மகசூலும் லாபமும்: பசுமை விகடன் 13-ம் ஆண்டு சிறப்பிதழின் பலன்மிகு 13 அம்சங்கள்! | highlights of this week Pasumai vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (30/01/2019)

கடைசி தொடர்பு:13:12 (30/01/2019)

மகசூலும் லாபமும்: பசுமை விகடன் 13-ம் ஆண்டு சிறப்பிதழின் பலன்மிகு 13 அம்சங்கள்!

இந்த இதழ் பசுமை விகடன்: https://bit.ly/2CSjgZS

"மழை இல்லாமல் வெயில் நல்லா அடிச்சா தக்காளியில் மகசூல் நல்லா இருக்கும். பனி அதிகமா இருக்குறதால, சாயங்கால நேரத்துலயே தக்காளியைப் பறிச்சுடுறேன். ராத்திரி நேரம் அதிகப் பனி இருக்குறதால காலையில பறிச்சா, பழம் சீக்கிரமே அழுகிப்போயிடும். வெளிர் பச்சை, ஆரஞ்சு நிறம் கலந்த நிறத்துல முக்கால்வாசி பழுத்த நிலையில பழங்களைப் பறிச்சுடுவேன். அப்புறம் தரம் பிரிச்சு கூடைகள்ல அடுக்கி விருதுநகர் காய்கறிச் சந்தையில் விற்பனை செய்துட்டுருக்கேன். இயற்கை முறையில் விளையுறதால என்னோட தக்காளிக்கு கிலோவுக்கு ரெண்டு ரூபாய் கூடுதலாகக் கிடைக்குது.

இதுவரை 12 பறிப்பு மூலமா 368 கிலோ தக்காளி கிடைச்சுருக்கு. ஒரு கிலோ 26 ரூபாய்ல இருந்து 32 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கேன். அதுமூலமா 10,304 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுருக்கு. இன்னும் மூணு மாசத்துக்குக் கிட்டத்தட்ட 50 பறிப்புகள் வரை பறிக்கலாம். அதுமூலமா 1,500 கிலோ வரை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்..."

- '40 சென்டில் ரூ.47,000 - இயற்கையில் இனிக்கும் தக்காளிச் சாகுபடி!' குறித்து மட்டுமின்றி, இந்த மகசூலைப் பெறுவதற்கான வழிகாட்டுதலையும் தந்திருக்கிறார் லதா.

"இயற்கை விவசாயத்துக்கு வந்த பிறகுதான் விவசாயத்துக்கான முழுமையான அர்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். மத்த தொழில்கள்ல வருமானம் மட்டும்தான் கிடைக்கும். ஆனா, விவசாயத்துல கிடைக்குற வருமானம், மன நிம்மதியையும் கொடுக்குது. செலவு குறைஞ்ச இயற்கை விவசாயத்தை எல்லோரும் செய்யணுங்கிறதுதான் என்னோட ஆசை. இப்போ ஆடு, மாடு,கோழி, புறானு ஒரு பண்ணையைத் தயார் பண்ணிட்டுருக்கேன். சீக்கிரம் அதை ஒருங்கிணைந்த பண்ணையா மாத்திடுவேன். இயற்கை விவசாயம் செய்றதால சமூகத்துல என் மதிப்பு அதிகரிச்சுருக்கு. தமிழக அரசோட இயற்கை விவசாயச் சான்றிதழ் வாங்கியிருக்கேன். ஹைதராபாத்துல இருக்கற இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம், எனக்கு விருது கொடுத்துருக்கு. அத்தனை பெருமைக்கும் காரணம்... இயற்கை விவசாயமும் அதை எனக்கு அறிமுகப்படுத்துன பசுமை விகடனும்தான்." 

- 'இரண்டரை ஏக்கரில் ரூ.2,00,000... சீரகச்சம்பா தந்த சிறப்பான லாபம்!' குறித்து பேசியதுடன், இதை சாத்தியப்படுத்திய வழிமுறைகள் குறித்தும் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர்.குமார். 

"காடுகள்ல இயற்கையாவே எல்லா மரங்களும் கலந்துதான் வளருது. அப்புறம் நாம மட்டும் ஏன் தென்னந்தோப்பு, மாந்தோப்புனு பிரிச்சுப் பிரிச்சுச் சாகுபடி செய்யணும்னு யோசிச்சு... செடிகள், கொடிகள், மரப்பயிர்கள்னு எல்லாத்தையும் கலந்து நடவு செஞ்சிருக்கேன். எல்லாப் பயிர்களும் இங்கே இருக்குறதால, சமத்துவத்துக்காகப் பாடுபட்ட 'தந்தை பெரியார்' நினைவா என் தோட்டத்துக்கும் 'பெரியார் தோட்டம்'னு பேர் வெச்சுட்டேன்" என்று சிலாகித்துச் சொல்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சக்திவேல். 

