வருமான வரியைச் சேமிக்க வழிகள் காட்டும் நாணயம் விகடனின் 10 அம்சங்கள் | highlights of this week Nanayam Vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (29/01/2019)

கடைசி தொடர்பு:13:06 (29/01/2019)

வருமான வரியைச் சேமிக்க வழிகள் காட்டும் நாணயம் விகடனின் 10 அம்சங்கள்

இந்த இதழ் நாணயம் விகடன்: https://bit.ly/2COn9Pw

இந்த நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2ME5G0v

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள்தான் சேர முடியும். தற்போது ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை உண்டு. 

தபால் அலுவலக டைம் டெபாசிட்: ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 ஆகும். தற்போது ஆண்டுக்கு 7.8% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும்.    

பிள்ளைகளின் கல்விக் கட்டணம்: பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரி சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. இரு பிள்ளைகளுக்குத்தான் இந்த  வரிச் சலுகை கிடைக்கும். 

- இந்த மூன்று வழிகள் மட்டுமல்ல... 'வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..!' காட்டியிருக்கிறது இந்த வார கவர் ஸ்டோரி. நம்மில் பலருக்கு எந்த முதலீட்டுக்கு அல்லது எந்தச் செலவுக்கு எவ்வளவு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்கிற விவரம் தெரியாமலே இருக்கிறது. இதனால் வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்யாமல், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போடுகிறார்கள். இங்கே நாம் சொல்லியிருக்கிற வருமான வரியைச் சேமிக்கும் 30 வழிகளின்படி நீங்கள் நடந்தால், வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்!

நம் நாட்டில் மிகக் குறைவான லாக்இன் இருக்கக்கூடிய ஒரு முதலீடு என்றால் அது இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடுதான். இதில் மூன்றாண்டு காலம் லாக்இன் செய்து, பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். என்றாலும், குறைவான லாக்இன் என்கிற ஒன்றை மட்டுமே பார்க்காமல்,  இ.பி.எஃப், பி.பி.எஃப், பேங்க் டெபாசிட் என இவற்றில் சரியான அளவுக்கு அவரவர்கள் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து முதலீடு செய்யவேண்டியது அவசியம்.

மற்ற முதலீடுகளைக் காட்டிலும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் தரும் வருமானம் அதிகம். மூன்று அல்லது ஐந்து வருட காலத்தில், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் 11.5 முதல் 16% வரை வருமானம் கொடுத்திருக்கிறது. அதேவேளையில், அதிகபட்சமாக இந்த வகை ஃபண்டுகள் 19% வருமானம் தந்திருக்கிறது. ஐந்தாண்டு காலத்தில் 17% வருமானம் கொடுத்திருக்கிறது...

- வருமான வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் குறித்து தெளிவுபட விளக்கியிருக்கிறது மற்றுமொரு பயனுள்ள கட்டுரை.

.

சம்பளம் பெறுவோர் மட்டுமின்றி, சம்பளம் வழங்கும் அரசு அதிகாரிகளுக்கும் சேர்த்து,  லட்சக்்கணக்கில் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சம்பளதாரர்களின் வருமான வரியைக் கணக்கிட, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை பற்றிய சுற்றறிக்கையை சம்பளம் பட்டுவாடா செய்யும் அதிகாரி களுக்கு அனுப்பி நடப்பாண்டில் தனது பிடியை இறுக்கியிருக்கிறது வருமான வரித் துறை. அதாவது, சம்பளம் வழங்கும் அதிகாரி, சம்பளதாரர் வரிச் சலுகை கோரும் இனங்களில், அதற்கான தகவல் மற்றும் விவரங்களைப் பெற்று, தனக்கு திருப்தி ஏற்பட்டால் வரிச் சலுகையை அனுமதிக்கலாம். தரப்பட்ட விவரம் / தகவல் திருப்திகரமாக இல்லையெனில், சம்பளதாரர் கோரும் வரிச் சலுகையை, சம்பளம் தரும் அதிகாரி அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை.

- 'இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை' குறித்து மட்டுமின்றி, 'கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகளை'யும் சொல்கிறது சிறப்பு கைடன்ஸ் கட்டுரை. 

அதிக திட்டங்களில் முதலீடு செய்தல்: சில முதலீட்டாளர்கள், பரவலாக்கம்தான் முதலீட்டைப் பெருக்க உதவும் எனும் கருத்தைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு, அதிகமான திட்டங்களில் முதலீடு செய்திருப்பார்கள். இது ஆரம்பத்தில் சுலபமாகவும், புத்திசாலித்தனமாகவும் தெரியக்கூடும். ஆனால், பின்னாளில் போர்ட்ஃபோலியோ வைக்   கண்காணிக்கும்போது (Review) சிரமமாகவும் மற்றும் பங்குச் சந்தையின் சரிவு போன்ற சமயங்களில் அல்லது நாம் முதலீடு செய்திருக்கும் திட்டத்தின் மதிப்பானது குறையும் காலங்களில், அவற்றைச் சராசரி (Average) செய்வதற்கு அல்லது மறுமுதலீடு (Reinvestment) செய்வதற்குப் பணம் தேவைப்படும்போது பெரும் நெருக்கடியையும் மன உளைச்சலையும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும். எனவே, மூன்று திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். ஐந்து திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது ஓரளவு கையாளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதற்கும் அதிகமான நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது சரியான பரவலாக்கமாக இருக்காது.

