Published:Updated:

பிரதமரும் ராஜினாமா செய்வாரா?

பிரதமரும் ராஜினாமா செய்வாரா?
பிரதமரும் ராஜினாமா செய்வாரா?
பிரதமரும் ராஜினாமா செய்வாரா?

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் அஸ்வனி குமார் மற்றும் பவன் குமார் பன்சால் ஆகியோர் ஒருவழியாக ராஜினாமா செய்துள்ள நிலையில், தங்களது அடுத்த இலக்காக பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்கட்சிகள் குறிவைத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு அமைச்சர்களின் ராஜினாமாவை தொடர்ந்து, அதன் பின்விளைவுகள் தொடரும் என்று கூறியுள்ள பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள், பிரதமர் மன்மோகன் சிங்கும் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே

பிரதமரும் ராஜினாமா செய்வாரா?

. அத்வானி, "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், சிபிஐ-யின் விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்து பிரதமரை பாதுகாத்த சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை அமைச்சரவையிலிருந்து நீக்க முடிவு செய்தபோது, அதன் பின்விளைவுகளும் தொடரத்தான் செய்யும். அந்த பின்விளைவு என்னவென்றால் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்வதுதான். பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிப்பதில் அர்த்தமே இல்லை" என்றார்.

மேலும் பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் ராஜினாமா மிகவும் காலதாமதமான ஒன்று எனவும், எதிர்கட்சிகள் கோரியபடி அவர்களை முன்னரே ராஜினாமா செய்ய ஒப்புக்கொள்ளாமல், நாடாளுமன்றத்தின் விலைமதிப்பிலாத நேரத்தை அரசு வீணடித்துவிட்டது என்றும் அத்வானி மேலும் கூறினார்.

##~~##
பா.ஜனதா செய்தி தொடர்பாளரான ஷா நவாஸ் உசேன் கூறுகையில்,"இந்த நடவடிக்கை மிகவும் காலதாமதமான ஒன்று.பா.ஜனதாவின் கோரிக்கையை அரசும், காங்கிரஸ் கட்சியும் முன்னரே ஒப்புக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை பாதுகாத்திருக்கலாம்" என்றார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் தளத்தில்," தற்போது மத்திய அமைச்சர்கள் பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோர் ராஜினாமா செய்திருப்பதன் மூலம், எங்களது கோரிக்கை நியாயமானதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது" எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில் வரவிருக்கும் நாட்களில் பிரதமருக்கு எதிராகவும் தனது வாளை சுழற்ற தயாராகி விட்ட பா.ஜனதா, இது விஷயத்தில் காங்கிரஸுக்கு எவ்வித சலுகையும் காட்ட தயாராக இல்லை. பிரதமரின் ராஜினாமாவை கோரி மத்திய ஐக்கிய  முற்போக்கு கூட்டணி அரசுக்கு அழுத்தங்களை தர, அக்கட்சி தயாராகிவிட்டதால், டெல்லி அரசியலில் மேலும் அனல் வீசும் என எதிர்பார்க்கலாம்.