Published:Updated:

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!
பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

இந்த இதழ் ஆனந்த விகடன்: https://bit.ly/2H4f4LY

> 'நீ பண்ணுற படம் தமிழ்ல தவிர்க்கமுடியாத படமா இருக்கணும்'னு ராம் சார் சொன்னார். இப்போ என் படத்துக்கு அவர் கையால விருது வாங்குறது நெகிழ்ச்சியா இருக்கு. இந்த விருது ராம் சாருக்குத்தான் சொந்தம்' என மாரி சொல்ல, குருவின் கண்களில் பேரன்பு பொங்கி வழிந்தது. 'நல்ல திரைப்படங்களுக்கு மக்கள் அளிக்கிற வரவேற்புதான் தொடர்ந்து நல்ல படைப்புகள் வெளிவரக் காரணமா இருக்கு' என்றார் இரஞ்சித்.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

> தனுஷின் அம்மா, அப்பா, இரு அக்காக்கள் எல்லோரும் மேடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து தனுஷை திக்குமுக்காட வைத்ததில், வார்த்தை வரவில்லை ரெளடி பேபிக்கு. "இவன் மகன் இவன்ங்கிறதை மாத்தி, இவன் தந்தை இவன்னு சொல்ல வெச்சிருக்கார். இதுக்கு மேல வேற என்ன வேணும்" என, தன் மகனின் உச்சிமுகர்ந்தார் கஸ்தூரி ராஜா. அதை, முட்டி நிற்கும் கண்ணீரோடு பார்த்து நின்றார் தனுஷின் அம்மா. 

> 'காதலே காதலே' என வயலின் இசைக்க, கரகோஷம் பக்கத்து ஏரியாவரை கேட்டது. சேலை ஜொலிஜொலிக்க மேடையேறிய 'ஜானு திரிஷா. '96' படத்திற்காக 'சிறந்த நடிகை'க்கான விருதை அரவிந்த்சுவாமியிடமிருந்து பெற்றுக்கொண்டார் த்ரிஷா. "எப்பவும் என்னுடைய விருதுகளை யாருக்கும் டெடிகேட் பண்ணமாட்டேன். ஆனா, இந்த விருது கிடைக்கக் காரணம், முழுக்க முழுக்க டீம் ஒர்க்.  '96' டீமுக்கு இந்த விருதை டெடிகேட் பண்றேன்" எனப் புன்னகைத்தார் த்ரிஷா! 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

> நிகழ்ச்சியின் சஸ்பென்ஸ் என்ட்ரி விஷால். விகடன் விழா நான் இல்லாமலா என்று ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டு, விருதுபெற்ற கலைஞர்களை ஊக்குவித்தார்.

- ஒவ்வோர் ஆண்டும் தலைசிறந்த கலைஞர்களையும் படைப்புகளையும் முடிசூடி கௌரவிக்கிற தமிழ்த்திரையுலகின் நம்பர் ஒன் மேடை 'ஆனந்த விகடன் - சினிமா விருதுகள் விழா.' 2018-ம் ஆண்டுக்கான விழா, சென்னை - வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. தமிழ்த்திரையுலகமே ஒன்றுகூடிய விழாவில், எண்ணற்ற திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியிலிருந்து சில அசத்தலான தருணங்களின் தொகுப்பை 'இது விகடன் மாஸ்!' எனும் தலைப்பில் வழங்கியிருக்கிறது நிருபர்கள் டீம். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில், டக்கென ஹீரோ உங்களிடம், அடுத்து ராஜா பாட்டு கேட்கலாமா... இல்லை ரஹ்மான் பாட்டு கேட்கலாமா எனக் கேட்டுவிட்டு, நீங்கள் சொல்லும் பதிலுக்கு ஏற்ப பாடலைத் தேர்வுசெய்து கதையைத் தொடர்ந்தால், அட எனத் தோன்றும் அல்லவா. அதுதான் Interactive சினிமா.  2B படத்தில் இரண்டு வாய்ப்புகளை நம் முன் காட்டிய சினிமா, இப்போது அந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனையும் தருகிறது. 

ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் உட்பட, பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இன்ட்ராக்டிவ் சினிமாதான் வருங்காலம் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அதை சாத்தியப்படுத்திக்காட்டி, 'சூப்பர் ஒன்' ஆகிவிட்டது நெட் ஃபிளிக்ஸ். ஆம், நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளியான பிளாக் மிரர்: 'பேண்டர்ஸ்னேட்ச்' என்ற படம் அபாரமான இன்ட்ராக்டிவ் சினிமா. டெக்னாலஜியின் கறுப்புப் பக்கங்களை, ஆபத்தை பட்டியலிடும் தொடரான 'பிளாக்மிரர்'-ன் ஒரு சிறப்புப் பகுதியாக இந்த பேண்டர்ஸ்னேட்சை வெளியிட்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். வெளியான முதல் நாளிலிருந்தே இதற்கு ஏகோபித்த வரவேற்பு. இது எப்படி சாத்தியமானது என்பதை விவரிக்கிறார், பிளாக் மிரர் தொடரின் எழுத்தாளர் சார்லி ப்ரூக்கர். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

"  கன்றை வாங்கி வந்த முதல் ஆறு மாதம் தினமும் பயிற்சி இருக்கும். முழுமையாக ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னர்தான் பந்தயத்திற்குக் கொண்டுசெல்லப்படும். காலையில், சோள நாத்து கொடுப்போம். அது நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு. பின்னர், உழவுக்கு அவற்றை அனுப்புவோம். ஒரு நல்ல பந்தயமாடு, நல்ல உழவுமாடாகவும் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில், வயல்காட்டில் உழுதுகொண்டிருந்த மாட்டைத்தான் வண்டியில் பூட்டி ரேஸ் விட்டு மகிழ்ந்திருக்கிறான் தமிழன். அதனால், கன்றாக இருந்தாலும் பெரிய மாடாக இருந்தாலும் அது நிச்சயம் உழவு மாடாக இருக்கவேண்டியது அவசியம்.

...ரேஸ் வண்டியைப் பூட்டி ஊர் முழுவதும் சுற்றிவருவோம். அடுத்த இரண்டு மாதத்தில், சிறுவர்களை அதன்மேல் உட்காரவைப்போம். அதன் பின்னர் நாம் உட்காரலாம். இவை எல்லாம் முடிந்து, மாடு பந்தயத்துக்குத் தயாராகும் வரை அதை ஒரு பிள்ளையைப்போல கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வோம். எங்கள் வீட்டில் ஒரு குழந்தையாகவே இந்த மாடுகள் வளரும்." 

- தட்டுவண்டிப் பந்தயம், சீட்டுப்பந்தயம் எனப் பல பெயர்கள் உண்டு. பொதுவாக அறியப்படும் பெயர், 'ரேக்ளா ரேஸ். 'புழுதிபறக்க சீறிப்பாயும் அந்த வண்டிக்காளைகள் பற்றியும் தமிழ்ப் பாரம்பர்ய விளையாட்டின் பின்னணிகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு, தேனி மாவட்ட கிராமங்களில் பயணித்து, 'நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!' எனும் சிறப்புக் கட்டுரை வழங்கியிருக்கிறது விகடன் டீம்.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

"மஞ்சுவிரட்டுக்கு நாங்க காளைய பிடிச்சுட்டுப் போறதுக்கு முன்னாடி, வீட்ல சாமி கும்பிடுவோம். அப்ப, எங்க அம்மா 'நம்ம ஊர் மானத்தையும் வீரத்தையும் காக்கப் போற நீ, யாரையும் உன் கொம்பால குத்திக் கொலை பண்ணிட்டேன்னு பழிவந்துடக் கூடாது சாமீ. அதேநேரத்துல, உன் கொம்பு ரத்தத்தோடு வரணும்'னு சாமிகிட்ட வேண்டி வாழ்த்தி, திருநீறு போட்டு அனுப்புவாங்க" என்று தன்னுடைய மஞ்சுவிரட்டு அனுபவத்தைச் சொல்லும் பூலோகத்துக்கு வயது 80.

இந்த இதழ் ஆனந்த விகடன்: https://bit.ly/2H4f4LY

"ஜல்லிக்கட்டுக் காளைகள் வாடிவாசலை விட்டு வெளியே வரும்போது, மாடுபிடி வீரர்கள் வாடியின் பக்கவாட்டில் கூடி நின்று, அதில் ஒரு வீரர் அடக்குவது ஜல்லிக்கட்டு. இது, 100 மீட்டர் தூரத்துக்குள் முடிந்துவிடும். அதே நேரத்தில், மஞ்சுவிரட்டு நடக்கும் தொழுவத்தில் இருந்து போட்டிக்கு மாடு அவிழ்த்துவிட்டதும், முதல் 100 மீட்டர் தூரத்துக்கு மாட்டை வீரர்கள் யாரும் தொட மாட்டார்கள். அதற்குப் பின் மாடுபிடி வீரர்கள் நின்றுகொண்டு, காளையை விடாமல் ஒருவர் திமிலைப் பிடித்து அணையும்(கட்டிப்பிடிக்கும்) போது, மற்ற இரண்டு மூன்று வீரர்கள் அந்த மாட்டுக் கழுத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும் துண்டு, தங்கக்காசு, வெள்ளியால் ஆன நெற்றிப்பட்டை, ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அவிழ்த்துவிடுவார்கள்..."

