Published:Updated:

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!
ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

இந்த இதழ் ஆனந்த விகடன் இதழை படிக்க...: https://bit.ly/2S3aVMs

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!


"75 ஆண்டுக்கால வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"

"ஒரு பயணம் என்றால் சென்றுசேரக்கூடிய இடம், இலக்கு வேண்டும்.  அதை அடைவதற்கான குறிக்கோள் வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது பயணமும் இல்லை. எனக்கு இலக்குகளும் இல்லை. எனக்கு நேர்ந்தது எல்லாமே நான் சென்றுசேர்ந்த இடம் என்றுதான் சொல்வேன். சிறுவயதில் இசையமைப்பாளராக வேண்டும், திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையும் குறிக்கோளும் இருந்தது உண்மைதான். அது இல்லையென்றால் நான் சென்னைக்கே வந்திருக்க மாட்டேனே! ஆனால், அதைமட்டுமே இலக்கு என்று சொல்லிவிட முடியாது என்பதால் இதைப் பயணம் என்றும் நான் கருதவில்லை."

-  மகத்தான கலைஞன் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பிரமாண்ட விழா எடுப்பதற்கான ஆயத்தவேளையில் அளித்த ராஜாவின் நேர்காணல்தான் "நான் துறவி அல்ல!". இதில் ஆன்மிகம் தொடங்கி சமகால சமூகவலைதள சூழல் வரை தன் பார்வையைப் பகிர்ந்திருக்கிறார் இளையராஜா. 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

அளவற்ற லஞ்சம், மாநிலத்தின் உரிமைகளை தங்களது சுயநலத்துக்காக விட்டுக்கொடுப்பது போன்ற காரணங்களால் அ.தி.மு.க. அரசின் மீதும், பெரும்பான்மை வாக்காளர்கள், கடும் கோபத்தில் இருப்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பிஜேபியுடன் கரம் கோர்த்தால், அடி பலமாக இருக்குமென்பதை உணர்ந்தே, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அதை வேண்டாமென்கின்றனர். தம்பிதுரை, பிஜேபியை பிரித்து மேய்வதும், இதனால் தான்.

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

யார் என்ன சொன்னாலும், கூட்டணிக்குத் தயாரில்லை என்று சொல்லுகிற துணிச்சல், இன்றைய அ.தி.மு.க.தலைமைக்குத் துளியும் கிடையாது. பிஜேபி தலைமையுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவதில்தான், ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

- தமிழகத்தில், அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதன் பின்னணியைச் சொல்லி, அலசுகிறது 'வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!' எனும் அரசியல் கட்டுரை. 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

புத்தகத்தைவிட திரைப்படத்தில் சோனியாவுக்கு வில்லத்தன்மை அதிகம்.  ராகுல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது போல  படத்தின் டீசரில் காட்டியவர்கள் படத்தில் அந்த காட்சியை சேர்க்கவில்லை. ராகுல் , சோனியா ஆகியோர் பக்குவம் இல்லாதவர்கள் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இப்போது ராகுல்முதிர்ச்சி பெற்று  விவரமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.  2004-2014 காலக்கட்டத்தில் எப்படியிருந்தார்கள் என்பதை இப்போது உலகுக்குசொல்ல நினைப்பதின் நோக்கம் நிச்சயம் அரசியலாகதான் இருக்க முடியும். 

இந்த இதழ் ஆனந்த விகடன் இதழை படிக்க...: https://bit.ly/2S3aVMs

- சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங் சரணாகதியான கதையை 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' (தற்செயல் பிரதமர்) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார் பிரதமர் அலுவலகத்தில் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய பாரு. பிரதமர் அலுவலகத்தில் பிரதமரோடு நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால் சஞ்சய பாருவின் புத்தகத்துக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இந்த புத்தகத்தின் தழுவல்தான் அனுபம் கெர் நடித்த 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படம். இப்படம் பேசும் விஷயங்கள் குறித்து ஆழமாக உற்று நோக்குகிறது 'வரலாறு முக்கியம் பிரதமரே!' எனும் சிறப்புப் பார்வை. 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

ராம் - யுவன் ஒரு வெற்றிக்கூட்டணி. யுவனுடனான பயணம் எப்படி இருக்கிறது?   

