95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்! | Yamaha Launches FZ V3.0 With ABS and Rear Disc Brake as Standard!

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (22/01/2019)

95,000 ரூபாய்க்கு ஏ.பி.எஸ் உடன் வந்துவிட்டது யமஹா FZ V3.0 பைக்!

FZ பைக்குகளுக்கே உரிய டிசைன் கோட்பாடுகள் இங்கும் தொடர்கின்றன. என்றாலும், பெட்ரோல் டேங்க்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

நாம் முன்பு கூறியபடி 2019-ம் ஆண்டுக்கான FZ சீரிஸ் பைக்குகளை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா. இவற்றில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. FZ-Fi V3.0 பைக்கின் விலை 95,000 ரூபாய் எனவும், FZS-Fi V3.0 பைக்கின் விலை 97,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களைவிட முறையே 13,000 ரூபாய் மற்றும் 9,000 ரூபாய் அதிகம்!

யமஹா

அதேபோல YZF-R15 V3.0 பைக்கைத் தொடர்ந்து, FZ 25 மற்றும் Fazer 25 பைக்கிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை வழங்கியிருக்கிறது யமஹா. இதனால் இவற்றின் விலை முன்பைவிட 13,000 ரூபாய் அதிகரித்துள்ளது (FZ 25 - 1.33 லட்சம் ரூபாய்; Fazer 25 - 1.43 லட்சம் ரூபாய்). கலர் ஆப்ஷன்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு 250 சிசி பைக்குகளில் மெக்கானிக்கலாக எந்த வித்தியாசமும் இல்லை. (இங்கே இருக்கும் விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்- ஷோரூம் விலைகள்)

டிசைனில் என்ன மாற்றம்?

FZS-FI V 3.0

FZ பைக்குகளுக்கே உரிய டிசைன் கோட்பாடுகள் இங்கும் தொடர்கின்றன. என்றாலும், பெட்ரோல் டேங்க்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதில் வழக்கமாக Tank Extension இருக்கும் இடத்தில் ஏர் வென்ட் போன்ற அமைப்பு இடம்பெற்றுள்ளது. FZ-Fi மாடலுடன் ஒப்பிடும்போது, FZS-Fi மாடலில் ஏர் வென்ட் பகுதியைச் சுற்றி க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இன்ஜின் அடிபடுவதைத் தடுக்கும் Belly Pan வழங்கப்பட்டுள்ளது. பில்லியன் ரைடரின் சொகுசுக்கு உதவும் வகையில், கிராப் ரெயில் மற்றும் சீட் ஆகியவை ஸ்ப்ளிட் டிசைனிலிருந்து சிங்கிள் பீஸ் முறைக்கு மாறியிருக்கின்றன. எனவே, இவை பொருத்தப்படக்கூடிய Sub-Frame மற்றும் பாடி பேனல்கள் முற்றிலும் புதிது என்கிறது யமஹா. பக்கவாட்டு பாடி பேனல்கள் வித்தியாசமாக இருப்பதுடன், FZS-Fi V3.0 மாடலில் Contrast கலரில் ஃப்னிஷ் செய்யப்பட்டிருப்பது நைஸ். இந்த மாடல், மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

வசதிகள் மற்றும் இன்ஜின்

Yamaha

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் LED ஹெட்லைட்ஸ் புதிதாக இருந்தாலும், பின்பக்க Tyre Hugger - அலாய் வீல்கள் - ஸ்விட்ச் கியர் - எக்ஸாஸ்ட் பைப் ஆகியவற்றில் FZ-25 பைக்கின் தாக்கம் அதிகம். ரைடருக்கு வசதியான சீட்டிங் பொசிஷன் கிடைக்கும்படி, ஹேண்டில் பார் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் தொடங்கும் இடத்தில், சாவி துவாரம் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி பைக்கின் சேஸி, டெயில் லைட், இண்டிகேட்டர்கள், மிரர்கள், டயர்கள், பிரேக்ஸ் அதேதான்! இரண்டு கலர்களில் FZ-Fi V3.0 பைக்கை வாங்கலாம். பல்ஸர் NS160, ஹார்னெட் 160R, ஜிக்ஸர், RTR 160 4V உடன் FZ சீரிஸ் போட்டிபோடுகின்றன. முன்னே சொன்ன மாற்றங்களால், முந்தைய மாடலைவிட இதன் எடை 5 கிலோ அதிகரித்துவிட்டது. எனவே, அதற்கு ஈடுகொடுக்கும்விதமாக Fi சிஸ்டத்தை ரீ-டியூன் செய்திருக்கிறது யமஹா. ஆனால், இந்த 149சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தரும் 13.2bhp பவர் - 1.28kgm டார்க்கில் No Change!

Fazer 25 ABS

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்