Published:Updated:

28-வது ஆண்டாக விருதுநகர் முதலிடம்!

 28-வது ஆண்டாக விருதுநகர் முதலிடம்!
28-வது ஆண்டாக விருதுநகர் முதலிடம்!
 28-வது ஆண்டாக விருதுநகர் முதலிடம்!

விருதுநகர், மே 9: பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கல்வி மாவட்டங்களின் வரிசையில் முதலிடத்தை விருதுநகர் கல்வி மாவட்டம் பிடித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 173 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 21,224 மாணவர்களில் 20,348 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். விருதுநகர் கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.87 ஆகும்.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் மாவட்டம் 28 ஆவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

மாநில அளவில் சிறப்பிடம் பெறுவதில், சமீப காலமாக நாமக்கல் மாவட்டம் முன்னிலை வகித்தாலும், ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி நிலையைப் பிரதிபலிக்கும் தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

அதாவது, அரசு பள்ளிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதையே இது காட்டுகிறது.

விருதுநகரைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பிடித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 153 பள்ளிகளில் தேர்வு எழுதிய 19020 மாணவர்களில் 18157 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாவட்டத்துக்கு 95.46 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 259 பள்ளிகளில் தேர்வு எழுதிய 34645 மாண‌வர்களில் 32777 மாண‌வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.61.
 
கல்வி மாவட்டங்கள் அளவில் மிக மோசமாக திருவண்ணாமலை மாவட்டம் 69.91 தேர்ச்சி சதவீதத்துடன் பட்டியலில் பின் தங்கியுள்ளது. இங்கு 170 பள்ளிகளில் தேர்வு எழுதிய 26425 மாணவர்களில் 18474 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

கன்னியாகுமரி - 94.03
திருநெல்வேலி - 94.61
தூத்துக்குடி - 95.46
ராமநாதபுரம் - 89.23
சிவகங்கை - 91.82
விருதுநகர் - 95.87
தேனி - 93.58
மதுரை - 93.77
திண்டுக்கல் - 89.76
ஊட்டி - 84.05
திருப்பூர் - 92.89
கோவை - 92.95
ஈரோடு - 94.28
சேலம் - 89.4
நாமக்கல் - 94.41
கிருஷ்ணகிரி - 83.18
தர்மபுரி - 86.22
புதுக்கோட்டை - 86.95
கரூர் - 91.03
அரியலூர் - 74.94
பெரம்பலூர் - 90.59
திருச்சி - 93.78
நாகப்பட்டினம் - 84.7
திருவாரூர் - 82.53
தஞ்சை - 90.03
விழுப்புரம் - 78.03
கடலூர் - 73.21
திருவண்ணாமலை - 69.91
வேலூர் - 81.13
காஞ்சிபுரம் - 84.73
திருவள்ளூர் - 85.39
சென்னை - 91.82
புதுச்சேரி - 88.2