`வாசிக்கத் தூண்டும் படைப்பு’ - மனித உணர்வுகளைப் பற்றி பேசும் ஜக்கி வாசுதேவின் புதிய நூல் | sadhguru releasing new book about human feelings

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (24/01/2019)

கடைசி தொடர்பு:13:05 (24/01/2019)

`வாசிக்கத் தூண்டும் படைப்பு’ - மனித உணர்வுகளைப் பற்றி பேசும் ஜக்கி வாசுதேவின் புதிய நூல்

இந்தக் கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, வாசிப்பவர்களின் வாழ்க்கையிலும், பூக்கள் எப்படி காலை நேரத்தில் வசந்தமான வாசனையைப் பரப்புமோ, அதுபோல மகிழ்ச்சியைப் பரப்பும் தன்மையில் அமைந்துள்ளன இந்தக் கட்டுரைகள்

ஈஷா யோகா மையத்தின் தலைவரும் ஆன்மிகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘Flowers on the Path'  என்ற புதிய நூலை எழுதியுள்ளார். இதில், மனிதர்கள் தாம் எதிர்கொள்ளும் இன்ப துன்ப உணர்வுகளைக் கையாள்வது தொடர்பான கட்டுரைகள் இடம்பெற உள்ளன என்று கூறப்படுகிறது. 

சத்குரு ஜக்கி வாசுதேவ்


இந்த நூல், ‘பென்குயின் ரண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பல்வேறு காலகட்டத்தில் சத்குருவால் எழுதப்பட்டவை. பல்வேறு கூட்டங்களில் பேசப்பட்டவை. இவை பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிவந்த காலகட்டத்திலேயே, இந்த அழகியலுக்காகவும், நகைச்சுவைக்காகவும், தெளிவான அறிவுபூர்வமான கருத்துகளுக்காகவும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.

“இந்தக் கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, வாசிப்பவர்களின் வாழ்க்கையிலும் பூக்கள் எப்படி காலை நேரத்தில் வசந்தமான வாசனையைப் பரப்புமோ, அதுபோல மகிழ்ச்சியைப் பரப்பும் தன்மையில் அமைந்துள்ளன. இவை, வாசகர்களின் கவனத்தை ஈர்த்து முழுவதுமாக வாசிக்கத் தூண்டும் தன்மையிலும் அமைந்துள்ளன. பலரது மனதிலிருக்கும் பழைமையான சிந்தனைகளுக்குப் புதிய ஒளியை இவை பாய்ச்சும்” என்று இந்த நூலை வெளியிட உள்ள பென்குயின் பதிப்பகத்தார் கூறியுள்ளனர். 

ஜக்கி வாசுதேவ்


சத்குரு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும், உலகப் பொருளாதார மாநாடுகளிலும் முன்னணிப் பேச்சாளராகப் பங்கேற்றுவருகிறார். அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் சம்மேளனம் மற்றும் இந்தியப் பொருளாதார அமைப்புகள், டெட் (TED) ஆகிய அமைப்புகளிலும் முன்னணிப் பேச்சாளராக இருக்கிறார்.  

 

படம்- பென்குயின் பதிப்பகம்