36.95 லட்சம் ரூபாய்க்கு புதிய கேம்ரி ஹைபிரிட் காரைக் களமிறக்கியது டொயோட்டா! | Toyota Launches the All New Camry Hybrid Sedan at 36.95 Lakhs!

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (20/01/2019)

கடைசி தொடர்பு:16:10 (20/01/2019)

36.95 லட்சம் ரூபாய்க்கு புதிய கேம்ரி ஹைபிரிட் காரைக் களமிறக்கியது டொயோட்டா!

பூட் பகுதியிலிருந்து சீட்டுக்கு அடியே பேட்டரிகள் சென்றுவிட்டதால், முன்பைவிட கேம்ரியின் ஹைபிரிட் சிஸ்டம் சிக்கனமாக இருக்கும் என்கிறது டொயோட்டா.

றிமுக இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையான 36.95 லட்ச ரூபாய்க்கு, புதிய கேம்ரி ஹைபிரிட் காரைக் களமிறக்கியுள்ளது டொயோட்டா. முந்தைய மாடலின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 37.38 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், இது பலத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், FAME II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles-II) விதிகளுக்கு இந்தக் கார் உடன்பட்டாலும், ஹைபிரிட் கார்களின் மீது அதிக GST காரணமாக, காரின் விலை கொஞ்சம் அதிகமாகியிருக்கிறது. TNGA (Toyota New Global Architecture) ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய கேம்ரி, பழைய மாடலைவிடச் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் என்கிறது டொயோட்டா.

டொயோட்டா

இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹைபிரிட் செடானில்  V-வடிவ கிரில், பெரிய ஏர் இன்டேக் - மெலிதான LED ஹெட்லைட்ஸ், ஸ்டைலான பக்கவாட்டு பாடி லைன்கள், உயர்த்தப்பட்ட டெயில்கேட் என அதிரடியான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. அசப்பில் பார்க்க லெக்ஸஸ் ES 300h போல இருக்கிறது (இது தயாரிக்கப்படும் GA-K ப்ளாட்ஃபார்ம்தான் TNGA).

முந்தைய மாடலில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் என இரு ஆப்ஷன்கள் இருந்த நிலையில், புதிய மாடலில் ஹைபிரிட் அமைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 178bhp பவர் மற்றும் 22.1kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 120bhp பவரைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து 218bhp பவரை வெளியிடும் நிலையில், CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் லேட்டஸ்ட் ஹைபிரிட் சிஸ்டத்தில், எடை குறைவான பவர் கன்ட்ரோல் யூனிட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூட் பகுதியிலிருந்து சீட்டுக்கு அடியே பேட்டரிகள் சென்றுவிட்டதால், முன்பைவிட ஹைபிரிட் சிஸ்டம் சிக்கனமாக இருக்கிறது (உபயம் - டொயோட்டா ஹைபிரிட் சிஸ்டம் II). இதனால் ரேஞ்ச் நன்றாக இருக்கும் என டொயோட்டா கூறியுள்ளது. அதற்கேற்பவே புதிய கேம்ரியின் மைலேஜும் அமைந்திருக்கிறது (23.27கிமீ). 

கேம்ரி ஹைபிரிட் செடான்

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Power Reclining வசதி கொண்ட பின்பக்க சீட், Powered Sunshade-க்கான கன்ட்ரோல்களுடன் கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட், எலெக்ட்ரிக் & வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், சீட் மெமரி உடனான டிரைவர் சீட், 9 ஸ்பீக்கர்களைக் கொண்ட JBL ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, 10 இன்ச் Heads Up டிஸ்பிளே, 7 இன்ச் MID எனப் புதிய கேம்ரியின் கேபின் மொத்தமும் மாடர்ன்னாகவும் டிஜிட்டல் மயமாகவும் அசத்துகிறது.

Toyota Camry Hybrid Sedan

9 காற்றுப்பைகள், ABS, EBD, டிராக்‌ஷன் & ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ISOFIX Child Seat Anchor Points எனப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருப்பது வரவேற்கத்தக்கது. தனது வகையிலே இருக்கும் விலை அதிகமான மற்றோரு ஹைபிரிட் காரான அக்கார்டு தவிர ஃபோக்ஸ்வாகன் பஸாத், ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய கார்களுடன் புதிய கேம்ரி போட்டிபோடுகிறது. முந்தைய மாடலைவிடக் குறைவான அளவு மாசு வெளியிடுவதால் (113g of CO2 Per KM), 2022-ம் ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் Corporate Average Fuel Efficiency (CAFE) கோட்பாடுகளுக்கு இது இப்போதே தகுதிபெற்றுவிட்டது! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்