Published:Updated:

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!
சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

இந்த வார ஆனந்த விகடன் இதழ்: https://bit.ly/2RReHbB

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

"பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் வருமானம், ஐந்து ஏக்கர் நிலம், ஆயிரம் சதுர அடியில் வீடு என்று உச்சவரம்பு வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் என்றால், மாதம் 65,000 ரூபாய், நாளொன்றுக்கு 2,500 ரூபாய். இவர்கள் ஏழைகளா?  நாலரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் ஏழைகள் என்றால், நிலமே இல்லாமல் கூலிகளாக இருக்கும் கோடிக்கணக்கான மக்களை எப்படி அழைப்பது? இவர்கள் இருவரும் சமமா? கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய்க்கும் குறைவாக, நகர்ப்புறங்களில் 33 ரூபாய்க்கும் குறைவாகவும் வருமானம் உடையவர்களை வறுமைக்கோட்டுக்கீழே உள்ளவர்கள் என்று இதே அரசு சொல்கிறது. ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர் களுக்கும் இடஒதுக்கீடு என்பது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே கேலிக்குறியதாக்குகிறது."

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

"...எந்தவிதமான ஆய்வும் புள்ளிவிவரமும் இல்லாமலேயே இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டிலிருந்து ஒரு பகுதியை எடுத்து முற்பட்ட வகுப்பினருக்குக் கொடுக்கக்கூடிய ஆபத்தும் வரலாம்!"

- ஒரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மற்றோர் இரவில் ஜி.எஸ்.டி அமலாக்கம் என 'சர்ஜிக்கல்' தாக்கு தல்களை நடத்திய மத்திய பி.ஜே.பி அரசின் சமீபத்திய 'அட்டாக்' பொதுப்பிரிவினர் எனப்படும் முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப் படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம். இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரல் தமிழகத்தில் பலமாக ஒலிக்கும் சூழலில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களின் கருத்துகளுடன் அலசுகிறது 'பத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா?' எனும் சிறப்புப் பார்வை.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

> ''அறவழியிலதானேங்க போராடுறாங்க. இதுக்குமேல என்ன பண்ணணும்? இதுக்கு மேலயும் சத்தமா கத்தணுமா? அம்மாக்களோட பாசம் என்னன்னு ஆளுநருக்கும் தெரியும்தானே? அற்புதம் அம்மாவோட சத்தம் கேட்காதவங்க சபிக்கப்பட்டவங்க'' என அனல்தெறிக்கப் பேசிய விஜய் சேதுபதி அரசியல்வாதிகளுக்குத் தன் ஸ்டைலில் குட்டிக்கதை சொல்லவும் தவறவில்லை. அதன்பிறகு அவருடன் நடந்த ஓர் உரையாடல் பொழுதில், தேனிப் பகுதிகளில் மலைகளைக் குடையும், இயற்கை விரோதப்போக்கை நேரடியாகவே கண்டித்து, அதைத் தடுக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு,  வேண்டுகோள் விடுத்தபோது அரங்கத்தில் அப்ளாஸ்! 

> இந்த ஆண்டிற்கான சாகித்ய விருது வென்ற எஸ்.ராமகிருஷ்ணனை கெளரவிக்க ஜெயமோகனும் சாருவும் கைகோத்தார்கள். ''நாங்கள் மூன்று பேரும் தமிழ் இலக்கியத்தின் மூன்று முக்கியப் போக்குகளை உருவாக்கியவர்கள். மூவரும் ஒரே மேடையில் நிற்பது இதுதான் முதல் முறை'' என அவர் சொல்ல, கைதட்டி ஆமோதித்தார்கள் ஜெமோவும் சாருவும்.

