Published:Updated:

`அறியாமையை ஏளனம் செய்வது வேதனை!’ - வெளிநாடுவாழ் தமிழரின் நெகிழ்ச்சிப் பதிவு

`அறியாமையை ஏளனம் செய்வது வேதனை!’ - வெளிநாடுவாழ் தமிழரின் நெகிழ்ச்சிப் பதிவு
`அறியாமையை ஏளனம் செய்வது வேதனை!’ - வெளிநாடுவாழ் தமிழரின் நெகிழ்ச்சிப் பதிவு

`அறியாமையை ஏளனம் செய்வது வேதனை!’ - வெளிநாடுவாழ் தமிழரின் நெகிழ்ச்சிப் பதிவு

தன் மகனுக்காக சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் தாய் ஒருவர் காவலுக்காகப் படுத்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன் ஒருவர் நெகிழ்ச்சி பதிவொன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

அந்நிய ஊருக்கோ, நாட்டுக்கோ, வேலை நிமித்தமாகவோ, படிப்புக்காகவோ மேற்கொள்ளப்படும் பயணங்கள் வலிமிகுந்தவை. நம்மைவிட பெற்றோர்களுக்கு கண்ணில்பட்ட தூசியாய் உருத்திக்கொண்டேயிருக்கும். `மகன் எப்போது வருவான்’ என்பது மட்டுமே அவர்களின் மிகப்பெரிய ஆசையாக இருக்கும். அப்படி ஊர் திரும்பும் மகனுக்கு, வீட்டில் தங்கியிருக்கும் நாள்கள் சொர்க்கம். இருக்கிற எல்லா டிஷ்களும் அன்று அந்த வீட்டில் சமைக்கப்பட்டுவிடும். போதாக்குறைக்கு மூட்டை மூட்டையாக உணவுப் பொருள்களின் ஏற்றுமதி வேறு. இப்படியாய் வாழும் பெற்றோர்களுக்கு, ஒருகட்டத்துக்கு மேல் பிள்ளைகள் நிரந்தர பிரிவை தந்துவிட்டு பணி நிமித்தமாகச் செல்லும் ஊரிலோ நாட்டிலோ தஞ்சம் புகுந்துவிடுகின்றனர். பிள்ளைகள் அழைப்பின் பேரில் ஊர் திரும்பும் பெற்றோர்களுக்கு அந்நாட்டின் விதிமுறைகள் குறித்து எந்தக் கவலையுமில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஊறுகாய், மிளகாய்ப் பொடி, உளுந்து, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை பிள்ளைகளுக்காக மூட்டை மூட்டையாக எடுத்துச் செல்வர். அப்படி எடுத்து செல்லும்போது அவை விமான நிலை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும்போது அரைமனதோடு கொடுத்துவிடும் தாய்மார்கள்தான் அதிகம்.

இப்படி ஒருதாய் சிங்கப்பூருக்கு தன் மகனைக் காண சென்றுள்ளார். அங்கு மஞ்சள், மிளகாய், மல்லி ஆகிய பொருள்களை நடைபாதையில் காய வைத்து அதற்கு பக்கத்தில் காவலாக உறங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தனா என்பவர் ஷேர் செய்துள்ளார். பார்ப்பவர்களுக்கு வேதனைதரும் வகையில் இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது. இது தொடர்பான பதிவில் அவர், ``இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார்போல அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்குப் பாதுகாவலராகப் பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் ஃபேஸ்புக்கில் அதைப் பதிவிட்டுள்ளனர். பார்க்க மனது கொஞ்சம் கஷ்டப்பட்டது.

பெற்றோரை வரவழைக்கும்போது இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க அறிவுறுத்துங்கள், பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கித் திண்ணும் நெட்டிசன்களுக்கு வயலில் விளைந்ததைப் பிள்ளைகளுக்காகப் பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயிலில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து, பிள்ளைகளுக்குச் சமைக்க எண்ணிய தாயன்பை ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணினி உலக நண்பர்களுக்குப் புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு