Published:Updated:

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சி.பி.ஜோஷிக்கு கூடுதல் இலாகா!

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சி.பி.ஜோஷிக்கு கூடுதல் இலாகா!
மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சி.பி.ஜோஷிக்கு கூடுதல் இலாகா!
மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சி.பி.ஜோஷிக்கு கூடுதல் இலாகா!

புதுடெல்லி: மத்திய அமைச்சரவையிலிருந்து பவன்குமார் பன்சல், அஸ்வனிகுமார் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து, அவர்கள் கவனித்து வந்த இலாகாக்கள் மத்திய அமைச்சர்கள் கபில்சிபல் மற்றும் சி.பி.ஜோஷிக்கு கூடுதல் பொறுப்புகளாக வழங்கப்பட்டுள்ளன.

 
தன்படி தொலைத் தொடர்பு அமைச்சராக உள்ள கபில்சிபலுக்கு சட்ட அமைச்சக பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
##~~##

அதேப்போன்று சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சி.பி.ஜோஷிக்கு, பவன்குமார் பன்சல் வகித்துவந்த ரயில்வே அமைச்சக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் முகுல் ராய், ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து, ஜோஷிதான் ரயில்வே அமைச்சக பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.