> அன்பும் நெகிழ்ச்சியும் நிறைந்திருந்த அரங்கில் தூத்துக்குடியில் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்கள் மேடையேறியபோது வெறுமையும் அழுகுரல்களும் சூழ்ந்தன! உயிரிழந்தவர்கள் பற்றிய காணொலி மேடையில் ஒளிபரப்பானபோதே கீழே அமர்ந்திருந்தவர்கள் உடைந்துவிட்டிருந்தனர். மேடையேறிய மூதாட்டிகள் சிலர் கதறியழ, அனைவரின் கண்களிலும் உடைந்து கொட்டியது கண்ணீர்...

. ''எங்க கண்ணீருக்குக் காரணமானவங்க நிச்சயம் பதில் சொல்லியே ஆகணும்'' என 11 பேரின் குடும்பத்தாரும் சொன்னபோது காற்றில் கரைந்துபோனவர்களும் ஆமோதித்திருப்பார்கள். அவர்கள் மேடையிலிருந்த நிமிடங்கள் முழுதும் விஐபிகள் உட்பட அரங்கிலிருந்த பார்வையாளர்கள் மனம் உடைந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தியவண்ணமே இருந்தனர். மேடையிலிருந்து அனைவரும் இறங்கிய வெகுநேரத்திற்குப் பின்னும் சூழலில் உப்பு கலந்த ஈரப்பதம் தேங்கியிருந்தது.

- தமிழின் சிறந்த படைப்புகளை, படைப்பாளிகளைக் கொண்டாடவும், 2018-ன் டாப் 10 மனிதர்களையும் இளைஞர் களையும் அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் தோரணம் கட்டியது 'ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா.' எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், சமூகச் செயற் பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகப் பிரபலங்கள் என ஏராளமான ஆளுமைகள் கலந்துகொண்ட விழாவின் சில நெகிழ்ச்சியான துளிகளைத் தந்திருக்கிறது 'உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா' எனும் தொகுப்பு.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

" 'பேரன்பு' பார்த்துட்டு ஆடிப்போயிட்டேன். அவுட் ஸ்டாண்டிங் படம். ராம் படத்தை எங்கயோ கொண்டுபோயிட்டார். மம்மூட்டி பண்ணின அந்தக் கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலை. இதேபோல யாரு எதுன்னு சொல்லாம எல்லாத்தையும் சொன்ன 'பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ், 'மேற்குத்தொடர்ச்சி மலை'யில நம்மளை ஏற்றி இறக்கின லெனின் பாரதின்னு இவங்களை யெல்லாம் பார்க்கும்போதுதான் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும்னு எனக்கு ஆர்வம் வருது..."

"இந்தப் பயணத்துல நிறைய மறக்க முடியாத நினைவுகள். ஆனா, அதைத் திரும்பிப் பார்த்து அசைபோடுற அளவுக்கு எனக்கு நேரமில்லை. எல்லாரும் சேர்ந்து உருவாக்கி வெச்சிருக்கிற இந்த பிராண்ட் பிம்பத்துக்கும் தனிப்பட்ட எனக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அது யார்யாரோ உருவாக்கி வெச்சது. அதையெல்லாம் சுமந்துட்டுத் திரியக்கூடாது; கடந்து போயிடணும்.  அதையே நினைச்சுட்டிருந்தா தேங்கி நின்னுடுவோம். அவ்வளவுதான்."

"அரசியலுக்கு வர்றதுக்கு எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு. யார் வேணும்னாலும் வரலாம். ஆனா சி.எம். ஆகுறதுக்கான தகுதியே சினிமாவில் ஹீரோவா இருக்கணும்ங்கிறமாதிரி ஆக்கிட்டாங்க.  அந்த சினிமா மாயை இப்ப இங்க தகர்ந்திடுச்சு.  சினிமாவை சினிமாவாதான் பார்க்கிறாங்க..." 

- பி.சி.ஸ்ரீராம். இவரும், ஒளியின் தன்மையை இவரிடம் கற்றவர்களும்தாம் இன்று இந்திய சினிமாவின் பிரதான ஒளி ஓவியர்கள். ஒரு மாலைப்பொழுதில் அவரோடு நடந்த உரையாடலை "இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது" எனும் பேட்டியில் வாசியுங்கள்.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!


