கண்ணுக்கு மை அழகு... ஆனால் இப்போது...! #BeautyTips | Must know beauty tips for eyes

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (20/01/2019)

கடைசி தொடர்பு:17:43 (20/01/2019)

கண்ணுக்கு மை அழகு... ஆனால் இப்போது...! #BeautyTips

''வார்ம் கலர்களில் டிரெஸ் செய்கிறீர்கள் என்றால் பீச் கலர் ஐ ஷேடோ போட்டுக்கொள்ளுங்கள். கூல் கலர்கள் என்றால் பிங்க் நிற ஐ ஷேடோ.''

கண்ணுக்கு மை அழகு... ஆனால் இப்போது...! #BeautyTips

ரு முகத்தின் அழகு, கண்களால்தான் கம்ப்ளீட் ஆகும். அது சின்னக் கண்களோ, பெரிய கண்களோ, வட்டக் கண்களோ அல்லது இலக்கியங்களில் வர்ணிப்பது போன்ற காதளவோடிய நீளமான கண்களோ... அதை முறைப்படி மேக்கப் கொண்டு அழகுபடுத்தினால், முகத்துக்கு லைட் போட்டதுபோல  பளிச்சென்று இருப்பீர்கள். இந்தக் கால டிரெண்டுக்கு ஏற்றபடி கண்களை எப்படி அழகுபடுத்தலாம் என்று சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. 

Beauty Tips

''அந்த காலத்தில் கண்ணுக்கு மை மட்டுமே வைத்திருந்தார்கள். அது, கண்களுக்குக் குளிர்ச்சி என்ற போதிலும் வைத்த ஒரு மணி நேரத்திலேயே கரைந்து, கண்களின் வெளியே வழிந்து, கண்களின் கீழ்ப்பகுதியெல்லாம் கருமைப் படர்ந்து விட்டிருக்கும். இன்றைக்குக்  கண்களை அழகுபடுத்த ஐ லைனர், காஜல், மஸ்காரா என்று நிறைய மேக்கப் முறைகள் வந்துவிட்டன.  

வசுந்தராஐ லைனர் லிக்விடாக இருந்த வரையில், தங்களால் கண்களையொட்டி சரியான ஷேப்பில் வரைய முடியாது  என்றோ அல்லது கண்களுக்குள் போய் விடும் என்று பயந்தோ பல பெண்கள் மையுடன் நிறுத்தி விடுவார்கள். இப்போது ஐ லைனர் ஜெல் டைப்பில் வந்துவிட்டது. எடுத்து கண்களில் போடும்போது கண்களுக்குள் கொட்டாது, வழியாது. இதிலும் போட முடியாதவர்கள், பேனா போன்று இருக்கிற 'பென் ஐ லைனரா'ல் கண் இமைகளின் மேலே வரைந்துகொள்ளலாம். 

அடுத்தது மஸ்காரா. இதில் ப்ளூ, க்ரீன், பிரவுன், பிளாக்  என்று பல நிறங்கள் இருந்தாலும் பிளாக்தான் எல்லோருக்கும் பொருந்தும். கண் இமைகளை  மஸ்காரா போட்டு  மேல் நோக்கிச் சுருட்டிவிட்டால் கண்களின் வெள்ளைப் பகுதி அதிகமாகத் தெரியும். இதனால் கண்கள் பெரிதாகத் தெரியும். 'கண்கள் சிறியதாக இருக்கிறதே' என்று வருந்துபவர்கள் மஸ்காரா போட மறக்காதீர்கள். கண்களில் எந்த மேக்கப்  இல்லாமல் வெளியே போக மாட்டீர்கள் என்று சில நடிகைகளைக் கேட்டபோது, அவர்கள்  மஸ்காராவைத்தான் குறிப்பிட்டார்கள். அந்தளவு கண்களுக்கு உடனடியாக ஒரு அழகு, பளிச் லுக் தரக்கூடியது மஸ்காரா. 

Beauty Tips

ஐ ஷேடோ. என்ன கலர் டிரெஸ் போட்டிருக்கீங்களோ, அதற்கு ஏற்றபடி போட்டுக்கொள்ளலாம். அதற்காக க்ரீன், ப்ளூ, ரெட் என்று பார்ப்பவர்களை பயமுறுத்தத் தேவையில்லை. ஆரஞ்சு, மெரூன், ரெட் இதெல்லாம் வார்ம் கலர்ஸ். மற்றவையெல்லாம் கூல் கலர்ஸ்.  வார்ம் கலர்களில் டிரெஸ் செய்கிறீர்கள் என்றால் பீச் கலர் ஐ ஷேடோ போட்டுக்கொள்ளுங்கள். கூல் கலர்கள் என்றால் பிங்க் நிற ஐ ஷேடோ. பிரைமர் போட்டுவிட்டு அதன் மேலே ஐ ஷேடோ போட்டால் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்குப் போகும் வரை கண்கள் பளிச்சென்று இருக்கும். 

அடுத்து, கண்களை விட்டு வெளியே வழியாத காஜல் பென்சிலால் வரைந்துகொள்ளுங்கள். 

Beauty Tips

ஐப்ரோ பவுடர். பென்சிலால் எவ்வளவு நேர்த்தியாக வரைந்தாலும் புருவங்களில் இயற்கை அழகு வராது. இதற்கு, க்ரே பிரைமரை தடவிவிட்டு, அதன் மேலே ஐப்ரோ பவுடரை போட்டால் இயற்கையான புருவம் போலவே இருக்கும். நான் சொல்லியிருக்கிறபடி ஐ மேக்கப் செய்துவிட்டு உங்கள் கண்களை கண்ணாடியில் கவனித்துப் பாருங்கள். அத்தனைப் பேரழகாக இருப்பீர்கள். ஆனால், முகத்துக்குப் போட்ட மேக்கப்பை கலைக்காமல் என்றாவது தூங்கிவிடலாம். கண்களுக்குப் போட்ட மேக்கப்பை மட்டும் கலைக்காமல் தூங்கி விடாதீர்கள். கண்களுக்குள் சென்றுவிடலாம்.'' 


டிரெண்டிங் @ விகடன்