`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம் | Quora launches tamil website

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:09:16 (22/01/2019)

`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்

 Quroa தமிழ்

பயனாளர்களே கேள்வி கேட்டு, அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட இந்த இணையதளம், பின்னர் பல்வேறு மொழிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்போது, அந்த வரிசையில் தமிழ் மொழியும் இணைந்திருக்கிறது. கடந்த வாரம் முதல் கோராவின் தமிழ் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. https://ta.quora.com/ என்ற இணையதள முகவரியில் இந்த தளத்துக்குச் செல்ல முடியும். அதைப் பயன்படுத்தி, இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும்.

 Quroa தமிழ் இணையதளம்

`` உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பதுமே எங்களின் லட்சியம். அதற்காக நாங்கள் உயர் தரமான உள்ளடக்கத்தை உருவாக்கி வருகிறோம். தமிழ் மொழி பேசும் பலர் கோரா இணையதளத்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்பொழுது நாங்கள் தமிழ் மொழியில் தொடங்குவதன் மூலமாக மேலும், பலர் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்" எனக் கோராவின் நிறுவனர் ஆடம் டி ஏஞ்சலோ (Adam D'Angelo) தெரிவித்துள்ளார். தற்பொழுது தமிழ், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி போன்ற இந்திய மொழிகள் உட்பட 17 மொழிகளில் கோரா இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. இதை உலகம் முழுவதும் 30 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.