திரை விமர்சனங்கள்: 

முதல் பாதி முழுக்க, கதை என்ன என்றே தெரியாமல் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக அலைபாய்கிறது படம். ஒரு பாடல் காட்சி, அதன்பின் சில வசனங்கள், பின் மீண்டும் ஒரு பாடல் என, மெனக்கெடலே இல்லாத திரைக்கதை. அனிகா அறிமுகமான பின்னே படம் வேகமெடுக்கும் என நினைத்தால் அங்கும் ஏமாற்றமே! ஓர் ஆதாம்காலத்து பிளாஷ்பேக்கும், அதைச் சொல்லிக்கொண்டு சுற்றும் வில்லனும் மிகப்பெரிய மைனஸ். 

முதல்பாதி முழுக்க ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் எனக் கலகல ரகளையாக இருக்கிற 'பேட்ட', அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இரண்டாம் பாதியில் திணறித் திண்டாடுகிறது. காரணம், இலக்கில்லாமல் எங்கெங்கோ பாயும் திரைக்கதை.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

பேட்ட - விஸ்வாசம் இரு படங்களுக்குமே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் மதிப்பீடு செய்திருக்கிறது விகடன் விமர்சனக் குழு. இது எந்த வகையில் கச்சிதம் என்பதை முழுமையான விமர்சனத்தை படித்தால் நிச்சயம் விளங்கும்.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

தமிழ் போலவே, தெலுங்கு சினிமாவுக்கும் 2018 ஸ்பெஷலோ ஸ்பெஷல். தமிழ்சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள் பரியேறும் பெருமாள், 96, மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், கனா என ஆட்டம் மாற்றினார்களோ, அப்படி ஆந்திராவிலும் கடந்த ஆண்டில் நிறைய நிறைய மாற்றங்கள். தோசை ஆர்டர் பண்ணவும்கூடத் தொடைதட்டுகிற வெத்து ஹீரோயிசமும் அரிவாள் வில்லன்களின் அலப்பறைகளும் லாஜிக் இல்லாத திரைக்கதைகளும் என இருந்த தெலுங்கு சினிமா, வித்தியாச ஜானர்கள், விதவிதமான கதைகள் என மாற்றிக் காட்டியது சென்ற ஆண்டு. எங்களுக்கு மாஸும் வரும் கிளாஸும் வரும் என கெத்து காட்டி மலைக்கவைத்தார்கள். 

இந்த வார ஆனந்த விகடன் இதழ்: https://bit.ly/2RReHbB

நிஜமாகத்தான்... 2018-ல் வெளியான தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்களின் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தன. பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், ரவிதேஜா, நாகார்ஜுனா, அல்லு அர்ஜுன், நானி, கல்யாண் ராம், கோபிசந்த், நாக சைதன்யா என்று முன்னணி நாயகர்களின் படங்கள் அனைத்துமே சொதப்பின. ஆனால், வித்தியாச ஜானர்களில், சிறிய பட்ஜெட்டுகளில், புதுமையான திரைக்கதையமைப்பில், புதுமுகங்கள் நடித்த திரைப்படங்கள் எல்லாம் அதிக கவனம் ஈர்த்தன. வெற்றிபெற்று பாக்ஸ் ஆபீஸிலும் கோடிகளைக் குவித்தன...- இது தொடர்பான முழுமையான அலசலைத் தருகிறது 'மொத்தமா மாத்தீட்டோமுலு!' எனும் தெலுங்கு திரைப் பார்வை.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 10 கோடியை புரமோஷனுக்கு மட்டுமே செலவு செய்கிற திமிங்கல சினிமாக்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பத்து லட்சம் செலவழித்து விளம்பரப்படுத்தவும் வழியின்றி, பெட்டிக்குள் உறங்கும் சிறு பட்ஜெட் படங்கள். சமூகவலைதளங்களில் மக்கள் விளம்பரங்களின் வழி கவனம்பெறும் மாற்று சினிமாக்களும் உண்டு. இன்று விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை. ஒரு சினிமாவுக்கான விளம்பரம், படப்பிடிப்புக்கு முன்பே திட்டமிடப்படுகிறது. போஸ்டர்களில் தொடங்கி, ஆன்லைன் வைரல்கள் வரை சினிமா விளம்பரங்களின் முகங்கள் மாறிவிட்டன. தமிழ் சினிமாவின் ஆரம்பகாலம் முதல், ஆன்ட்ராய்டு காலம் வரை சினிமா விளம்பரங்கள் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றன... அறிந்துகொள்ளும் ஆவலோடு 'காளிதாஸ்' காலத்துக்கே கிளம்பியபோது கிடைத்த வரலாறுதான் 'பாரு... பாரு... நல்லா பாரு!' எனும் சிறப்பு அலசல். 

