`3 நாள்களில் 13 உலகச் சாதனைகள்!’ - தருமபுரி கல்லூரி மாணவிகளின் முயற்சி | Students create world record on social awareness

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (28/01/2019)

`3 நாள்களில் 13 உலகச் சாதனைகள்!’ - தருமபுரி கல்லூரி மாணவிகளின் முயற்சி

சமூகத்திற்கு நல்ல உணர்வுகளையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தும் விதமாக, பச்சமுத்து மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

உலகம் வெப்பமயமாதலைத் தடுத்தல், குழந்தைகள் வன்கொடுமைகளைத் தடுத்தல், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்தல்,  பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், விவசாயிகளின் நிலையைப் பாதுகாத்தல், ரத்த தானம் செய்தல், உடல் உறுப்பு தானம் போன்ற பல்வேறு விதமான சமூக விழிப்பு உணர்வைத் தரும் உலக சாதனைகளை நிகழ்த்திக் காட்டினர். 

இந்த 13 சாதனைகளையும், உலக சாதனை நிறுவனம், இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலக சாதனை நிறுவங்களின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வுசெய்து, சான்று அளிக்க உள்ளார்கள். 

இந்த உலக சாதனைகுறித்து அக்கல்லூரியின் முதல்வர் கூறுகையில், ``பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 10-ம் ஆண்டை ஒட்டி மூன்று உலக சாதனைகளை மாணவிகளும் மாணவர்களும் செய்து காட்டினர். சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு நோக்கத்துக்காகச் செய்யப்பட்டவை. அந்த 13 உலக சாதனைகளில் முதல் சாதனை, குழந்தைகள் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 30 நிமிடத்தில் கிட்டத்தட்ட 2000 ஸ்லோகங்களை அவர்கள் தயார்செய்து, உலக சாதனையை நிகழ்த்திக்காட்டினர். 

இரண்டாவது, தமிழகத்தில் பிளாஸ்டிக் பை உபயோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவியும் 3 பேப்பர் பேக்குகளைத் தயாரித்து,  தயாரித்த பேப்பர் பேக்குகளை விற்று, அதன் மூலமாக வந்த தொகையை ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் தலைப்பு `most number bags made by a team in thirty minutes’.

மூன்றாவது உலக சாதனை, பெண்களுக்கு சிறு தொழில் கற்றுக்கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் 2500-க்கும் மேற்பட்ட ஆபீஸ் கவர் செய்யப்பட்டது. நான்காவது, நாட்டின் 70-வது குடியரசு தின விழாவையொட்டி, எங்கள் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் தனித்தனியாக வெள்ளைத் துணி கொடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் அவர்கள் கட்டைவிரல் காட்சிகளை வைத்து 1883 தேசியக்கொடிகளைத் தனித்தனியாக உருவாக்கி சாதனை படைத்தனர். அந்த தேசியக்கொடிகளை அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் வைக்கப்போகிறோம். அடுத்த சாதனை, அனைவரும் ஒரே நேரத்தில் அன்னை தெரசா முகமூடியை அணிந்தது.  2183 மாணவிகளால் 8900 விறிகள்  பேப்பரால் செய்யப்பட்டது. அடுத்தது, அனைத்து மாணவிகளிடமும் 7 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தூக்கிப்போட்டு விளையாடி மகிழ்ந்தனர், இது ஒரு உலக சாதனை. அடுத்தது, ஒவ்வொரு மாணவியும் காகிதத்தில் இதயத்தை உருவாக்கி, அதை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய இதயம் உருவாக்கினர்.

இதையடுத்து உலகம் வெப்பமாதலைத் தடுப்பதற்காக வண்ணக் காகிதங்களால் அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்ந்து ஒரு ஓவியத்தை தீட்டுகின்றனர். அடுத்து அனைத்து மாணவியும் ஒன்று சேர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று முகாம் நடத்தி நான்கு மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் ரத்ததானம் வழங்குகின்றனர். இது ஒரு மாபெரும் உலக சாதனை. அடுத்து, ஒரு லட்சம் பாட்டில் மூடிகளை வைத்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு லோகோவை உருவாக்கினர். கடைசி உலக சாதனை. கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஆனந்த் ராகவன் வந்து, உடல் உறுப்பு தானத்தை 
பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை நடத்தினார் . 

இதுகுறித்து மாணவிகளிடம் பேசினோம். ``3 நாள்களில் 13 உலக சாதனைகள் , நாங்கள் யாரும் சோர்வடையவில்லை, எங்களுக்கு சிறிதும் களைப்பு ஏற்படவே இல்லை , இந்த உலக சாதனைகளை எல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டும் இருந்தது . நாங்கள் நிகழ்த்திவிட்டோம்’’ என்றனர் பெருமிதத்தோடு.