- மஞ்சுவிரட்டுப் போட்டிகளுக்கெனக் காளைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் பூலோகத்தையும், ஏழு தலைமுறையாகத் தனது சொந்தச் செலவில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் மஞ்சுவிரட்டு நடத்திவரும் வேலுச்சாமியையும் நேரில் சந்தித்து, மஞ்சுவிரட்டின் பின்னணியை நமக்குத் தந்திருக்கிறது, “சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே!" எனும் சிறப்புக் கட்டுரை. 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

"இயற்கையோடு  இயற்கையாக காட்டுக்குள் இருந்தவர்களை ஒவ்வொரு சட்டமாக இயற்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமரவைத்ததைத் தவிர எங்களுக்கு என்ன செய்துவிட்டது அரசு? எங்களின் நிலையை மாற்ற, இலவச மனைப்பட்டா வழங்குவதாக அறிவிக்கிறது அரசு. அதை வாங்க வேண்டுமென்றால் சாதிச்சான்றிதழ் கேட்கிறார்கள். அதைக் கேட்டு தாசில்தார் அலுவலகம் போனால், 'நல்ல டிரஸ் போட்டிருக்கீங்களே... நீங்க இருளர் என்று நாங்கள் எப்படி நம்புவது?' என்று தர மறுக்கிறார்கள். இப்படியான இரட்டை நிலைப்பாடுகளைத்தான் எங்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கிறது அரசு."

- நீலம் பண்பாட்டு மையம், சமீபத்தில் சென்னையில் 'வானம்' என்கிற கலை விழாவை நடத்தியது. அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, 'முல்லை கலைக்குழு'. இருளர் மக்கள் இன்றளவும் பல்வேறுவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். தங்களின் வலிகளுக்கும், உரிமைகளுக்கும் கலை வடிவம் கொடுத்து மேடையேற்றிவருகிறார்கள் இந்தக் கலைக்குழுவினர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜக்காம்பேட்டை இருளர் குடியிருப்பில், 'முல்லை' குழுவினரை சந்தித்து 'எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!' எனும் தலைப்பில் சிறப்பான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது விகடன் டீம்.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

"புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன?"

"பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். தொழிலதிபர், டாக்டர், இன்ஜினீயர், அரசியல் பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். தங்கள் பூர்வீகத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவிற்குப் பயணம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். பிரச்னைகள் அல்லது தீராத நோய்களுக்கு மாரியம்மனை வழிபடுகிறார்கள். அடிக்கடி விழா நடக்கிறது. காவு கொடுக்கப்படுகிறது. பலிகொடுக்கப்பட்ட ஆடு பகிர்ந்து உண்ணப்படுகிறது. மொரீஷியஸ் தமிழர்களிடம் 'ஏழு கறி' என்ற பெயரில், ஏழு விதமான காய்கறியைச் சமைத்து வழிபடுகிற முறை இருக்கிறது. இது, தமிழ்நாட்டில் இல்லாத ஒரு வழிபாட்டுமுறை."

- அப்பாசாமி முருகையன்... சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகைதான் பிறந்த ஊர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் 1980-ல் முனைவர் பட்டம் பெற்றவர். இப்போது, பாரீஸில் 'உயர் கல்வி ஆய்வு' நிறுவனத்தில் (EPHE) ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். 150 ஆண்டுகளுக்கு முன் கடல் கடந்து போன தமிழர்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்கிற ஆய்வுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகிறார். இது தொடர்பாக 'எத்திசையும் புகழ் மணக்க!' எனும் தலைப்பில் வந்துள்ள இவரது பேட்டி மிகவும் முக்கியமானது.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!