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

வடசென்னைக்காரர்கள் - சாய்தீனா: "டாக்டர்னா சிவப்பா இருப்பாங்க, இன்ஜினீயர்னா அயர்ன் பண்ணிய சட்டை போட்டிருப்பாங்கிற மாதிரி வடசென்னைக்காரர்கள்னா கறுப்பா, அழுக்கா இருப்பாங்கன்ற எண்ணம் மக்கள் கிட்டேயும் இருக்கு. சினிமாக்காரர்கள்கிட்டேயும் இருக்கு. இது எங்கிருந்து ஆரம்பிச்சுதுன்னு தெரியலை! கொய்ம்பு, கீது, கீரன்ற வார்த்தைகள்லாம் வழக்கொழிஞ்சு போயாச்சு. ஆனா, இன்னமும் சினிமாவுல அப்படித்தான் வடசென்னைக்காரர்கள் பேசுறதா காட்டிட்டிருக்காங்க. போறபோக்குல கெட்டவார்த்தைல பேசுற ஜனம் இல்ல நாங்க. எங்க வூட்டு புள்ளைங்கல்லாம் அப்படிப் பேசவே பேசாது. நாங்க சாப்பிடுற மாதிரி ஃப்ரெஷ்ஷான சாப்பாடு யாரும் சாப்பிட மாட்டாங்க, நாங்க அடிக்குற பெர்ஃப்யூம்லாம் பல பேர் பார்த்திருக்கவே மாட்டாங்க. ஆனா, சென்னைன்னாலே அழுக்கா, குப்பையா காட்டுறதுக்குப் பின்னாடி பெரிய அரசியல் இருக்கு! எங்க வடசென்னை, புண்ணியபூமி தலைவா! வடசென்னையைப் பத்திப் படம் எடுக்கிற பலபேர் வடசென்னைக்குள்ளே வந்து பார்க்கிறதே இல்லை. அதான் பிரச்னை! வடசென்னை என்னமோ ரௌடிகளின் சரணாலயம்ங்கிற மாதிரி காட்சிப்படுத்துறது மாறணும்."

- பத்திரிகையாளர்னதும் `முதல்வன்' படத்துல வர்ற அர்ஜுன் மாதிரி, கோட் சூட் போட்டுகிட்டு, முதல்வரையே டென்ஷன் பண்றமாதிரி கேள்வி கேட்டுகிட்டு, சர்க்காரோட நேரடித் தொடர்புல இருக்கிற ஆளா இருப்பாங்கங்கிற மாதிரிதான் உங்க மனசு ஒரு உருவம் கொடுக்குது. ஆனா, நிஜத்துல நான் அப்படி இருக்கமாட்டேன். நான் மட்டுமல்ல, எந்தப் பத்திரிகையாளரும் அப்படி இருக்கமாட்டாங்க. நம்ம தமிழ்சினிமா இப்படி வேற யார், யாரை எப்படியெல்லாம் அபத்தமா, யதார்த்தமில்லாம காட்சிப்படுத்தியிருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சு சொல்லியிருக்கிறது 'ரீல் VS ரியல்' எனும் ஆர்ட்டிகிள். இதில் போட்டோகிராபர்கள், மதுரைக்காரர்கள், எழுத்தாளர்கள், பாக்ஸர்கள், ஐ.டி தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