"யுவன் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ. கிரேட் கம்போஸர். அதை பேரன்பின் பின்னணி இசையைக் கேட்கும்போது நீங்களும் உணர்வீர்கள். மனிதர்களின் மனங்களுக்குள்ளும் திரைக்கதையின் நுட்பங்களுக்குள்ளும் நுழைந்து பயணிக்கின்ற கலைநுட்பம் அறிந்தவர். யுவனின் பின்னணி இசை அவ்வளவு அழகாக, உணர்வுபூர்வமாக வருவதன் காரணம் அதுதான். சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் யுவன் எனக்கு மிகப்பெரிய பலம்."

உங்களின் நான்கு படங்களின் பிரதான பாத்திரங்களான பிரபாகர், செல்லம்மா, பிரபு, பாப்பா நால்வருமே பொதுச்சமூகத்தின் ஓட்டத்தில் பங்குபெற இயலாதவர்கள் அல்லது மறுப்பவர்கள். இந்தப் பாத்திரங்களுக்கான கதைக்களத்தை நீங்கள் திட்டமிட்டுதான் உருவாக்குகிறீர்களா?

"பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாத, பொதுச்சமூகம் புறக்கணித்த, பொதுச்சமூகத்தால் புரிந்துகொள்ள முடியாத ஏராளமான மனிதர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள். நம்மிடம் சொல்வதற்கான நிறைய விஷயங்கள் அவர்களிடம் இருக்கின்றன.அந்த விஷயங்கள் சொல்லப்படுவதுதான் மிக முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். பிறகு, ஒரு கலைஞனின் வேலைதான் என்ன?"

- 'பேரன்பு' ரிலீஸுக்கான வேலைகளில் பரபரப்பாக இருக்கும் இயக்குநர் ராம் உடனான 'இது இயற்கையோடு நிகழும் உரையாடல்' எனும் நேர்காணல் இது. ராம் தன் மனதில் இருப்பதை எடிட் செய்யாமல் பகிர்ந்திருக்கிறார்.

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

" 'நாடோடிகள் 2' என்ன களம்?" 

"சாதி மேல எனக்குப் பெரும் கோபம் உண்டு. சாதியப் பிரச்னைகள் வரும்போதெல்லாம், ஆத்திரம்தான் வரும். அதேசமயம், சாதியே வேண்டாம்னு சொல்ற பசங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிய படம் இது. 'நாடோடிகள்' படத்துக்கும், இந்தப் படத்துக்கும் சம்பந்தம் கிடையாது. இது முற்றிலும் வேற கதை. ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் சாதியை வெறுக்கிற இளைஞர்கள் இருக்காங்க... 

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2B1JQPV

முதல்ல 'ரத்தம்'னுதான் வெச்சேன். ஹீரோவா சசிகுமார் கமிட் ஆனபிறகு, அந்த டைட்டில் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, ஏற்கெனவே தம்பி சசியை ரத்தவாடை அதிகமான படத்துல நடிக்கிறதா சொல்லிக்கிட்டிருக்காங்க. நீங்க 'நாடோடிகள் 2'ன்னே டைட்டில் வெச்சிடுங்க'ன்னு சசிதான் சொன்னான்."  

- "சூர்யா எனக்கு செல்லம்!" எனும் பேட்டியில் சாட்டை, ராஜமெளலி, சூர்யா, வடசென்னை 2 என பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

``தலித்துகளின் நிஜமான லட்சியங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?''

``ஒடுக்கப்படும் வேறெந்தச் சமூகத்தையும் போலவே, தலித்துகளின் லட்சியமும்கூட அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், தலித் இயக்கங்களின் பெரும்பான்மைப் போக்கை, நடுத்தரவர்க்க, உயர் நடுத்தரவர்க்க தலித்துகள் கைப்பற்றிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது. அவர்களது செயல்பாடுகள் என்பது, பெரும்பாலும் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு பற்றிய கருத்தரங்குகளை நடத்துவதுதான்.  எப்போதாவது கொடூரமான தலித் ஒடுக்குமுறை நிகழ்ந்தால் மட்டும் வீதிக்கு வருகிறார்கள். மற்றபடி, டிசம்பர் 6 மற்றும் ஏப்ரல் 14 கொண்டாடுவதைச் சுற்றியேதான் சுழல்கிறது. 

- தேர்தலில் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி எனத் தெரிந்தவுடன், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தங்கள் கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தன. பா.ஜ.க-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வாகை சூடினார். சென்னை வந்திருந்த ஜிக்னேஷ் மேவானியுடான "நான் 98 சதவிகிதம் போராளி!" எனும் பேட்டி ஆழமும் அகலமும் நிறைந்த உரையாடல்.

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

பிள்ளைகளின் கல்விக் கட்டணம்: பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரிச்சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் வரிச்சலுகை உண்டு. தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் எனில் ஒரு பிள்ளைக்குத் தாயும், இன்னொரு பிள்ளைக்குத் தந்தையும் வரிச்சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரியைச் சேமிக்க முடியும்.

திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல்: சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதை வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு மட்டும் வரிச்சலுகை இருக்கிறது. 

- வருமானத்தின் பெரும்பகுதியை வருமான வரியாகக் கட்ட வேண்டி யிருக் கிறது எனப் புலம்பு பவர்கள் ஏராளம். சில எளிய வழிகளைப் பயன்படுத்தி இந்த வருமானவரிக்கான செலவை சட்டபூர்வமாகவே மிச்சப்படுத்த முடியும். அப்படிப்பட்ட 10 வழிகளைச் சொல்கிறது 'வரிச் சேமிப்புக்கு 10 வழிகள்!'. 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மிக முக்கியம். 'நம்மால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்?' என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பது தான்!

'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...' என்று வடிவேலு சொல்வாரே... அதுபோல மியூச்சுவல் ஃபண்டில் வரலாறுதான் மிக முக்கியமானது. அதாவது முதலீடு ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எப்படி லாபம் பார்த்திருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். 

- மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நாம் ஏன் தயங்குகிறோம். `ரிஸ்க்' என்பதைத்தவிர வேறென்ன காரணமிருக்கிறது. விளம்பரங்களிலேயே சொல்கிறார்களே... உண்மையில், எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் `சந்தை அபாயம்' கொண்டவை அல்ல என்ற நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து எளியதோர் அலசலதைத் தருகிறது 'மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா?' எனும் சிறப்புப் பார்வை. 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

ஹாக்கி உலகக் கோப்பை என்ற மாபெரும் தொடரை கெத்தாக நடத்திக்காட்டியிருக்கிறது ஒடிசா அரசு. கிரிக்கெட் உலகக் கோப்பையை, 'ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை' என்றும், கால்பந்து உலகக் கோப்பையை 'ஃபிஃபா உலகக் கோப்பை' என்றும்தான் அழைப்பார்கள். ஆனால், இந்த ஹாக்கி உலகக் கோப்பையில் எந்த ஹாக்கி கூட்டமைப்பின் பெயரும் இல்லை. பேனர்கள், விளம்பரப் போஸ்டர்கள், லோகோ எனக் காணுமிடமெல்லாம் ஒடிசாதான்; 'ஒடிசா ஹாக்கி உலகக் கோப்பை'தான்! 

ஒரு மாநில அரசு உலகக் கோப்பைத் தொடரை முழுப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. போட்டிகளை நடத்துவது என்றால் மைதானங்களை ஏற்பாடு செய்து, விளம்பரம் கொடுப்பது என்பதோடு  முடிந்துவிடவில்லை அவர்கள் வேலை. இதுவரை ஒரு விளையாட்டுத் தொடருக்கு எந்த மாநில அரசும் செய்யாத பல விஷயங்களைச் செய்தது. 