"பதினாறு வயசுல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல போய் நின்னேன். இப்போ இருக்குற மாதிரி கட்டுப்பாடெல்லாம் அப்போ கிடையாது. தைரியமுள்ளவங்க யாரும் களத்துல இறங்கலாம். நானும் இறங்குனேன். திமிறிக்கிட்டு வர்ற காளைய எதிருல பாத்ததும் பயம் வந்துடுச்சு. கண்ண மூடித் தொறக்குறக்குள்ள என்னத் தூக்கிப் போட்டுட்டு போய்ருச்சு. மாடு பிடிக்கிறது எப்படீன்னு எனக்கு யாரும் கத்துத் தரல. மாடு தூக்கிப் போட்டதுல கை மணிக்கட்டு இறங்கிடுச்சு. அடுத்து சத்திரப்பட்டி போட்டிக்கு மாவுக் கட்டோட போய் நின்னேன். போன போட்டில என்ன தப்பு பண்ணோம்னு யோசிச்சுப் பார்த்தேன். களத்துல நிக்குறப்போ மாட்டோட கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு, அடில்லாம் படத்தான் செய்யும்... களத்துல இறங்கிட்டா பயம் இருக்கக் கூடாதுனு அம்மா சொன்னது நினைவுக்கு வந்துச்சு. குத்துப்பட்ட பயல்னு யாரும் சொல்லக் கூடாதுங்குற வைராக்கியத்தோட சத்திரப்பட்டில நின்னு வெளையாண்டேன். இன்ன வரைக்கும் தொடருது. அதுவே இப்போ வாழ்க்கையாகிடுச்சு" என்று புன்னகைக்கும் அவருக்கு ஓர் ஆதங்கமும் இருக்கிறது. 

- உடலெங்குமுள்ள வடுக்களைச் சுட்டிக்காட்டியபடி இயல்பாகப் பேசும் முடக்கத்தான் மணி ஓர் ஆச்சர்ய மனிதர். ஜல்லிக்கட்டுக் களத்தின் சச்சின் டெண்டுல்கர். மதுரை வட்டாரத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க முடக்கத்தான் மணியைத் தெரியாத வாடிவாசல் கிடையாது. மதுரையில் அரசுப் பதிவு பெற்ற ஜல்லிக்கட்டுப் பயிற்சி  மையத்தினையும் நடத்திவருகிறார். அவருடனான 'கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!' சிறப்புப் பேட்டி தரும் தகவல்கள் ஏராளம். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

தமிழில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படும் 'அவள் அப்படித்தான்' திரைப்படம் வெளியானவுடன் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. அப்போது சென்னைக்கு வந்திருந்த மிருணாள் சென் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். அது பத்திரிகைச் செய்தியானது. அடுத்த சில நாள்களில் 'அவள் அப்படித்தான்' பரவலாகப் பேசப்பட்டு, பெரும்பான்மை மக்களை அடைந்து வெற்றிப்படமாக அமைந்தது. மிருணாள் சென் இல்லை என்றால், 'அவள் அப்படித்தான்' திரைப்படம் நமக்குக் கிடைக்காமல்கூட போயிருக்க வாய்ப்புண்டு.

- 'மிருணாள் சென் எனும் மகா கலைஞன் அமரர் ஆனார் என்கிற செய்தி அச்சப்படுவதற்கன்று. இது நாம் மகிழ்ச்சிகொள்ளவேண்டிய தருணம். காரணம், இந்தியா போன்ற நாடுகளில் ஒரு கலைஞன் மரித்தபின்னர்தான் அடையாளம் காணப்படுகிறார். கொண்டாடப்பட வேண்டியவர் என்கிற தெளிவே அப்போதுதான் இந்தியச் சமூகத்திற்குப் பிறக்கிறது' என்று மிருணாள் சென்னுக்கு அருண்.மோ எழுதிய 'உண்மைகளின் கலைஞன்!' அஞ்சலிக் கட்டுரை இந்தியத் திரைப்படச் சூழலின் ஆழத்தை எளிமையாகச் சொல்லும் பதிவும்கூட.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!


" 'கனா'வும் சரி, இதற்கு முன் வந்த 'ஜீவா'வும் சரி, கிரிக்கெட் அரசியலைப் பற்றி பேசிய படங்கள். குறிப்பாக, சாதி அரசியலும் செலக்‌ஷன் அரசியலும். நிஜத்திலும் அவை நடக்கின்றனவா?" என்றதும் சில நிமிடங்கள் யோசனைக்குப் பிறகு பேசத் தொடங்குகிறார் ஆர்த்தி சங்கரன்.