மௌனப் படம், பேசும் படம், முழுநீளத் திரைப்படம், குறும்படம் என, சினிமாவில் புதுவரவு இணைய சினிமாக்கள். 'ஆன்லைனில் திருட்டுத் தனமாகத் திரைப்படம் வெளியாவதைத் தடுக்க வேண்டும்' என்று சினிமாக்காரர்கள் இப்போதும் கோரிக்கையுடன் கோர்ட் வாசல் ஏறும் நாளில், திரையரங்குகளுக்கு அப்பால் இணையதளத்துக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் சினிமாக்கள் வரத் தொடங்கிவிட்டன. அதற்கான ரசிகர் கூட்டமும் பெருகத் தொடங்கியுள்ளது... 

"ஒரிஜினல்ஸ்னு இந்த நிறுவனங்கள் நேரடியா நம்ம தயாரிப்பாளர்களைப் படங்கள் தயாரிச்சுத் தரச் சொல்லிக் கேக்கறாங்க. தணிக்கை இல்லாதது படைப்புச் சுதந்திரத்துக்கு வழிவகுத்தாலும், படைப்பாளிகளுக்குன்னு சொந்தமா பொறுப்பு உணர்வும் வேண்டும். சென்சார் இல்லை என்பதால் அளவுக்கு மீறிய வன்முறையும் ஆபாசக் காட்சிகளும் இடம்பெற்றுவிடக்கூடாது.

ஒரு பெரிய தியேட்டர்ல ரசிகர்களோட கைத்தட்டல்கள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். ஆன்லைன் சினிமாக்களில் இது சாத்தியமில்லை. ஆனால் அதேநேரத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எங்கள் சினிமாக்களுக்கான அங்கீகாரங்கள்..."

- இணையத்தையே அரங்காகக் கொண்டு உருவாக்கப்படும் சினிமா குறித்த பின்புலத்தை கச்சிதமாக அலசுகிறது 'புதிய சினிமா... பூமிக்கு வா!' எனும் சிறப்பு அலசல். 

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!


 

சென்னையில் அப்படித் தனித்தன்மை மிக்க பிரியாணிகளைச் சாப்பிட முடிவதில்லை. தினமும் ஒரேமாதிரி சுவை. போரடித்துவிடுகிறது. நல்ல பிரியாணி தரும் ஒரு சில உணவகங்களும் சந்துகளிலோ, அடைசலான இடங்களிலோ இருக்கின்றன. 

சுவையான பிரியாணி... அந்தந்தப் பாரம்பர்யத்தின் அசல் சுவை... நல்ல உபசரிப்பு... நிறைவான பரிமாறல்... இப்படி வித்தியாசமான அனுபவம்தரும் ஓர் உணவகம் கிடைத்தால்..? 

சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், ஒக்கியம்பேட்டை, துரைப்பாக்கத்தில் மூட்டக்காரன்சாவடி என்ற இடத்தில் இருக்கிறது தொன்னை பிரியாணி ஹவுஸ். 

முகப்பில் வரிசையாக விறகடுப்பு. கடாய்களில் பிரியாணி, தொடுகறிகள் வெந்து கொண்டிருக்கின்றன. உள்ளே டைனிங். சாதாரணமாகத்தான் இருக்கிறது. நீளமான டேபிள்கள் போட்டிருக்கிறார்கள்.  பிரியாணி, தொடுகறிகளைத் தொன்னையில் பரிமாறுகிறார்கள். குழம்புகளுக்கு மட்டும் கிண்ணம். - ஒரு வித்தியாசமான உணவக அனுபவத்தை 'சோறு முக்கியம் பாஸ்!' தொடர் பகுதி நமக்குப் பரிமாறியிருக்கிறது. 