இப்போ தோட்டத்துல 250 மா மரங்கள், 250 தென்னை மரங்கள், 100 வாழை மரங்கள்,  50 பப்பாளி மரங்கள், 30 எலுமிச்சை மரங்கள், 30 சப்போட்டா மரங்கள், 25 பலா மரங்கள், 5 கொய்யா மரங்கள்னு இருக்கு. இது எல்லாத்துலயும் இப்போ மகசூல் கிடைச்சுட்டு இருக்கு."

- விழுப்புரம் மாவட்டம், பாக்கம் எனும் கிராமத்தில்தான் இருக்கிறது, சக்திவேலின் தோட்டம். 'ஆண்டுக்கு ரூ. 9,00,000 லாபம்! - ஒப்பற்ற லாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை!' குறித்து விரிவாக கூறியதுடன், தன் உத்திகளுடன் வழிகாட்டவும் செய்திருக்கிறார். 

"இயற்கை விவசாயத்துக்கான ஆர்வம் தற்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

"இயற்கை விவசாயம் என்றதும் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தித்தான் செய்ய வேண்டும் என்று நம் விவசாயிகள் நினைக்கிறார்கள். வீட்டுத்தோட்டத்துக்கு வேண்டுமானால் அது சாத்தியம். அதில் அதிகப்படியான விளைச்சல் பெற முடியாது. மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை. அனைத்துப் பயிர்களையும் நூறு சதவிகித இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்ய முடியாது. சில பயிர்களை வேண்டுமானால் அப்படி உற்பத்தி செய்யலாம். பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட உரங்களைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதில் தவறில்லை." 

- கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 13-வது துணைவேந்தராகச் சமீபத்தில் பதவி ஏற்றிருக்கிறார், முனைவர் என்.குமார். 'பசுமை விகடன்' ஆண்டுச் சிறப்பிதழுக்காகத் துணைவேந்தர் குமாரைச் சந்தித்துப் பேசினோம். பசுமை விகடனுக்கு அவர் அளித்த 'இயற்கை விவசாயத்தால் உணவு உற்பத்தி அதிகரிக்காது!' எனும் பேட்டியில் கவனத்துக்குரிய பதில்களைச் சொல்லியிருக்கிறார்.

"இந்த வருஷம் சம்பாப் பட்டத்தில், சாரி முறையில் நாலரை ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சிலிச்சம்பா ரக நெல்லைச் சாகுபடி செஞ்சுருக்கேன். இலைதழைகள், பஞ்சகவ்யா, மண்புழு உரம், உயிர் உரங்கள், மீன் அமீனோ அமிலம், தேமோர்க்கரைசல்னு இயற்கை இடுபொருள்களை அதிகமாகப் பயன்படுத்துனதால பயிர் வளர்ச்சி நல்லா இருக்கு. கதிர்கள் முக்கால் அடி நீளத்துக்கு வாளிப்பாக வந்திருக்கு. நெல்மணிகளும் நெருக்கமா இருக்கு. ஒரு கதிருக்கு 200 நெல்மணிகளுக்கு மேல இருக்கு. எப்படியும் ஏக்கருக்கு 30 மூட்டைகள் முதல் 36 மூட்டைகள் (60 கிலோ மூட்டை) வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இன்னும் பத்து நாள்ல அறுவடை செஞ்சிடுவேன்." 

- சாகுபடி செய்யும் முறை மட்டுமின்றி விற்பனை மற்றும் வருமானம் குறித்தும் விரிவாகச் சொல்லியிருக்கிறார் ஆனந்தராஜ். 'ரூ.3,40,000... அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச்சம்பா... விதைநெல்லுக்கு நல்ல விலை!' எனும் மகசூல் பகுதியைத் தவறவிடாதீர்கள். 

"மொத்தம் 15 பாத்திகள்ல 1,50,000 கொட்டைகளை விதைச்சுருக்கேன். விதைச்ச கொட்டைகள்ல 60 சதவிகித அளவுதான் தேறி வரும். அந்த வகையில 90,000 கிழங்குகள் வரை கிடைக்கும். 25 கிழங்குகள் கொண்ட கட்டுகளாகக் கட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தையில் தினமும் நேரடியா விற்பனை செய்றேன். இந்தச் சீசன்ல இதுவரைக்கும் 40,000 கிழங்குகளைத் தோண்டி விற்பனை செய்திருக்கேன். 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 100 ரூபாய்னு விற்பனையாகுது. இதுவரைக்கும் 1,600 கட்டுகள் மூலம் 1,60,000 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு."

- தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையன்று சூரியக் கடவுளுக்கு வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, காய்கறிகளுடன் பனங்கிழங்கும் இடம்பெறும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பனங்கிழங்கைப் பல ஆண்டுகளாக விளைவித்து வரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் பகிர்ந்த தகவல்கள் அனைத்துமே முக்கியமானவை. 

நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொள்வது, விவசாயிகளுக்குப் பெரும் சவாலான விஷயம். குறிப்பாக, சம்பாப் பட்டத்தில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட 'ஆடுதுறை-51' என்ற நெல் ரகத்தை 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்கிறது. குறைவான அளவு இடுபொருள் மட்டுமே இந்த ரக சாகுபடிக்குப் போதுமானதாக இருப்பதோடு, பூச்சிக்கொல்லிகளும் தேவைப்படுவதில்லை. கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டாலும்... சில விவசாயிகள் இந்த ரகத்தைச் சோதனை அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர், கும்பகோணம் அருகில் உள்ள கொண்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்.

இந்த இதழ் பசுமை விகடன்: https://bit.ly/2CSjgZS

"இன்னும் இருபது நாள்ல ஆடுதுறை-51 ரகத்தை அறுவடை செஞ்சுடுவேன். போன வருஷம், பதிமூணு ஏக்கர்ல 521 மூட்டை (60 கிலோ மூட்டை) நெல் கிடைச்சது. ஒரு மூட்டை 980 ரூபாய்ங்கிற விலையில மொத்தம், 521 மூட்டைக்கு 5,10,580 ரூபாய் கிடைச்சது. பதிமூணு ஏக்கர் நிலத்துல கிடைச்ச 585 கட்டு வைக்கோல் விற்பனை மூலமா... 29,250 ரூபாய் கிடைச்சது. மொத்த வருமானம் 5,39,830 ரூபாய். அதுல எல்லாச் செலவும் போக, பதிமூணு ஏக்கர் பரப்புல 3,73,430 ரூபாய் லாபமாகக் கிடைச்சது. இந்த வருஷமும் அதே அளவு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்" என்றார்.

- இத்துடன், ஒரு ஏக்கர் பரப்பில் ஆடுதுறை-51 ரக நெல் சாகுபடி செய்வது குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார். அந்த வகையில், 'ஆடுதுறை - 51: குறைவான உரமே போதும்... பூச்சிக்கொல்லி தேவையே இல்லை!' எனும் கட்டுரையும் மிகவும் முக்கியமானது. 

"எல்லோருக்கும் வந்த படைப்புழுப் பிரச்னை என்னோட மக்காச்சோள வயல்லயும் வந்தது. விதைச்ச 25-ம் நாள்லயே புழுக்கள் தென்பட்டுச்சு. எல்லோரும் பூச்சிக்கொல்லி அடிக்கச் சொன்னாங்க. ஆனா, நான் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்க் கரைசல் தயார் செஞ்சு தெளிச்சேன். 10 கிலோ பச்சை மிளகாய், 6 கிலோ பூண்டு, 3 கிலோ இஞ்சினு மூணையும் எடுத்து, இடிச்சு மாட்டுச் சிறுநீர்ல கலந்து தெளிச்சதுல புழுக்கள் செத்துப்போச்சு. பூச்சிவிரட்டி தெளிச்சபிறகும், சில பயிர்கள்ல புழுக்கள் உயிரோட இருந்துச்சு. வேளாண் விரிவாக்க அலுவலர், அந்தப் புழுக்களை எடுத்துட்டுப் போய்ப் பவானில இருக்கிற வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல ஆய்வு பண்ணினாங்க. ஆய்வு முடிவுல, 'அந்தப் புழுக்களுக்கு உயிர் இருந்தாலும் பயிர்கள சாப்பிடற அளவுக்கு ஆற்றல் இல்லாம செயலிழந்து போயிடுச்சு'னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. தொடர்ந்து, பஞ்சகவ்யா, வேஸ்ட் டீகம்போஸர்னு பயன்படுத்தினதுல பயிர் நல்ல செழிப்பா வளந்துருக்கு" என்றார், அம்மாசையப்பன். 