- இந்தியாவின் 'ஸ்போர்ட்ஸ் கேப்பிட்டலாக' உருவெடுத்திருக்கிறது புவனேஷ்வர். ஒடிசா, இந்தியாவின் 'ஸ்போர்ட்ஸ் ஹப்' என்ற தன் புதிய அடையாளத்தைச் செதுக்கிக்கொண்டிருக்கிறது! அந்த முயற்சியின் மிகப்பெரிய முன்னெடுப்பு - 2018 ஹாக்கி உலகக் கோப்பை. இது தொடர்பான விரிவான பார்வையைக் காட்டியிருக்கிறது 'ஒடிசா மாறிக்கொண்டிருக்கிறது...' எனும் சிறப்பு அலசல். 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

கல்லூரி சமயத்தில் கூரியர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணம் சேர்த்துவைத்து 8,500 ரூபாய்க்குத் தனது முதல் பைக்கை வாங்கியிருக்கிறார். ரைடிங் ஜாக்கெட், பூட்ஸ் இருந்தால்தான் ரேஸுக்குப் போகமுடியும் என்பதால், ஆட்டோ சீட் தைக்கும் துணியில் ரைடிங் ஜாக்கெட் தைத்துப் போட்டுக்கொண்டு, தெருவில் செருப்பு தைப்பவர்களிடம் பூட்ஸ் வாங்கி தன்னுடைய கரியரை ஆரம்பித்தவர், தன்னுடைய முதல் ரேஸை 6-வது இடத்தில் முடித்திருக்கிறார். 

"கஷ்டப்பட்டு வந்தேன். ஆனா, ரேஸ்ல ஜெயிக்க முடியலையேன்னு எனக்குப் பெரிய ஏமாற்றம். அதுமட்டுமில்லை, இரண்டு நாள் ட்ராக்ல பைக் ஓட்டணும்னா 750 ரூபாய் கட்டணும். அதனால ரேஸ் போகவேயில்லை. ட்ராக் போனேன், எல்லா ரேஸையும் பார்த்தேன். பிராக்டீஸ் மட்டும் எடுத்தேன். பொறுமையா ரேஸ் ட்ராக் பத்தி நல்லா கத்துக்கிட்டேன். ஒன்பது மாசம் கழிச்சி திரும்பவும் ரேஸ் ஓட்ட ஆரம்பிச்சேன்" என்கிறார்.

- இந்தியாவில் பைக் ரேஸின் உச்சபட்சப் போட்டியான சூப்பர் ஸ்டாக் 165 போட்டியில், கடந்த ஏழாண்டுகளாக நேஷனல் சாம்பியன் பட்டத்தைத் தன் வசப்படுத்தி அசத்திவருகிறார் ஜெகன். சென்னைப் பட்டினப்பாக்கத்தின் குட்டிக் குட்டிச் சந்துகளில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தால், அவரது வீடு முழுவதும் விருதுகள்தாம். அத்தனையையும் தரையில் வைத்தால் படுக்க இடம் இருக்காது. 2011-ம் ஆண்டு ஜெகன் வாங்கிய முதல் டிராஃபி துருப்பிடித்திருக்க, 2018-ம் ஆண்டின் கோப்பை பளபளத்துக்கொண்டிருந்தது. அவர் குறித்த தகவல்களும், அவருடான சந்திப்பையும் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது 'வேகம் + விவேகம் = ஜெகன்' எனும் ஸ்போர்ட்ஸ் ஆர்ட்டிகிள். 

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

" 'இஸ்லாம், கிறித்துவம் மத நிர்வாகங்கள் அந்தந்த மதத்தினரிடையே இருக்கும்போது, இந்துக் கோயில் நிர்வாகமும் இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்' என்பது நியாயமான கோரிக்கைதானே?"