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

...இந்தச் சிறைக்காட்டில் உள்ளே வந்து பத்து நிமிடம்கூட முழுமையாகியிருக்காது. என்னால் இருக்க முடியவில்லை. ஆனால், இந்த மனிதர்கள் இங்கேயே உண்டு, உறங்கி, வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நாற்றத்தில்தான் பிள்ளையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு ஜனத்திரள்மீது நமது கழிவுகளைக் கொட்டுகிறோம் என்கிற ஒர்மையற்று இருக்கும் இந்த அதிகார வர்க்கத்தினரை என்னவென்று சொல்வது...

காட்டுமரத்தில் கூடுகட்டியிருந்த தேனடையிலிருந்து எடுக்கப்பட்ட தேனை ஒரு பாட்டிலில் ஊற்றி, துணியால் நன்கு சுற்றிவைக்கப்பட்ட பாட்டிலைக் கொண்டுவந்து ``சார்... அதிகாரிங்க மேல நின்னுக்கிட்டு மூக்கப் பொத்திக்கிட்டுப் பார்த்துட்டு அப்பிடியே போயிடுவாங்க. நீங்க எங்க வீடு வரைக்கும் வந்ததே பெரிய விஷயம். இத நீங்க ஏத்துக்கணும் சார்" என்று காட்டுத்தேனைப் பரிசளித்தார். 

எனக்கு, செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. இந்த மனிதனின் பச்சையம் பூத்த அன்பின் வாசனை முன்னால் என் நாற்றங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தன...

- குப்பைக்குடைக்குள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் மக்களின் விடியலுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மகாதேவியின் ஒரு நாளைப் பற்றி நமக்குச் சொல்லி சிந்திக்கவைக்கிறது 'நான்காம் சுவர்' தொடர் பகுதி. 

சினிமா ஸ்பெஷல்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 11 அசத்தல்கள்!

இணையதளம் மூலமே அதிகம் இயங்கிவந்த புக் மை ஷோ, மெள்ள மொபைலின் அவசியத்தை உணர்ந்தது. கைப்பேசிச் செயலி மூலமும் சேவைகளைக் கொண்டு வந்தார்கள். இன்று ஐந்து கோடிக்கும் அதிகமானோரின் கைப்பேசிகளில் புக் மை ஷோ செயலி இருக்கிறது.  மாதம் 50 கோடி முறை இவர்களது இணையதளம் பார்க்கப்படுகிறது. அதனால் விளம்பரங்கள் மூலமும் அதிக லாபம் பார்க்கிறது புக் மை ஷோ. 2007-லிருந்து 2016 வரை ஒரு கோடி டிக்கெட்டுகளை விற்றவர்கள், 2017-ல் மட்டும் ஒன்றரைக் கோடி டிக்கெட்டுகளை விற்றிருக்கிறார்கள். இன்று இந்தியாவிலிருக்கும் 10,000 திரையரங்குகளில் 2,500 திரையரங்குகள் புக் மை ஷோவில் இருக்கின்றன. இதை இன்னும் அதிகரிக்கத் திட்டங்கள் தயார். பி.வி.ஆர் போன்ற பெரிய திரையரங்கு நெட்வொர்க்குகள் புக் மை ஷோவுடன் கைகோத்திருக்கிறார்கள். இந்தியா தவிர இன்னும் சில நாடுகளிலும் புக் மை ஷோ விரிந்திருக்கிறது.

- ஆஷிஷ் ஹேம்ரஜனியின் அசாத்திய பயணத்துடன் bookmyshow-வின் வெற்றிக் கதையைச் சொல்கிறது 'கேம் சேஞ்சர்ஸ்' தொடர் பகுதி. 

இந்த வார ஆனந்த விகடன்   இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2RzMO8y