"என் பீரியட்ல ஆள்கள் கம்மி. ஓரளவு நல்லா ஆடினாலே வளர்ந்துட முடிஞ்சது. நான் அந்த மாதிரியான அரசியலை எதிர்கொள்ளலை. ஆனா, அடுத்தடுத்த நிலைகளுக்குப் போகும்போது நிச்சயம் பிரச்னைகள் ஆரம்பிக்கும். ஸோன்ல ஆரம்பிச்சு இந்தியா செலக்‌ஷன் வரும் வரைக்கும் யார், எந்த ஸ்டேட்டை ரெப்ரசென்ட் பண்றாங்கங்கிறதுதான் முக்கியமா பார்க்கப்படும். இது கிரிக்கெட்ல மட்டுமில்லை, எல்லா ஸ்போர்ட்ஸிலும் இருக்கிறதுதான். திறமையானவங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமப்போவது பலநேரம் நடக்கிறதுதான். அதையெல்லாம் தாண்டி வர்றதுலதான் இருக்கு சேலஞ்ச். அப்படியொரு சவால் நமக்கு முன்னாடி நிற்கிறபோது, 'ச்சீ போ'ன்னு ஸ்போர்ட்ஸை விட்டே ஓடுறது, இதுவும் கடந்து போகும்னு பாடம் கத்துக்கிறதுன்னு ரெண்டு ஆப்ஷன்கள் இருக்கும். திறமை மேல நம்பிக்கை உள்ள ஸ்போர்ட்ஸ் பர்சன் ரெண்டாவது ஆப்ஷனைத்தான் தேர்ந்தெடுப்பாங்க, என்னைப்போல."

- 'கனா'-வில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நிஜ கிரிக்கெட் வீராங்கனையைப் போலவே கிரிக்கெட் ஆடி அசத்தியிருந்தார். அவரை அப்படித் தயார்ப்படுத்தியவர் ஆர்த்தி சங்கரன். தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். கிரிக்கெட் வீரர் வி.சிவராமகிருஷ்ணனின் மருமகள். அவரது 'தடைகள்தான் சவால்!' எனும் இந்தப் பேட்டி 'கனா' தொடங்கி இந்திய மகளிர் கிரிக்கெட் அரசியல் வரை நிறைய பேசுகிறது.  

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

சென்னையில் நிறைய மதுரை உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், பலவற்றில் பெயரில் மட்டுமே மதுரையிருக்கிறது. மதுரை சார்ந்த  உணவுகளோ, அந்த மண்ணின் ருசியோ இருப்பதில்லை.  கலப்பில்லாத பாண்டிய நாட்டு உணவுகளை அதன் தன்மை மாறாமல் ருசிக்க விரும்பும் உணவு ஆர்வலர்கள், புரசைவாக்கம், பெரம்பூர் ஃபேரக்ஸ் சாலையில், ஜி.கே.எம்.மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ கோனார் விலாஸ் உணவகத்துக்குச் செல்லலாம். 

மிகச்சிறிய உணவகம். 12 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம். சுய சேவைதான். பில் வாங்கி முகப்பிலிருக்கும் கிச்சனில் கொடுத்தால் பத்து நிமிடத்தில் சுடச்சுட செய்து தருகிறார்கள்... - 'சோறு முக்கியம் பாஸ்!' தொடரின் இந்த வாரப் பகுதியைத் தவறவிடாதீர்கள்.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 11 அசத்தல்கள்!

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பயணம் செய்யப் பிடிக்கும். ஆனால், பறவைகளைப் போல நினைத்தவுடன் மனிதர்களால் பறந்துவிட முடியாது. நிறைய முன்னேற்பாடுகள் தேவை. செலவும் அதிகம். இவற்றையெல்லாம் சரியாகக் கணித்து முன்னரே திட்டமிட வல்லுநர்களின் உதவி தேவை. ஆனால், அவை பணம் இல்லாமல் சாத்தியமில்லை. இதற்கு இணையம் மூலம் தீர்வு கொண்டு வந்தார் தீபக் கல்ரா. அதுதான் அவரின் ஜீபூம்பா. கொஞ்சம் முதலீட்டுடன், மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தீபக் 2000த்தில் makemytrip.com தொடங்கினார்... கெத்தாக 1000 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்தது...

- ஒரு துறையில் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்தால் அந்த ஐடியாவை அச்சுப் பிசகாமல் பிரதியெடுத்துப் பல நூறு நிறுவனங்கள் தொடங்கப்படும். இது வியாபார உலகில் சாதாரணம். அப்படிப் பல நிறுவனங்கள் makemytrip.com- -க்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டன. அதைக் கண்டு தீபக்குக்கு பயமில்லைதான். எப்படி? -  'கேம் சேஞ்சர்ஸ்' தொடரின் make my trip வென்ற கதையில் விடைகள் கிடைக்கும்.

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2VK08pF