- இதுமட்டுமல்ல, நாமினியைக் குறிப்பிடத் தவறுதல்; கடந்த கால வருமானத்தை எதிர்பார்த்து, முதலீட்டைத் தொடங்குதல்; குறுகியகால இலக்குகளுக்காக எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்குதல்; எல்லாத் திட்டங்களிலும் டிவிடெண்ட் ஆப்ஷன் ஆகியவற்றையும் விவரித்து 'மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!' மிகச் சிறப்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக சொந்தமாக வாங்குதல் என்பது குறைந்து உபயோகிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. நாளடைவில் வாடிக்கை யாளர்கள் இதையே பெரிதும் விரும்புவார்கள். சந்தா வழி விற்பனையை ஒரு நிறுவனம் நடைமுறைப்படுத்தி விட்டால், மார்க்கெட்டிங் குழுவின் வேலை பலவும் சுலபமாகிவிடும். யாருக்கோ பொருளை விற்று, அந்தப் பொருள் பற்றி யாரிடமோ மார்க்கெட் ரிசர்ச் செய்வதை விட, யார் பொருளுக்கான சந்தாவைச் செலுத்தியுள்ளாரோ, அவரைப் பற்றியும், அவருடைய தேவை, எதிர்பார்ப்பு, நிறுவனத்தி னுடைய தயாரிப்பு எந்த அளவுக்கு சந்தாதாரரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறது என்பது குறித்து தெளிவான டேட்டாவை அவர் களிடமிருந்து மார்க்கெட்டிங் குழுவினால் சுலபத்தில் பெற்று, அவற்றைத் தீர ஆராய்ந்து பயன்படுத்த முடியும்...

- ஏன் சந்தா செலுத்தும் வகையிலான வியாபாரமே உங்களுடைய நிறுவனத்தின் எதிர்கால வியாபார உத்தியாக மாறும் என்பதைச் சொல்லும் 'சப்ஸ்க்ரைப்ட்' என்னும் புத்தகம், பிசினஸ் பற்றிய நமது கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருக்கிறது. இதுகுறித்த விரிவான புரிதலைத் தருகிறது 'ஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்!' எனும் நாணயம் புக் செல்ஃப் பகுதி. 

மைண்ட்ட்ரீயின் தற்போதைய பிரச்னை இதுதான். 1999-ம் ஆண்டு முதலே  இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, இத்தனை ஆண்டுகளாக நன்கு சம்பாதித்த வி.ஜி.சித்தார்த்தா தற்போது தன்னுடைய முதலீட்டை விற்றுவிட்டு, வெளியேற நினைக் கிறார். தனிப்பட்ட முறையிலும் தனக்குச் சொந்தமான நிறுவனமான காபிடே நிறுவனம் மூலமாகவும் மொத்தம் 21 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார் சித்தார்த்தா. தன்னுடைய பங்குகளை வாங்குவதற்கு ஏற்ற முதலீட்டாளரைத் தேடி வருகிறார்  சித்தார்த்தா. ஆனால், இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள், சித்தார்த்தா பங்குகளை விற்பனை செய்வதை விரும்பவில்லை. இதுவே மைண்ட்ட்ரீயில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அடிப்படை.

- ஏன் வெளியேற நினைக்கிறார்? சித்தார்த்தா வெளியேறினால் என்ன சிக்கல்? என்பன போன்ற கருத்துகளை அழுத்தமாக முன்வைக்கிறது 'மைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா?' எனும் சிறப்புப் பார்வை. 

பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனத்தின் சொத்துகளைச் சுரண்டுவதற்காக முதலாளிகள் தேர்ந்தெடுக்கும் தவறான செயல்பாடுகளில் ஒன்று, தன்வசமுள்ள நிறுவனச் சொத்துகளைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது.   நிறுவனம் தனது வளர்ச்சிப் பாதையில் ஒருவித முதிர்ச்சி நிலையை அடைந்தபின், 'பணம் கறக்கும் கறவை மாடாக (Cash Cow)' இருக்கும் நிறுவனச் சொத்துகளை நிர்வாகத்தின் தலைமை நேர்மையற்ற முறையில், பாரபட்சமான வர்த்தக நடைமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இதைச் செய்யும். சன் பார்மா நிறுவனம் அப்படி என்ன செய்தது? 

