண்கள் இனி சாகத் தேவையில்லை என்பதல்ல. அவர்களுக்கு வேறு வகையான மரணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

`அனுமரணா' என்று அதை அழைக்கிறார்கள். காலம் கனிந்ததும் இவர்களும் தீயில் பாய வேண்டும். அதே மாதிரியான சடங்குகள் இப்போதும் இடம்பெறும். அதேபோல சிதை வளர்க்கப்படும். ஒரே வேறுபாடு, இறந்துபோன கணவன் பயன்படுத்திய ஏதேனும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து அதையே தன் கணவனின் உடலாகக் கருதிக்கொண்டு அதை அணைத்தபடி அவள் உடன்கட்டை ஏற வேண்டும். தலைப்பாகை, துணிமணி என்று என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். பிடி சாம்பல் கிடைத்தால் கூடுதல் மேன்மை!

சதியின் வரலாறு இன்னமும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கம் எப்போது தொடங்கியது? தொடங்கி வைத்தவர்கள் யார்? பொயுமு 1700-க்குப்பிறகு வந்துசேர்ந்த ஆரியர்களின் வேத நூல்களில் சதி குறித்து எதுவும் இல்லை என்பதால், இது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த மரபான வழக்கமல்ல என்று சொல்லமுடியும் அல்லவா? பொயுமு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் உயிர்க்கொல்லாமை குறித்து நிறைய பேசியிருக்கிறார். சதி அப்போது வழக்கத்திலிருந்தால் நிச்சயம் அவர் அதைக் குறிப்பிட்டிருப்பார் அல்லவா? ஆக, அவருக் கும் பிறகுதான் இந்த வழக்கம் தொடங்கி யிருக்க வேண்டும் அல்லவா? வரலாற்று ஆய்வாளர்கள் இவற்றை இன்னமும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சதி குறித்து ஆதாரபூர்வமான தகவல்களும் நேரடிச் சாட்சியங்களும் அதிகாரபூர்வப் பதிவுகளும் நமக்குக் கிடைப்பது காலனிய காலத்தில்தான். உடன்கட்டை ஏறும் பெண்களை என்ன செய்வதென்று பிரிட்டிஷ் அரசுக்கு முதலில் குழப்பங்கள் இருந்தது உண்மை. தடுத்தால், பூர்வீக மக்களின் மத விவகாரங்களில் தலையிடுவதாக ஆகி விடாதா? அதன் காரணமாக எதிர்ப்புகள் கிளம்பாதா? நமக்கென்ன வம்பு என்று முகத்தைத் திருப்பிக்கொள்ளவும் அவர்களால் முடியவில்லை. எனவே, மத விவகாரங்களில் பாண்டித்தியம் பெற்றவர்களின் ஆலோசனை களின்படி சில விதிமுறைகளைக் கட்டமைத்தனர். எது உண்மையான சதி? எத்தகைய பெண்களை அனுமதிக்கலாம்? யாருக்கு சதி மறுக்கப்பட வேண்டும்? இதையெல்லாம் கண்காணிக்க அரசு அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். ஒரு பெண் தானாகவே முன்வந்து தான் உடன்கட்டை ஏறுகிறாரா அல்லது அவருக்கு ஏதேனும் கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி சிதையில் தள்ளிவிடுகிறார்களா என்பதையும் அவர்கள் கண்காணித்தனர்.

கிறிஸ்துவ மிஷினரிகள் சதியை எதிர்க்க ஆரம்பித்தபோது, சதியை உயர்த்திப் பிடிக்க பலர் ஆவேசத்துடன் முன்வந்தனர். எங்கள் வீட்டுப் பெண். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம். எதற்காக பிரிட்டிஷ் அரசு எங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்? எது சரி, எது தவறு என்பதை அறிவுறுத்தும் அதிகாரத்தை ஏன் அந்நியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்? சதியின் மேன்மை புரியுமா உங்களுக்கு? சதியைப் போல பெண்களை மகத்துவப் படுத்தும் இன்னொரு வழி உலகில் இருக்கிறதா?

ஏன் சதி அவசியம் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் அடுக்கிக் காட்டினார்கள். கணவனை இழந்த பெண் தனியாக இருப்பது அவளுக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கும் ஆபத்து. அவளுடைய இருப்பு மற்றவர்களின் கண்களை உறுத்துகிறது. தவறான எண்ணங்களையும் வளர்க்கிறது. சில நேரம் அவளே தவறான வழியைத் தேர்ந்தெடுக்கும்படி ஆகிவிடுகிறது. அவ்வாறு நடக்கும்போது அவள் தன் கணவனின் நினைவுகளுக்குத் துரோகம் செய்வதோடு கணவரின் குடும்பத்துக்கும் நீங்காப் பழியை ஏற்படுத்திவிடுகிறாள். இதைத் தவிர்க்கவே சதி என்னும் ஏற்பாடு உருவானது. சஹமரணா அல்லது அனுமரணாவைத் தேர்ந்தெடுக்கும் பெண் புண்ணியம் செய்தவளாக மாறுகிறாள். மேலும், அவள், அவள் குடும்பத்தினர், கணவரின் குடும்பத்தினர் அனைவரும் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு சுகவாழ்வு வாழ்வார்கள் என்று முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள்!

கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை இல்லாதுபோனால் அவள் தன் கணவரின் சகோதரனை மணம் செய்துகொள்ளலாம் என்கிறது ‘நியோகா’ என்னும் மரபுமுறை. சதியே சிறந்தது எனும் போது ஏன் நியோகா தோன்ற வேண்டும்? `சொத்துதான் காரணம்' என்கிறார் ரொமிலா தாப்பர். `குடும்பத்தைவிட்டுச் சொத்து வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு வசதியான ஏற்பாடு இது' என்கிறார் அவர். `பெண்ணே ஒரு சொத்துதான்' என்பது இந்த ஏற்பாட்டின் அடிப்படை.

சதிக்கும் இது பொருந்தும். ஒரு பெண்ணின் உடல் அவள் கணவனுக்கும் அவனுடைய குடும்பத்தினருக்குமான ஓர் உடைமையாகக் கருதப்பட்டது. கணவன் அவளுடைய எஜமான் என்னும்போது, ஒரு பெண் அவனுடைய நிழலே என்னும்போது அவளுக்கென்று தனித்த வாழ்வென்பது இருக்கத் தேவையில்லை. அடையாளம் அல்லது சுயம் என்பது அவளுக்கு இல்லை. எஜமான் இல்லை என்றாகிவிட்ட பிறகு அந்த வீட்டில் அவளுக்கு இனி என்ன வேலை? வீடு என்றொன்று இல்லை எனும் போது அவள் வாழ்ந்துதான் என்ன பலன்? இஸ்லாமியப் படையெடுப்புகள் காலத்திலும் இதுவேதான் நடந்தது. எதிரிகளின் கரங்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று அவசரமாக வீட்டுப் பெண்களை நெருப்புக்கு அளித்தவர்கள் இருந்தனர்.

போராட்டங்களும் அழுத்தங்களும் வலுத்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலத்திலேயே சதி சட்டப்படி தடை செய்யப் பட்டுவிட்டது. என்றாலும், சட்டத்தை மட்டும் கொண்டு சமூகத்தின் கருத்தியலை மாற்றிவிட முடியாது என்பதற்கு ரூப் கன்வர் ஓர் உதாரணம். 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சதி தடுப்புச் சட்டத்தின்படி ஒரு பெண்ணை உடன்கட்டை ஏறும்படி நிர்பந்திப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். ரூப் கன்வர் தானாகவே முன்வந்து உடன் கட்டை ஏறவில்லை, அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்று 32 பேர்மீது குற்றம்சாட்டி வழக்கொன்று பதிவு செய்யப் பட்டது. ஆனால், இவர்கள் ஒன்றுசேர்ந்துதான் ரூப் கன்வரை உடன்கட்டை ஏறுமாறு கட்டாயப்படுத்தினர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கமுடியாமல் போனதால் ராஜஸ்தான் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது.

சதி இன்னமும் விவாதங்களிலிருந்து மறைந்து விடவில்லை. பள்ளிப் பாடப்புத்தகங்களை மாற்றியெழுதுவதற்காக 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ராஜஸ்தானில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தியது. அவ்வாறு அவர்கள் மாற்றியமைத்த ஒரு முக்கியமான பாடம் இதுதான். ‘சதி என்பது பலரும் கருதுவதைப் போல் ஒரு மோசமான செயலல்ல. பெண்களை மகிமைப்படுத்துவதே சதியின் நோக்கம்'. நெருப்பு சுட்டுப்பொசுக்கிய உடலை எடுத்து வைத்துக்கொண்டு மதம், மரபு, கலாசாரம், மகத்துவம் என்றெல்லாம் பூசி மெழுகி புதிய கதைகளை உருவாக்க இன்னமும் பலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை உயிரோடிருக்கும் பெண்ணின் உடல் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டிவிடுகிறது. அதே உடல் தீயில் குதித்துவிட்டால் தெய்வ நிலையை அடைந்துவிடுகிறது.

ரூப் கன்வரின் மரணத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் வசித்துவந்த அவர் சகோதரர் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார்... ‘`ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் ரூப் கன்வர் உடன்கட்டை ஏறியிருக்கிறார். இருந்தாலும் எங்களுக்கு வருத்தங்கள் இல்லை. அவள் இறந்தது தொடர்பாக யார்மீதும் எந்தப் புகாரும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. இரண்டு மணி நேரப் பயணத்தில் எங்களை வந்தடைந்துவிட முடியும் என்றாலும், என் சகோதரியின் `சதி' குறித்து ஒரு தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பாதகமில்லை. ரூப் கன்வர் எங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பெருமையே தேடித் தந்திருக்கிறார்...’'

டிப்ஸ்

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் அதற்குத் தாய்ப்பால் புகட்டுவது அவசியம். ஆறு மாதங்கள்வரை குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்; தண்ணீரைக்கூட தவிர்த்துவிடலாம். ஆறு மாதங்களுக்குப் பின், இட்லி, சாதம் என துணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம். அவை வீட்டில் சமைத்த உணவாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு வயது முடிந்த பிறகு, மட்டன் சூப், மீன் என அசைவ உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.