வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (08/01/2019)

கடைசி தொடர்பு:08:18 (11/01/2019)

`வாசிப்பு முக்கியம் பாஸ்!’ - மாரி செல்வராஜ் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் #ChennaiBookFair

புத்தகங்கள் மனிதனுடைய வாழ்க்கையைப் புரட்டிவிடக் கூடியது. ஒவ்வொரு புத்தகமும் புதிய உலகங்களைப் புதிய மனிதர்களை அவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறது. நம்மோடு உரையாட வைக்கிறது. புரட்சியை, சமூக மாற்றத்தை நிர்ணயிப்பதில், சமூகம் சார்ந்து விவாதிப்பதில் புத்தகங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கின்றன. மனிதனுக்குக் கிடைக்காத அகம் சார்ந்த கேள்விகளுக்குப் புத்தகங்களே விடைகளைத் தருகின்றன. புத்தகங்களின் வழியாக உருவானவர்கள் தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாகவும் உள்ளனர். `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பு வழியாகப் பலரின் மனதைத் தொட்ட; பரியேறும் பெருமாள் வழியாகப் பேசமறுக்கும், பேசத் தயங்கும் அரசியலை மிகத்தெளிவாகப் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி, வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மாரி

 

வாசிப்பினுடைய அவசியம் பற்றி...

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைதான் அமைந்துள்ளது. கிராமம், அரசியல், சமூகம், மொழி, மனது, சிந்தனை என எல்லாவற்றையும் சேர்த்து ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது புத்தக வாசிப்புதான். புறம் சார்ந்து இயங்கும் உலகில், அகம் சார்ந்து நம்மை யோசிக்க வைப்பது வாசிப்புதான். புத்தகம் வாசிக்கவில்லையெனில், ஒருவருடைய அகத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும். ஒருவனை ஒரு முழுமனிதனாக மாற்றுவது புத்தகம் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.

வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள்...

1. அம்பேத்கர் அன்றும் இன்றும் (கட்டுரைத் தொகுப்பு )

 செல்வராஜ்

2. பெரியார் இன்றும் என்றும் (கட்டுரைத் தொகுப்பு)

இவை இரண்டும் இந்தியாவின் சமூக அரசியலின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்கள்.

3. இஸ்தான் புல் (நாவல்)


 மாரி செல்வராஜ்

பால்யம் சம்பந்தமாக வெளிவந்துள்ள புனைவுகளில் மிக முக்கியமான புத்தகம்.

4. மண்ட்டோ படைப்புகள்.

 செல்வராஜ்

விளிம்புநிலை மக்களைப் பற்றிய தெளிவான புரிதல்கள் வர வேண்டுமெனில் மண்ட்டோவை படிக்க வேண்டும்.

5. சோஃபியின் உலகம்.

மாரி செல்வராஜ்

நவீன தொழில்நுட்பங்களால் குழப்பமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் குழப்பமான சில விஷயங்களிலிருந்து விடுபட சோஃபியின் உலகம் கைகொடுக்கும்.