- சேலம் இரும்பு உருக்காலையில் 'சீனியர் ஆப்ரேட்ட'ராக வேலை செய்து வரும் அம்மாசையப்பன், சத்தியமங்கலம் சாலையிலுள்ள காசிபாளையம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். பசுமை விகடன் ஆண்டுச் சிறப்பிதழுக்காக அவர் பகிர்ந்த அனுபவக் குறிப்புகளே 
'மக்காச்சோளத்தில் மகத்தான லாபம்... அரசு ஊழியரின் அசத்தல் சாகுபடி!' எனும் பகுதி.

"பண்ணையோட மொத்தப் பரப்பு 25 சென்ட். அதுல 50 அடி நீளம், 25 அடி அகலத்தில் கொட்டகை அமைச்சிருக்கேன். நான்கு பக்கமும் மூங்கில் சட்டத்தால் தடுப்பு இருக்கு. ஆனா, முழுமையான அடைப்புக் கிடையாது. கோழிகள் சுலபமா கொட்டகையை விட்டு வெளியேற முடியும். 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்'டால்  மேற்கூரை அமைச்சு, அதுக்குக் கீழே கீற்றுகளை வேய்ஞ்சிருக்கேன். கோழிகள் முட்டை இட்டு, அடை காக்கிறதுக்கு வசதியா அங்கங்க இருட்டான சூழல்ல அலமாரிகள் இருக்கு. அதேபோலக் கோழிகள் உட்கார வசதியா மூங்கில் குச்சிகளைச் சாய்த்து வெச்சிருக்கோம். உயரத்தில் இப்படி உக்காந்துருக்குறதால, இரவு நேரங்கள்ல பிராணிகளால பாதிப்பு இருக்காது. இயற்கையான சூழல்ல வளர்த்தால்தான் ஆரோக்கியமா இருக்கும்கிறதால, மேய்ச்சல் முறையில்தான் வளர்க்கிறேன். பண்ணையில மின் விளக்குகள்கூடக் கிடையாது. ராத்திரி நேரத்தில் முழு இருட்டாத்தான் இருக்கும். அதனால, ராத்திரியில கோழிகள் நல்லாத் தூங்குது..."

- மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல வருமானம் ஈட்டக் கூடியவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரைச் சேர்ந்த தங்க.சரவணன். அவர் நம்மிடம் பகிர்ந்த அனுபவமும் உத்திகளுமே '60 பெட்டைகள்... 8 சேவல்கள்... மாதம் ரூ.26,000 லாபம்!' எனும் பகுதி. 

"நாட்டுக்கோழிகளையும் மீனையும் நேரடியாவே நுகர்வோருக்கு விற்பனை செஞ்சுட்டுருக்கேன். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை ஸ்டால் போடுவோம். ஹைவேஸ்ல இருக்குறதால விற்பனைக்குப் பிரச்னையில்லை" என்ற பாலாஜி நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார். "ஒரு கிலோ நாட்டுக்கோழி 200 ரூபாய்னும், ஒரு கிலோ ஆட்டுக்கறி 500 ரூபாய்னும், ஒரு கிலோ மீன் 170 ரூபாய்னும் விற்பனை செய்றேன். வாரத்துக்கு 100 கோழிகள், 2 ஆடுகள், 30 கிலோ மீன்கள்னு விற்பனையாகும். இதுமூலமா வாரத்துக்கு 30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாசத்துக்கு 1,20,000 வரை வருமானம் கிடைக்குது."

- பல்வேறு துறைகளில் பணிபுரிந்து, நல்ல வருமானம் ஈட்டினாலும்... மாற்றுத்தொழிலாக விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தான் தேர்ந்தெடுக்கின்றனர், பெரும்பாலான இளைஞர்கள். அப்படி விவசாயத்துக்கு வர விரும்பும் இளைஞர்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது, 'பசுமை விகடன்'. அந்த வகையில், பசுமை விகடன் மூலம் தெரிந்து கொண்டு கால்நடை வளர்ப்பில் இறங்கி நல்ல வருமானம் எடுத்து வரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி அனுபவப் பகிர்வுதான் 'நாட்டுக்கோழிகள், ஆடுகள், மீன்கள்... மாதம் ரூ. 1,20,000 வருமானம்! - வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு!'

"ஒரு நாளைக்கு 6 முறைங்கிற கணக்குல 108 கிலோ எள்ளை ஆட்டுறேன். பத்து கிலோ எள்ளுக்கு ஒரு கிலோ வெல்லம்கிற கணக்குல சேர்த்து ஆட்டுனா... 60 லிட்டர் எண்ணெயும், 100 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். ஒரு லிட்டர் நல்லெண்ணெயை 310 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு கிலோ எள்ளுப்பிண்ணாக்கு 50 ரூபாய் வரை விற்பனையாகுது.

