ஒரு அன்னையின் நம்பிக்கை! #Inspiration | A Mother's faith Inspiration

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (11/01/2019)

கடைசி தொடர்பு:16:23 (17/01/2019)

ஒரு அன்னையின் நம்பிக்கை! #Inspiration

பிரமித்தியின் கதை...

பிரமித்திக்கு இப்போது 3 வயது ஆகப்போகிறது. பிறக்கும்போது ரூபெல்லா அம்மையால் பாதிக்கப்பட்ட பிரமித்திக்கு மிதமான இதயக் கோளாறு, மூளைக் கோளாறு மற்றும் கண்ணில் பிரச்னை இருந்தது. நாட்கள் செல்லச்செல்லப் பிற பிரச்னைகள் குறைய 4வது மாதத்தில் அவளுக்கு செவித்திறன் பிரச்னை இருந்ததை தாய் சுகுணா கண்டறிந்தார். ENT அறுவை சிகிச்சை மருத்துவர்கள் Cochlear Implant அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அறிவுறுத்தினர். இந்த அறுவை சிகிச்சை தங்களின் பொருளாதார சக்திக்கு மீறியது என அறிந்த பிரமித்தியின் பெற்றோர் 3 மாத தேடலுக்குப் பின் 7 மாதக் குழந்தையை Astra Hearing Care மையத்தின் காதொலி நிபுணரிடம் (Audiologist) காட்டியுள்ளனர். அங்கு பிரமித்திக்கு இடப்பக்கக் காது 60 சதவீதமும் வலப்பக்கம் மொத்தமாகவும் பாதிப்படைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரமித்திக்கு கேள்வித்திறன் சாதனம் (Hearing Aid) பொருத்தப்பட்டது. அதன்பின் பிரமித்தியோடு தன் ஒவ்வொரு நொடியையும் தாய் சுகுணா செலவிட ஆரம்பித்தார். 

தான் எங்கு சென்றாலும், தன் மகளையும் உடன் அழைத்துக்கொண்டு செல்வதுதான் சுகுணாவின் வேலையாக இருந்தது. காது கருவி பொருத்தியபின்னர் தொடர்ந்து குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்ததன் மூலம், பிரமித்தியின் ரெஸ்பான்ஸ் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் 1 1/4 வயதில் பேச்சுப் பயிற்சி நிபுணரிடம் பிரமித்திக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இன்று பிரமித்தியால் பிற குழந்தைகள் போல, ஏன் அதற்கும் ஒருபடி மேலாகவே பேச முடிகிறது. தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் இன்று 3 வயதில் கதைப் புத்தகங்களை படிக்கும் அளவுக்கு பிரமித்தி தேறியிருக்கிறாள். சோதித்து பார்த்ததில் பிரமித்திக்கு 3 வயதுக் குழந்தையை விட அதிக IQ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "பல பெற்றோர்கள் குழந்தையின் செவி குறித்த பிரச்னைகளில் தாமதம் காட்டுகின்றனர். நான் தகுந்த நேரத்தில் காதொலி நிபுணரை அணுகியதால், இன்று பிரமித்தியால் இயல்பான வாழக்கையை வாழமுடிகிறது. குழந்தையின் காது கேளாமையை தயவு செய்து அலட்சியம் செய்யாதீர்கள் என்பதே எல்லாப் பெற்றோர்களுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்" என்கிறார் தாய் சுகுணா.

பேச்சுப் பயிற்சியாளர் கூறுவது என்ன?

"காது சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் மீது தனி அக்கறை செலுத்துவது சமுதாயக் கடமையாகும். குழந்தை பிறந்தவுடன், அதன் மொத்த உறுப்புகளும் புலன்களும் நலமாக செயல்படுகிறதா என மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை செய்வது மிக முக்கியமாகும். அரசாங்கமே இப்பரிசோதனை கட்டாயம் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது. இந்தச் சோதனைகளை செய்யும்போது, குழந்தைக்கு காது சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்தால், உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவுசெய்து சிகிச்சை அளிக்கலாம்.”

