Published:Updated:

அனுதாப ஓட்டுகளை அள்ள காயங்களுடன் டி.வி.யில் தோன்றி இம்ரான்கான் பிரச்சாரம்

அனுதாப ஓட்டுகளை அள்ள காயங்களுடன் டி.வி.யில் தோன்றி  இம்ரான்கான்  பிரச்சாரம்
அனுதாப ஓட்டுகளை அள்ள காயங்களுடன் டி.வி.யில் தோன்றி இம்ரான்கான் பிரச்சாரம்
அனுதாப ஓட்டுகளை அள்ள காயங்களுடன் டி.வி.யில் தோன்றி  இம்ரான்கான்  பிரச்சாரம்

இஸ்லமாபாத்: தேர்தல் பிரச்சாரத்தின்போது கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், அனுதாப ஓட்டுகளை அள்ளும் நோக்கில் தொலைக்காட்சியில் தோன்றி பிரச்சாரம் செய்தார்.

பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் இம்ரான்கான் கட்சியும் போட்டியிடுகிறது. அவர் நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பிரசார மேடைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிப்ட்டிலிருந்து  கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

அவருக்கு முதுகு தண்டு பகுதியில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு, கழுத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

##~~##
இந்நிலையில் இம்ரான்கான் தான் காயம் அடைந்ததை சாதகமாக்கி அனுதாப ஓட்டுகளை பெற முயற்சித்து வருகிறார். இதற்காக காயங்களுக்கு கட்டு போட்ட நிலையில் அவர் நேற்று பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தோன்றி பேசினார்.
அதில் பாகிஸ்தானில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவரது பேச்சு பல தொலைக்காட்சிகளிலும் விளம்பரமாக திரும்ப திரும்ப ஒளிபரப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிச்சயம் அனுதாப ஓட்டு கிடைத்து எங்கள் கட்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்று இம்ரான்கான் கட்சியினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நவாஷ் ஷெரீப் கட்சிக்கும், இம்ரான்கான் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.