சன் பார்மா மருந்துப் பொருள்களை இந்தியாவில் விநியோகம் செய்யும் உரிமையை ஆதித்யா மெடிசேல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திற்கும் திலிப் சங்விக்கும் உள்ள தொடர்பு குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. ஆதித்யா நிறுவனமானது, திலிப் சங்வியின் உறவினருக்குச் (சுதிர் வலியா) சொந்தமான சுரக்க்ஷா ரியால்டி நிறுவனத்திற்குக் கடன் தந்்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

- ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சன் பார்மா, கடந்த சில வருடங்களாகவே தள்ளாடி வருகிறது. இதுகுறித்த சிறப்புப் பார்வைதான் 'சிக்கலில் சன் பார்மா... பின்னணியில் நடப்பது என்ன?' எனும் அலசல் கட்டுரை. 

நடப்பு வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை மந்தமாக இருக்கக் காரணம் பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பா? 

"இல்லை. கடந்த 2018-ம் ஆண்டின் கடைசிக் காலண்டில் சிறப்பாகச் செயல்பட்ட ஆசிய சந்தைகளில் இந்தியச் சந்தை இரண்டாம் இடத்தில் இருந்தது. குறிப்பாகச் சொல்வதனால், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இறுக்கமான பணப் புழக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு இடையேயும் கடந்த மூன்று மாதங்களில் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு 8% உயர்வுடன்  சிறப்பாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றுள்ள புளூசிப் நிறுவனங்களின் வருவாய்  1.6% வரை குறைத்துள்ளன. அதேசமயம், உள்நாட்டு ரூபாய் அடிப்படையில் பார்க்கும்போது இண்டெக்ஸ் 0.4% வரை அதிகரித்துள்ளது...

-  'சந்தை சரிவுக்கு என்ன காரணம்?' என்பது உள்பட பங்குச்சந்தை குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் ஷெர்லக்.


 
ரிட்டையர்மென்ட் ஃபண்டுகளில் ஐந்து  வருடங்களுக்கு லாக்இன் உள்ளது. அதற்குமேல் 60 வயதிற்குமுன் வெளியேறினால், வெளியேற்றுக் கட்டணம் உள்ளது. இதனால் நோக்கம் நிறைவேறும் வரை முதலீட்டாளர்கள் வெளியேறாமல் தடுக்கப்படுகின்றனர். ஆகவே, லட்சியம் வரும்போது திட்டமிட்ட பணம் உறுதியாகக் கிடைக்கிறது.

ஃபண்ட் செயல்பாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், மாறுதல் செய்யாததால், நாம் எதற்காக முதலீடு செய்தோம், எவ்வளவு முதலீடு செய்தோம், இப்போது எவ்வளவு உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக இருக்கும். இதுவே வேறு ஃபண்டுகளில் அல்லது முதலீடுகளில் பணம் முதலீட்டில் இருக்கும்போது, அந்த முதலீட்டை அதிக வருவாய்க்காக மாற்றிக் கொண்டே இருப்போம். இந்த ஃபண்டுகளைப் பொறுத்தவரை, நோக்கம் என்பதே பிரதானமாக இருக்கும். மேலும், முதலீடு செய்தபின் நிம்மதியாக இருப்போம். வருவாயை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கமாட்டோம்.

- ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள் குறித்து முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடரின் 'ஓய்வுக் காலத்துக்கு உதவும் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள்!' எனும் பகுதி. 

நைபாலுக்கும் முதலீட்டுக்கும் என்ன சம்பந்தம்? 

இவருடைய திறமையில் ஐம்பது சதவிகிதத்தை நாம் முதலீட்டில் கொண்டுவந்துவிட்டால் நமக்கு நிகரான ஆட்கள் முதலீட்டில் இல்லை என்று சொல்லுமளவிற்கு நாம் சென்றுவிடுவோம். நைபாலின் ஆய்வுமுறைகளிலிருந்து ஒரு முதலீட்டாளர் கற்றுக்கொள்ளவேண்டியவை என்னென்ன..? 

1. ஒரு நிறுவனம் குறித்த பல விஷயங்களைப் புரிந்துகொள்ள சில மணி நேரங்களோ அல்லது நாள்களோ போதுமானதாகும். அதேசமயம், அந்த நிறுவனத்தை வெற்றி பெறவைக்கும் போட்டியைத் தவிர்க்கும் குணாதிசயங்களைப் (Competitive Advantage) புரிந்துகொள்ள சில மாதங்களோ அல்லது வருடங்களோகூட ஆகலாம்.

2. ஒரு நிறுவனத்தைப் பற்றி புரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள், டீலர்கள், சப்ளையர்கள் என பலதரப்பினரின் எண்ணங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கும். சிலசமயம், அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற முக்கியஸ்தர்கள்கூட (சி.இ.ஒ /சி.எஃப்.ஓ) நமக்குத் தகவல்களைத் தரலாம்.

- இந்தப் பட்டியல் சற்றே நீளும். அதுமட்டுமின்றி, 26 ஆண்டு காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயணித்து, பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபாலின் புத்தகங்கள் குறித்தும் கச்சிதமாகப் பேசுகிறது 'காபி கேன் இன்வெஸ்ட்டிங்' தொடரின் 'முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்!' பகுதி. 

இந்த நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2ME5G0v