 "இஸ்லாமும் கிறித்துவமும் நிறுவப்பட்ட மதங்கள். அதில் பல திருச்சபைகளுக்கு பக்தர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். 16-ம் நூற்றாண்டில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி பின்னர் அரசு அதிகாரம் செய்ய முற்பட்ட போது, இந்துக் கோயில்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தன. கோயிலின் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை கிழக்கிந்திய கம்பெனியார் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியாக வருடாவருடம் பிரித்துக்கொண்டனர். 1862-ம் வருடத்துக்குப் பின்னரே பல கோயில்களின் நிர்வாகத்தைப் பல்வேறு உள்ளுர்க் குழுக்களின் பொறுப்புகளில் ஒப்படைத்து விட்டு ஆங்கிலேய நிர்வாகம் ஒதுங்கிக்கொண்டது. அதன் பிறகு நிர்வாகங்களைப் பராமரித்து வந்த தர்மகர்த்தாக்களின் செயல்பாடுகளில் சிக்கல்கள் எழும் போதெல்லாம் சிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நிர்வாக அமைப்பு முறை (scheme decree) ஏற்படுத்தப்பட்டது. இம்முறையிலும் சொத்துகளை முறையாகப் பராமரிக்க முடியாததனால் சுதந்திரத்துக்குப் பிறகு அறநிலையத்துறை உருவாக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. பெரும்பான்மையான இந்துக்கள் உள்ள நாட்டில் அவர்களது மத நம்பிக்கையைப் புண்படுத்தாத வகையில்தான் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு ஏற்பட்ட பின்னரே வருமானம் மிகுதியாக உள்ள கோயில்கள் தவிர்த்து சாதாரணக் கோயில்களிலும் ஒரு வேளை பூஜையாவது நடத்தப்பட்டு வருகின்றன.

- 'பாக்கத்தானே போற... இந்த பொன்.மாணிக்கவேல் ஆட்டத்த...'' என்று கெத்து காட்டி வந்த 'சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு' ஐ.ஜி-க்கு எதிராக அவர் துறை சார்ந்த அதிகாரிகளே புகார் கொடுத்திருப்பது யாரும் எதிர்பாராத அதிர்ச்சி. இந்நிலையில், 'சிலைக்கடத்தல் வழக்குகளில், எந்தவொரு அர்ச்சகரையும் பொன்.மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு உடனான "அறநிலையத்துறை அவசியம் தேவை!" எனும் சிறப்புப் பேட்டி மிக முக்கியமானது.

ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

தமிழர்கள் 'விருந்தோம்பல்' என்று ஒரு நுட்பமான வார்த்தையை உருவாக்கியிருக்கிறார்கள். விருந்து மட்டுமல்ல... அதை ஓம்பும் தன்மையும்தான் ருசியைத் தீர்மானிக்கும். தரமான ருசியான உணவு, அன்பும் அக்கறையுமான உபசரிப்பு... இரண்டும் இருக்கிற உணவகங்கள்தாம்  காலம் கடந்து நிலைத்து நிற்கின்றன. புதுக்கோட்டை, தெற்கு 4-ம் வீதியில் 40 ஆண்டுகளாகச் செயல்படும் பழனியப்பா மெஸ் இதற்கு நல்ல உதாரணம். 

புதுக்கோட்டையில்  எந்த திசையில் நின்று கேட்டாலும் உணவகத்துக்கு வழி காட்டுகிறார்கள். பழைமையான கட்டடம். ஒவ்வாமையாகும் உணவுகள், உணவின் மருத்துவத் தன்மைகள், உணவில் குறையிருந்தால் புகார் செய்ய வேண்டிய எண்கள் எனச் சுவர்களெங்கும் விதவிதமாக, போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால் கல்யாண வீடு மாதிரி பரபரப்பாக இருக்கிறது. 

- புதுக்கோட்டையில் அன்பும் அக்கறையுமான உபசரிப்பு அனுபவம் தந்த உணவகம் குறித்து விவரிக்கிறது இந்த வார 'சோறு முக்கியம் பாஸ்' தொடர் பகுதி. 

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2B1JQPV