மரணம்... மாசு மரணம்! - போகியை இப்படித்தான் கொண்டாடி வருகிறோமா? | The impact of celebrating Bhogi and what it does to our environment

வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (13/01/2019)

கடைசி தொடர்பு:09:46 (13/01/2019)

மரணம்... மாசு மரணம்! - போகியை இப்படித்தான் கொண்டாடி வருகிறோமா?

ழையன கழிதலும் புதியன புகுதலும்தான் போகியின் நோக்கம். நம் முன்னோர்கள் போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன், அவர்களின் வீட்டில் உள்ள பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்தி பண்டிகையைக் கொண்டாடுவார்கள். கோரைப்பாய், துடைப்பம் போன்ற பொருட்களைத்தான் கொளுத்தி வந்தனர். இதனால் பெரியளவினாலான பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் காலப்போக்கில் நம்மாட்கள் வாகனங்களின் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் எரிக்க ஆரம்பித்தில் இருந்ததுதான் பிரச்னையே ஆரம்பம். ஏற்கெனவே சென்னை போன்ற மாநகரங்களில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வரும் புகையினால் காற்று மாசடைந்துதான் காணப்படுகிறது. இதில் போகி, தீபாவளி போன்ற பண்டிகையில் போது நாம் ஏற்படுத்தம் மாசினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைகிறது. 

கடந்தாண்டு 2018 சென்ற சில வருடங்களை விடத் தமிழகத்தில் பல மாநகராட்சி  மண்டலங்களில் PM10 (Particulate Matter) துகள்களின் அளவானது 135 முதல் 386 வரை மைக்ரோம்/ கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. இது PM10 நிர்ணயிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோம்/ கனமீட்டர் விட அதிகமாகவே காணப்பட்டது. 

சென்ற வருடம் போகி பாண்டியின் போது ஏற்பட்ட புகையின் காரணமாகச் சென்னையே புகை மண்டலமாகக் காணப்பட்டது. அதுமட்டுமல்லாது 16க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வேறு சில விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. 40துக்கும் மேற்பட்ட விமானங்கள் புகை மற்றும் பனிமூட்டம்  காரணமாகத் தாமதமாக புறப்பட்டன. சாலையின் வாகன ஓட்டிகள் புகையின் காரணமாக கண்ணெரிச்சலுக்கு உள்ளாகினர். 

போகி

கடந்த மூன்றாண்டுகளாக போகி அன்று சென்னையில் பதிவான காற்றின் தரத்தின் அளவுகள். 

(PM10  நிர்ணயிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோம்/ கனமீட்டர்)

2016, அன்று மணலியில்  - 298, ஆலந்தூர் -  176, அடையாரில் - 208, அண்ணாநகர் பகுதியில் - 202

2017, அன்று மணலியில் போகிக்கு முதல் நாள் 86, போகி அன்று 237. ஆலந்தூர் -  முதல் நாள் 50, போகி அன்று 186. அடையார் - முதல் 48, நாள் போகி அன்று 70, அண்ணாநகர் பகுதியில் - முதல் நாள் 92, போகி அன்று 166.

2018, அன்று மணலியில் போகிக்கு முதல் நாள் 72, போகி அன்று 263. ஆலந்தூர் -  முதல் நாள் 93, போகி அன்று 135. அடையாரில் - முதல் நாள் 105, போகி அன்று 172, அண்ணாநகர் பகுதியில் - முதல் நாள் 106, போகி அன்று 270.

இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இயக்குநர் ஷாம்பு கல்லோலிக்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது.

"தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புஉணர்வு பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ட்யூப் போன்ற பொருட்கள் எரிப்பது குறைந்து வருகிறது. இந்தாண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு விடங்களின் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது மேலும் பள்ளிக்கல்வி துறை மூலம் மாணவர்களிடையே புகைமாசு குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களைப் பழைய பொருட்களை எரிப்பதை வலியுறுத்த விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் 15 மண்டலங்களிலும் கையேடுகள் வழங்கியும், விளம்பரப் பலகைகளைத் தாங்கியும், பொதுஅறிவிப்பு செய்தும் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

போகிப்பண்டிகையின் பொது சென்னை மாநகரத்தின் காற்றின் தரத்தினை கண்காணிக்கும் பொருட்டு, போகிப்பண்டிகைக்கு முதல் நாளும் மற்றும் போகிப்பண்டிகை நாளன்றும், 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தினைக் கண்காணிக்கவும், காற்றின் மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் காற்றின் தர அளவு வாரியத்தின் இணையதளத்தின் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

போகி மாசு

இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இயக்குநர் ஷாம்பு கல்லோலிக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபொழுது, அவர் கூறியதாவது.

"இந்தாண்டு போகிப்பண்டிகைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் 30 குழுக்கள் அமைத்து. அந்தக் குழுக்கள் காவல்துறையினருடன் இணைத்து அனைத்து  மாநகராட்சி  மண்டலங்களிலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் என்றும். மேலும் டயர், டுயூப் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

டயர், டுயூப் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம்!


டிரெண்டிங் @ விகடன்