Published:Updated:

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!
ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

விவசாயிகளின் உற்ற நண்பன் 'தென்னை' மரம். தலை முதல் கால் வரை தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானவை. ஓலை, துடைப்பம், இளநீர், தேங்காய், குடுவை, உரம், நார், கயிறு, விறகு, விசிறி போன்றவைகள் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கின்றன. ஓலையில் வீடு கட்ட, கட்டுமரம் செய்ய, கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுக்க என தென்னையிடம் இருந்து பெறப்படும் பயன்கள் ஏராளம். இதனால் விவசாயிகளுக்கும் பெரியளவில் தென்னை மரங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. தென்னிந்தியாவில் பெரும்பாலும் தென்னை மரங்களை காணலாம். 

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

தேங்காய் எண்ணெய்:

தென்னையில் இருந்து கிடைக்கப்பெறும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தேங்காய். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய உணவு மற்றும் மருந்துப் பொருளாக உள்ளது. ஏன், நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பிரதான உணவு பொருளாகவும் தேங்காய் இருக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய 'மோனோலோரின்' எனும் பொருள் தேங்காயில் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி கேரளத்தில் தேங்காய் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. கேரளவைச் சுற்றியும் தென்னை மரங்கள் என்றிருக்க, அதனின் மகத்துவத்தை அறியாதவர்கள் அங்கு யாருமில்லை. அவர்களின் உணவு பொருட்களில் எது இல்லையென்றாலும் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கும். புரதச்சத்து நிறைந்த தேங்காயில் இருந்து பெறப்படும் எண்ணெய்யும் நமக்கான ஆரோக்கியத்தை தரக்கூடியவை. 

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

மரச்செக்கு எண்ணெய்:

கொப்பரை தேங்காயாக மாறும் அளவிற்கு தேங்காயை காயவைத்து எடுத்துக்கொண்டு, அதனை செக்கில் ஆட்டி தேங்காய் எண்ணெய் பிழியப்படுகிறது. அவ்வாறு இயற்கையாக கிடைக்கும் எண்ணெய்யில்தான் நமது ஆற்றலே அமைந்துள்ளது. அதுவே சாதாரண செக்கில் இல்லாமல் மரச்செக்கில் ஆடப்படும் எண்ணெய்யில் இருக்கும் ருசியே தனி. சுவை மட்டுமில்லாமல் அதில் அளவில்லா ஆரோக்கியமும் அடங்கியிருக்கின்றது. சுவை, மருத்துவம் அடங்கிய மரச்செக்கில் ஆடப்படும் எண்ணெய்யின் மணமும் அதனை நாம் விரும்ப ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர, எண்ணெய் தயாரிப்புக்குப் பிறகு அதிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குக்கூட ஆரோக்கியமானதாக உள்ளது. ஏனெனில் கால்நடைகளுக்கு அந்த பிண்ணாக்கு வலிமையை தருகிறது. அதன் மூலம், ஊட்டச்சத்தை கால்நடைகள் பெருக்கிக்கொள்கின்றன. உணவுப் பொருள்களில் மட்டுமின்றி சோப்பு, பெயின்ட் உள்ளிட்டவைகளின் தயாரிப்பிலும் மகத்தான எண்ணெய் அடங்கியுள்ளது. 

தேங்காய் எண்ணெய்யின் பயன்கள்:

* தாய்ப்பாலுக்கு பின் முதலில் கொடுக்கப்படும் திட உணவுகள் மற்றும் அரிசி கஞ்சியுடன் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது வழக்கம். இதனை ஹை கலோரி மீல் (ஹெச்.சி.எம்) என்று அழைப்பார்கள். இது, குழந்தைகளின் எடையைக் கூட்டி, சருமத்தை வழுவழுப்பாக்கும். 

* இதில் இருக்கும் சில அமிலங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. தைராய்டு உட்பட நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியத்துக்கும் இது மறைமுகமாக உதவுகிறது. கணையத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, உடலின் எடையைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலின் செரிமான அமைப்பைச் சீராக்கி, வயிற்றுப்பிரச்னை மற்றும் எரிச்சல் கொண்ட குடல்நோய் ஆகியவற்றைத் தடுக்கிறது.

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

* தினமும் உணவில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்வது நல்லது. இதில் உள்ள கொழுப்பு அமிலத்தில், 50 சதவிகிதம் லாரிக் அமிலம் என்பதால், நுண்ணுயிர்க் கிருமிகளை அழிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

* அனைத்து வகையான சருமத்துக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்தது. தோலுக்கு ஈரப்பதத்தையும், பளபளப்பையும் தரவல்லது.

* தலைமுடியின் வளர்ச்சிக்கும் பளபளப்புக்கும் உதவுகிறது தேங்காய் எண்ணெய். குளியலின்போது, சிறந்த கண்டிஷனராகச் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட முடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புரதச்சத்தை வழங்கி, சேதமடைந்த முடிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.

செக்கோ (Chekko):

மருத்துவ குணங்கள் நிறைந்த மரச்செக்கு எண்ணெய்யை 30 ஆண்டுகாலமாக மக்களுக்கு 'செக்கோ' நிறுவனம் வழங்கி வருகிறது. மருத்துவத்துடன் மகத்துவமும் நிறைந்த நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய்களை செக்கோ விற்பனை செய்கிறது. நமது முன்னோர்கள் முறைப்படி மரச்செக்கில் ஆட்டப்பட்டு, ரசாயனம் கலக்காமல் இயற்கையாக தயாரித்த எண்ணெய்களை செக்கோ வழங்குகிறது. ஆகையால், இந்த பொங்கல் திருநாளை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட 'செக்கோ' எண்ணெய்யை பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு... 9176679154

அடுத்த கட்டுரைக்கு