`பெரிய இன்ஜின், ஏர்பேக், ஏபிஎஸ்..!’ - வருகிறது மஹிந்திராவின் புது தார் | Mahindra Thar to get new bigger engine

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (30/01/2019)

கடைசி தொடர்பு:17:20 (30/01/2019)

`பெரிய இன்ஜின், ஏர்பேக், ஏபிஎஸ்..!’ - வருகிறது மஹிந்திராவின் புது தார்

ஃபோர்ஸ் குர்காவுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ் வருகிறது...

மஹிந்திரா அடுத்த தலைமுறை தார் ஜீப்பை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்போகிறது. புதிய தார், 2.0 லிட்டர் பிஎஸ்-6 டீசல் இன்ஜினுடன் வரப்போகிறது. தற்போது இருக்கும் 2.5 லிட்டர் இன்ஜின், 105bhp பவர் மற்றும் 247Nm டார்க் தருகிறது. புதிய இன்ஜின் 140bhp பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்தும் எனத் தெரிந்துள்ளது. 

மஹிந்திரா தார்

ஃபோர்ஸ் குர்காவுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ் கொடுக்க இருக்கிறது மஹிந்திராவின் புதிய 2.0 லிட்டர் இன்ஜின். இதே இன்ஜின் 180bhp பவர் உடன் புதிய XUV500-ல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர் மட்டுமில்லாமல் டிரைவிங் மற்றும் சொகுசிலும் அடுத்த தலைமுறை தாரில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தாரின் கம்பீரம் மாறாமல் மாடர்ன் அம்சங்கள் இதில் இணைந்திருக்கும் என்றும் நம்பலாம். 

Mahindra Thar

ஸ்கார்ப்பியோ மற்றும் TUV கார்களின் Gen 3 சேஸி இதில் வரவுள்ளது. இதன் வீல் டிராவல் பழைய சேஸியைவிட 10 சதவிகிதம் குறைவாகவே இருக்கும் என்பதால் ஆஃப் ரோடு டிரைவிங் முன்பைவிட சிறப்பாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. 

Thar

பாதுகாப்பைப் பொருத்தவரை அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே கார் இருக்கும் என்பதால் இதில் டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர்பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை கட்டாயமாக இருக்கும். ஏப்ரல் 1 முதல் ஏபிஎஸ், அக்டோபர் 1 முதல் கிராஷ் டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் புதிய தார் விற்பனைக்கு வரும்வரை தற்போதைய மாடலின் விற்பனை நிறுத்தி வைக்கப்படலாம்.