Published:Updated:

பன்சாலை நீக்கவும்; அஸ்வனி குமார் இலாகாவை மாற்றவும் முடிவு?

 பன்சாலை நீக்கவும்; அஸ்வனி குமார் இலாகாவை மாற்றவும் முடிவு?
பன்சாலை நீக்கவும்; அஸ்வனி குமார் இலாகாவை மாற்றவும் முடிவு?
 பன்சாலை நீக்கவும்; அஸ்வனி குமார் இலாகாவை மாற்றவும் முடிவு?

புதுடெல்லி: உறவினர் மீதான லஞ்சப் புகாரால், சர்ச்சையில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்றும், சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் வேறு இலாகாவுக்கு மாற்றப்படலாம் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்சாலின் உறவினர், ரயில்வேயில் உயர் பதவி பெற்று தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற போது சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சிபிஐயின் விசாரணை ரயில்வே அமைச்சக அலுவலகத்தின் மீது திரும்பியது.

##~~##
மேலும், நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை பார்வையிட்டு திருத்தம் செய்ததற்காக, சட்டத் துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், இரு அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பன்சாலை அமைச்சரவையில் இருந்து நீக்கவும், அஸ்வனி குமாரை வேறு துறைக்கு மாற்றவும் பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.