“முதற்கட்ட சிகிச்சை செய்யாமல் போனாலும், ஒரு தாய் தான் குழந்தைக்கு கேட்பதில் சிக்கல் உள்ளது என அறிந்தவுடன், 3 வயதுக்குள் தகுந்த காது மருத்துவரை நாடுவது அவசியம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் காது நிபுணரை அணுகுவதைத் தள்ளிப்போடக்கூடாது. இதில் காட்டும் தாமதம், குழந்தையின் வாழ்நாள் பேச்சுத்திறன் மற்றும் புரிந்துகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். 6 வயதுக்குள் செவித்திறன் பிரச்னைக்கு தீர்வு காணாமல் விடப்பட்ட குழந்தைகளின் பேச்சு நிச்சயம் சீராக இருக்காது. இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கவும் வாய்ப்புள்ளது. தகுந்த செவித்திறன் கருவி பொருத்தியபின், ஏதாவது ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சி அளிப்பது அவசியமாகும். ஒவ்வொரு குழந்தையையும் புரிந்துகொண்டு, அதற்கு பிடித்த வகையில் வித்தியாசமான ஒலிகளை கேட்கச்செய்தும் பேசியும் மொழிப் பயிற்சியை வழங்க வேண்டும். செவித்திறன் குன்றிய குழந்தைகளின் பயிற்சிக் காலத்தின்போது அவர்களின் பெற்றோரின் ஆதரவு குழந்தைக்கு மிக அவசியமாகும். பெற்றோர் தொடர்ந்து குழந்தைகளோடு உரையாடும்போது அவர்களின் Auditory Response சிறப்பாக இருக்கும்", எனக் கூறுகிறார் கேர் தெரப்பி பேச்சுப் பயிற்சி மையத்தின் நிறுவனர் டாக்டர் கல்பனா.

Audiologists - காதொலி நிபுணர்களின் பங்கு...

பொதுவாக காது சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நாம் ENT Surgeon எனப்படும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களை பார்ப்பது வழக்கமாகும். இவர்கள் காதின் இயக்கத்தில் ஏற்படும் சிக்கலை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வதில் வல்லவர்கள். இதுமட்டுமல்லாமல் மருத்துவப் பிரிவில் ஒரு துறையினரான Audiologists எனப்படும் காதொலி நிபுணர்களும் காது கேளாமை குறித்த சிக்கலுக்கு தீர்வு அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு காது சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்தால், செவித்திறன் எவ்வளவு குறைந்துள்ளது என முறையான பரிசோதனை செய்து, அதற்கேற்ற கேள்விச் சாதனம் (Hearing Aid) பொருத்துவது காதொலி நிபுணர்களின் கடமை ஆகும். கண்களை கண் மருத்துவரிடம் காண்பித்து, பிரத்தியேகமான கண்ணாடி அணிந்துகொள்வதுபோல், தகுந்த காதொலி நிபுணர்களை அணுகி செவிச் சாதனங்களைப் பொருத்திக்கொள்ளலாம். அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு, தகுந்த ENT அறுவை சிகிச்சை நிபுணர்களையும் இவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கூச்சமும் தயக்கமும் எதற்கு?

"மூக்குக் கண்ணாடி அணிந்துகொள்ளும் வழக்கம், கண் சார்ந்த பிரச்னையின் அடையாளம் எனப் பார்க்கப்படாமல் அதை ஒரு ஸ்டைலாக எண்ணி அணியும் காலம் வந்துவிட்டது. கண்ணாடி அணிவோரை இப்போதெல்லாம் யாரும் கிண்டல் செய்வதில்லை. ஆனால், செவித்திறன் சாதனங்களை அணிவோரை மட்டும் சமூகத்தில் தரக்குறைவாக எண்ணும் பாங்கு இன்றும் இருந்துவருகிறது. இதுவும் கண்ணாடி அணிவதைப் போலத்தான், காதில் சிறு குறைபாடு அதை சமன்செய்ய ஒரு கருவி காதில் இருக்கிறது என்கிற புரிதல் அனைவருக்கும் வரவேண்டும். காது மெஷின் அணிவதால் ஏற்படும் தேவையற்ற கூச்ச உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அகல வேண்டும். காதொலி கருவிகளைப் பொருத்திக்கொண்டு நம்பிக்கையோடு வாழலாம் என்கிற நேர்மறை எண்ணம் வேண்டும்!" எனக் கூறுகின்றனர் காதொலி நிபுணர்கள்.

காது கேளாமை மற்றும் காது குறித்த பிரச்னைகள் குறித்து மேலும் விவரங்கள் அறியவும் சிகிச்சைகளுக்கும், அணுகவும் 

விகடன் வாசகர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையை வழங்குகிறது அஸ்ட்ரா ஹியரிங் கேர்...

மேலும் விவரங்களுக்கு, கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்யவும்...

விவரங்களைப் பெற

 

பொறுப்புத் துறப்பு: விகடன் வாசகர்கள் அஸ்ட்ரா ஹியரிங் கேரின் இலவச மருத்துவ சேவையை பெறுவது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்துக்கு உட்பட்டதாகும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க