கடலையைத் தினமும் 108 கிலோ அளவுக்கு ஆட்டுவேன். கடலை ஆட்டுறப்போ மட்டும் பதமா தண்ணீர் தெளிக்கணும். 108 கிலோ கடலையை ஆட்டுனா, 70 லிட்டர் எண்ணெயும், 90 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெயை 180 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்றேன். கடலைப் பிண்ணாக்கு ஒரு கிலோ 45 ரூபாய் வரை விற்பனையாகுது..."

- , விவசாயிகள் பலரும் தற்போது மரச்செக்குகள் அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பைங்கிணர் கிராமத்தைச் சேர்ந்த கோபால், மரச்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார். அவர் நம்மிடம் பகிர்ந்தவையே 'மணம், சுவை, ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!' எனும் பகுதி. 

"தென்னையில சமீபகாலமா வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிச்சுட்டுருக்கு. இந்த ஈக்கள் தென்னங்கீற்றுகள்ல இருக்குற பச்சையத்தை உறிஞ்சிடுறதால, ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு மரங்கள்ல காய்ப்பு குறையுஞ்சுடுது. இயற்கை வேளாண்மை செய்ற தோப்புகள்ல களைச்செடிகளை உயிர் மூடாக்கா விடுறோம். களைச் செடிகள் இருக்கும் தோப்புகள்ல வெள்ளை ஈக்களால தென்னைக்குப் பாதிப்பு இல்லை. என் தோப்புலயும் களைகளை எடுக்குறதில்லை. அதனால, வெள்ளை ஈ தாக்குதல் குறைஞ்சுருக்கு. ஜீவாமிர்தம், வேஸ்ட் டீகம்போஸர் ரெண்டையும் மாத்தி மாத்தி பாசனத் தண்ணீர்ல கலந்து விடுறதால தென்னையில நல்ல மகசூல் கிடைக்குது. ஒரு மரத்துல வருஷத்துக்கு 180 காய்கள் வரை கிடைக்குது..." 

- மாத வருமானம் தரும் தென்னை, வைப்பு நிதிப் பயிராக விளங்கும் மரங்கள், பால் மற்றும் இடுபொருள் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் நாட்டுப்பசு, அதற்கான தீவனப்புல் வயல், விசாலமான களத்து வாசல் கொண்ட கச்சிதமான பண்ணை வீடு என அம்சமாக இருக்கிறது, இயற்கை விவசாயி தண்டபாணியின் தோட்டம். இவரது செயல்பாடு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இது தொடர்பான முழுமையான அனுபவப் பகிர்வுதான் 'மரப்பயிர்கள்... மதிப்புக்கூட்டல்... அசத்தும் முன்மாதிரி விவசாயி! - வெள்ளை ஈக்களை விரட்டிய களைகள்!'

பயறு வகைகளைப் பெரும்பாலும் பருப்பாக உடைத்துத்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். அவை, தகுந்த ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும். இவற்றை ஏற்றுமதி செய்ய ‘அபீடா’வின் அனுமதி அவசியம். பொதுவாக 25 கிலோ அளவில் பைகளில் அடைத்துத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளை, நமது நாட்டின் விற்பனை விலையை விட 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக விலை வைத்து ஏற்றுமதி செய்ய முடியும்...

கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட்: சி.எச்.ஏ(CHA) என அழைக்கப்படும், ‘கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட்’ என்பவர், கஸ்டம்ஸ்க்கும் ஏற்றுமதியாளருக்கும் இடையே உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைத் தயார் செய்து, முறைப்படி பதிவு செய்பவர். இவர் கஸ்டம்ஸ்-ஏற்றுமதியாளருக்கிடையே பாலமாக இருந்து செயல்படுபவர். சர்ட்டிஃபிகேட், ஆவணங்கள் போன்றவற்றைக் கஸ்டம்ஸில் பதிவு செய்வதற்கும் வாங்குவதற்கும் கட்டணம் உண்டு. மொத்தத்தில் ஃபிரி ஷிப்மென்ட்டில் 15 ஆவணங்கள் தேவைப்படும். இவற்றில் 8 ஆவணங்களை ஏற்றுமதியாளர் தயார் செய்ய வேண்டும். மற்ற 7 ஆவணங்களைக் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட் தயார் செய்து தருவார்...

- பருப்பு வகைகளுக்குப் பலமான வாய்ப்பு, கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், “தக்காளி பவுடர் தயாரிக்கும் எந்திரம் எங்கு கிடைக்கும்?” போன்றவற்றுக்கு விளக்கம் தருகிறது 'அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்!' தொடர் பகுதி.

இந்த பசுமை விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2FWuPDg